நரகக் குழிகள்?
அமெரிக்க அவமானம்!
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் வேலை தேடியோ குடியுரிமை பெற வேண்டும் என்றெல்லாம் போராடிய காலங்கள் உண்டு.
ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்த வெளியேறவே பலரும் முயல்வதாகவும் விரும்புவதாகவும் கார்னகி என்டோவ்மென்ட் என்ற சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 54 லட்சம் இந்தியர்கள் (அமெரிக்காவின் மக்கள்தொகையில் 1.6 சதவிகிதம்) வசித்து வரும்நிலையில், அவர்களில் 40 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
அவர்களிலும் 14 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு உடனடியாக வெளியேற விரும்புவதாகவும், 26 சதவிகிதத்தினருக்கு அமெரிக்காவைவிட்டு வெளியேறும் எண்ணம் அவ்வப்போது வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக, அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல், டிரம்ப்பின் இரண்டாது பதவிக்காலத்தில் அவரின் சரியில்லாத செயல்பாடுகள்தான் காரணம் என 71 சதவிகிதத்தினர் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, விலை உயர்வு, வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களை மேற்கோள் காட்டி நிதி நெருக்கடி ஏற்படுவதாக 54 சதவிகிதத்தினரும், பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக 41 சதவிகிதத்தினரும் கூறுகின்றனர்,
இதனிடையே, அமெரிக்காவில் இந்தியர்கள் குடியேறுவதை டிரம்ப் விரும்பாத நிலையில், இந்தியர்களும் சீனர்களும் நரகத்தின் குழிகள் என்று சமீபத்தில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தியர்கள், அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, பிறப்புரிமைக் குடியுரிமை பெற்று விடுவதாகவும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகவும் டிரம்ப் தனது சமூகவலைதளத்தில குறிப்பிட்டிருந்தார்.
கடன் வாங்குவதில்
ஒரு தொலைநோக்குப் பார்வை!
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில், மாநில மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் நலன்களுக்காக செயல்படும் இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக் கடன் வழங்கப்படுகின்றன.
இதேபோல், சுயஉதவிக் குழுக்களுக்கும் தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2024-25-ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 17 லட்சத்து 37 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 500 கோடி கடன் வழங்கப்பட்டது.
தற்போது, சட்டசபை தேர்தல் வந்ததால் கடன் வழங்குவதில் தாராளம் காட்டப்பட்டுள்ளது.
அதாவது, 2025-26-ம் ஆண்டில் 18 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 100 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.600 கோடி அதிகம் ஆகும்.
தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைப்பவர்கள் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மற்றும் சுயஉதவிக்குழுவினர் பலர்கடன்வாங்கியிருப்பதாககூறப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து வணங்கிய ஆந்திர பக்தர்கள்.
கோவில் முழுக்க செங்கல் குப்பை.அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் செங்கற்களை அகற்றினர்.








