தேர்தல் நி(க)லவரம்!

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

* தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. உதயநிதி ஸ்டாலின், வேலூரில் பேசியபோது, இன்றைக்கு பா.ஜ.க., ஏ.பி.சி என்று பட டீம்களை இறக்கி இருக்கிறார்கள்.
எத்தனை டீம் வந்தாலும் வெல்லப்போவது நம்ம தி.மு.க. டீம் தான். நம்மதான் மீண்டும் சாம்பியன் என்று பேசியுள்ளார். 

* சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நேற்று (ஏப்ரல் 1) திருத்தணியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 


* தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.முக. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம், சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திடீர் முடிவாக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

* சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்


* கேரளாவில் வரும் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபானக் கூடங்கள் செயல்படாது
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


* ஏப்ரல் 6 ஆம் தேதி ராகுல் காந்தி புதுச்சேரி வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்ய உள்ளார்.
 


* தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பயணித்த கார் எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவரின் காலில் ஏறியதில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்த நிலையில், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


* மோடியின் புதுச்சேரி வருவதை ஒட்டி அனைத்து வகையான மதுபான மற்றும் சாராயக் கடைகளை நாளை இரவு 8 மணி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

* சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தை த.வெ.க தொண்டர்கள் தொடர்ந்து விரட்டி வரும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


* ஈரோட்டில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சி பா.ஜ.க-வின் கிளைச் செயலாளராக உள்ள இ.பி.எஸ்கு எரிச்சலை தருகிறது. என்னடா கால்களை எல்லாம் வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். இந்த தி.மு.க-வும் ஸ்டாலினும் நம்மை ஒரு தேர்தலிலும் வெற்றி பெற விடவில்லை என்ற பொறாமையில் பொய்யை பரப்புகிறார்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கா?” என்றார்.

* தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய இன்று இரவு காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. ராகுல்காந்தி, கார்கே, சோனியா காந்தி, செல்வபெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


* வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க உதயநிதி ஸ்டாலின், பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். 


* பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், தேர்தலில் போட்டியிட கோவை வடக்கு தொகுதி கிடைக்காததால், பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் களமிறங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி வலியுறுத்தியும் அதை ஏற்க மறுத்த அண்ணாமலை, பரப்புரை மட்டும் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


* திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை 9 மணிக்கு ஈரோட்டில் உள்ள சித்தோடு பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

*கடந்த 2020-ம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலால் இருவரும் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மிக முக்கிய சாட்சியங்களாகத் திகழ்ந்தனர். 

இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விரிவாக விசாரிக்கப்பட்டன. சுமார் 6 ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் தள்ளுபடி செய்தன.  கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

மேலும், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் மார்ச் 30 அன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இந்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் தண்டனை விதிப்பதற்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் நடைபெறுகிறது. அப்போது, காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் காவல்நிலைய மரண வழக்குகளில் இதற்குமுன்பு தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. 

,* திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய், திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்தில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பாலக்கரை அலுவலகத்திற்கு வந்த விஜய் நல்ல நேரத்திற்காக காத்திருந்து 12:30 மணிக்கு மேல் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கிய அதே இடத்தில் இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.



* அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய