நல்லநேரம் முடியப் போகுது?

தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை.. மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7,454 பேர் வேட்புமனு தாக்கல்.. சென்னையில் மட்டுமே 600-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 போலீசாருக்கு மரண தண்டனை.. அதிமுக ஆட்சியில் நாட்டையே உலுக்கிய வழக்கில் மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்புBest ஆக இருந்த புதுச்சேரி என்டிஏ ஆட்சியில் Worst ஆக மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.. ரங்கசாமியும் எடப்பாடி பழனிசாமி போன்று அடிமையாகி விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சனம்புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தேர்தல் பரப்புரை இன்றோடு நிறைவு.. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம்.திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என இன்சைடு எலெக்‌ஷன் கருத்துக் கணிப்பில் தகவல்.. விருப்பமான முதலமைச்சர்களில் 44 சதவீத ஆதரவோடு மு.க.ஸ்டாலின் முதலிடம்.ரூ.1,048 கோடி சொத்துகளுடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளரானார் லீமா ரோஸ்.. லாட்டரி அதிபரான கணவர் மார்டினுக்கு ரூ.4,149 கோடி அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாக தகவல்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமாரை பதவி நீக்க கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிப்பு.. மக்களவை சபாநாயகரை தொடர்ந்து, மாநிலங்களவைத் தலைவராலும் நிராகரிக்கப்பட்டதால் அதிர்ச்சிஹார்மூஸ் நீரிணையை திறந்துவிட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் கெடு.. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என ஈரான் பதில்.





 

மோடி அரசு.. தோல்வியரசு
மேற்குஆசியப் போர்ச் சூழலைக் காரணம் காட்டி, நாட்டில் சமையல் எரிவாயு விநியோகச் சங்கிலி முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ள நிலை யில், ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என மோடி அரசு பாடும் மாய்மாலப் பாட்டுக்கும், யதார்த்த நிலைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும்  உள்ள வித்தியாசம் உள்ளது. 

தில்லி போன்ற பெருநகரங்களில் சமையல் எரிவாயு தட்டுப் பாட்டால் உணவகங்கள் மூடப்படுவதும், வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதும் மோடி அரசின் இராஜதந்திர மற்றும் நிர்வாகத் தோல்வியின் உச்சமாகும்.தில்லி அரசு நாள்தோறும் 1,14,679 சிலிண் டர்கள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், 1,31,335 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்களை அடுக்கி வருகிறது.

 ஆனால், 90,000 டன் தினசரித் தேவையைக் கொண்ட ஒரு நாட்டில், ஈரானின் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஒரு சில கப்பல்கள் கொண்டு வரும் 20,000 டன் எரிவாயு என்பது யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்றதே. ஒரு சிலிண்டர் கிடைப்பதற்குச் சராசரியாக 4.24 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. 

அரசின் இந்தக் கண்துடைப்புப் புள்ளிவிவரங்கள், தில்லி ரயில் நிலையத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பக் காத்தி ருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பசியைத் தீர்க்கப் போவதில்லை.

உணவகங்கள் மூடப்பட்டதால் வேலை யிழந்து, எரிவாயுத் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கும் நிலக்கரிக்கும் தள்ளப்பட்ட தொழி லாளர்கள், இன்று தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கி யுள்ளனர்.

 5 கிலோ சிலிண்டர் போன்ற வெற்று அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இவை கறுப்புச் சந்தையில் விற்கப்படும் கூடுதல் விலை சிலிண்டர்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை

சர்வதேச அளவில் நிலவும் எரிவாயு போக்கு வரத்து முடக்கத்தால் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களுக்கு 40,484 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனக் கவலைப்படும் மோடி அரசு, வேலையிழந்த தொழிலாளர்களின் வாழ்வா தார இழப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

சர்வதேசச் சூழலை இராஜதந்திர ரீதியாகக் கையாண்டு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டிய ‘விஸ்வகுரு’, இன்று மக்களை விறகு அடுப்பிற்கும் நிலக்கரிக்கும் பின்னோக்கித் தள்ளிவிட்டார். 

விறகு அடுப்புப் புகைக்கும், கறுப்புச் சந்தைக்கும், வேலையிழப்பிற்கும் ஏழை மக்களைத் தள்ளிவிட்ட மோடி அரசின் இந்தச் செயல், ஒரு திட்டமிட்டப் பொருளாதாரத் தாக்குதலேயாகும்.

நல்லநேரம் முடியும் முன் வாங்குங்க!


வேட்பு மனுத் தாக்கல் இன்று (06-04-26) கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


இதனால் இன்று மாநிலம் முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.


இந்த நிலையில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (06-04-26) காலை 11 மணிக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.

அதே போல் திமுக வேட்பாளரும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி.செந்தில் குமார் அதே தொகுதியில் போட்டியிடுவதற்காக 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.


ஆனால் சில சுயேட்சை வேட்பாளர்கள் காலை 11 மணிக்கே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தால் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது.


இதற்கிடையில் 12 மணிக்கு வரவிருந்த ஐ.பி.செந்தில் குமார் 11:30 மணிக்கே வந்தார். ஆனால் 11 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் 12 மணியளவில் வந்தார்.


இவர்களுக்கு முன்னதாக வந்த சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துக் கொண்டிருந்தனர். இதனால், அலுவலகத்திற்கு வந்த ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை அறைக்கு வெளியே சிறிது நேரம் போலீசார் நிறுத்தி வைத்தனர்.


அப்போது திண்டுக்கல் சீனிவாசன், ‘நல்ல நேரம் போய்விடும், என்னை உடனே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்’ என அங்கிருந்த பெண் போலீசார் உள்ளிட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


ஆனால் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளே வேட்புமனுத் தாக்கல் செய்து கொண்டிருந்ததால் அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.


இருப்பினும், திண்டுக்கல் சீனிவாசனும் அவருடன் வந்த அதிமுக நிர்வாகிகளும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது திண்டுக்கல் சீனிவாசனை திமுக வேட்பாளர் செந்தில் குமார் சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இதையடுத்து முதலில் வந்தவர் என்ற அடிப்படையில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை போலீசார் அறைக்கு உள்ளே செல்லுமாறு அனுமதித்தனர்.


இதில் அதிர்ச்சியடைந்த திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் போலீசாரிடம் மல்லுக்கட்டினார். அதன் பின்னர், நல்ல நேரம் போய்விடக்கூடாது என்பதற்காக போலீசார் நின்றிருந்த பக்கம் செல்லாமல் வேறு வழியாக சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் நுழைந்து தி.மு.க. வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யயும் போதே தனது வேட்பு மனுவையும் வாங்கிக் கூறி வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை