அம்பலமான சதிகளும்

தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது தேர்தல் பரப்புரை. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு.மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற உத்தரவு. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.சிறப்பான ஆட்சி நடத்தும் ஸ்டாலினை போல் மற்றொரு தலைவர் கிடைக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே மு.க.ஸ்டாலின் பாடுபடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டம். அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளதாகவும் ஸ்ரீவைகுண்டம் பரப்புரையில் விமர்சனம்அன்புமணியின் துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாமென ராமதாஸ் வேண்டுகோள். பணத்துக்காக அணி மாறி கொள்கையற்ற கூட்டத்தில் இணைந்திருப்பதாகவும் விமர்சனம்சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க களமிறக்கப்பட்டவரே விஜய் என திருமாவளவன் குற்றச்சாட்டு. தோல்வி பயம் காரணமாகவே இரண்டு இடங்களில் போட்டியிடுவதாகவும் விமர்சனம்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆதரவு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைப்பார் என்றும் உறுதி.சினிமா பளபளப்பால் மட்டும் தலைவராக முடியாது என விஜய் பற்றி கமல்ஹாசன் விமர்சனம். 2 தொகுதிகளில் போட்டியிடுவது வாக்காளர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் கடும் தாக்கு.வேட்பு மனுவில் 100 கோடி ரூபாய் சொத்தை விஜய் குறைத்து காண்பித்தது முறைகேடு என உயர்நீதிமன்றம் கருத்து. பெரம்பூர் வாக்காளர் தொடர்ந்த வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவுசட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல். புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை மறுநாள் வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு.





பெண்கள் இடஒதுக்கீடு

மோடி அரசின்

திரைமறைவு நாடகமும் அம்பலமான சதிகளும்

                                - ஜி.ராமகிருஷ்ணன்

இந்த அரசியல் சாசனத் திருத்தம் நடை முறைக்கு வந்த பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட பின்னரே, பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். அவ்வாறு வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலாகும்.”


ஏப்ரல் 17-ஆம் தேதி மக்களவையில் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு அரங்கேறியது. மகளிர் இட ஒதுக்கீட்டை பணயமாக உள்வைத்துக் கொண்டு வரப்பட்ட நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை அரசியல் சட்டத் திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியுற்றது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ஆம் தேதி மாலை கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும், அன்று இரவு காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் வெறும் அரசியல் வித்தைகளே. தனது உரையின் மூலம் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைத்ததோடு, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.


இந்தப் பிரச்சனையில் பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான அரசும் நேர்மையாகவோ, வெளிப்படையாகவோ அல்லது ஜனநாயகப் பூர்வமாகவோ நடந்து கொள்ளவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சற்று பின்னோக்கிச் சென்றால் மோடி நடத்திய நாடகம் துல்லியமாகப் புரியும்.


சட்டமும் அதன் தந்திரமான முட்டுக்கட்டையும்

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற மசோதா 20-09-2023 அன்று மக்களவையிலும், 21-09-2023 அன்று மாநிலங்கள வையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

ஆற்றலை பிரிவு களைக் கொண்ட இச்சட்டத்தில் பிரிவு ஐந்து மிக முக்கியமானது. அந்தப் பிரிவு (334A) கூறுவதாவது: “இந்த அரசியல் சாசனத் திருத்தம் நடை முறைக்கு வந்த பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் வெளி யிடப்பட்ட பின்னரே, பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். அவ்வாறு வெளியிடப் பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தொகுதி கள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலாகும்..


” அதாவது, உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக நீதியை, எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைத்து முடக்கிப் போட்டது மோடி அரசு. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரை யறைக்குப் பிறகுதான் இட ஒதுக்கீடு வரும் என்பது பெண்களை ஏமாற்றும் செயலன்றி வேறல்ல. இங்குதான் கேள்வி எழுகிறது.


2023-இல் செய்யப்பட்ட அரசியல் திருத்தச்சட்டம் கூறியுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தொகுதி மறு வரையறையையும் ஏன் மோடி அரசு இதுவரை செய்ய வில்லை? 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொ ரோனா பாதிப்பு இருந்ததால் கணக்கெடுப்பு நடத்தி யிருக்க முடியாது என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்கலாம்.


ஆனால், நிலைமை சீரான 2022-லோ அல்லது 2023-லோ ஏன் அதை நடத்தவில்லை? உண்மை என்னவென்றால், மோடி அரசாங்கத்திற்கு மக்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியை ஆய்வு செய்வதில் துளியும் விருப்பம் இல்லை.


மதரீதி யில் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்ட பாஜக, உண்மையான புள்ளிவிவரங்க ளை வெளிக்கொணரும் மக்கள் தொகை கணக்கெ டுப்பைச் செய்திடத் தயாராக இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை வல்லுநர்களின் பரிந்துரை களைக் கூட ஏற்க அவர்கள் முன்வரவில்லை.


இடதுசாரிகளின் நிலைப்பாடும் அரசின் மௌனமும்

2023-ஆம் ஆண்டு மகளிர் மசோதா விவாதிக் கப்பட்ட போதே இடதுசாரி கட்சிகளான சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் ஆர்எஸ்பி ஆகியன, இந்த இட ஒதுக்கீட்டை 2024 மக்களவைத் தேர்தலிலேயே அமலாக்க வேண்டுமென்று வலுவாக வலியுறுத்தின.


மேலும் பட்டியல் மற்றும் பழங்குடியின பெண்க ளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை யும் உறுதிபடக் கூறின. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் அவர்களும் 2024-லேயே இதனை அமலாக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.


ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்தால்தான் முடியும் என அரசு பிடிவாதம் காட்டி யது. இதற்காகவே ‘பிரிவு 5’ சட்டத்தில் தந்திரமாகச் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென 2026 ஏப்ரல் 9 அன்று பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த வேண்டுமெனப் பிரதமர் எழுதிய கட்டுரை ஆங்கில நாளேடுகளில் வெளியானது.


அதில் மக்க ளவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவது பற்றியோ, தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது பற்றியோ மூச்சுக்கூட விடவில்லை.


ஏப்ரல் 2-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொ டர் முடிந்த நிலையில், ஏப்ரல் 16, 17, 18 தேதிகளில் சிறப்பு கூட்டம் நடைபெறும் எனச் சபாநாயகர் அறி வித்தார். இந்தச் சதித்திட்டத்தை மார்ச் இறுதியி லேயே அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.


மசோதா வின் நகல் உறுப்பினர்களுக்கு 16-ஆம் தேதிதான் முறை யாக வழங்கப்பட்டது.


அரசியல் ஆதாயமா? சமூக நீதியா?

மோடி அரசின் நோக்கம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல; மாறாக, அதை எப்படி அரசியலாகப் பயன்படுத்துவது என்பதுதான். 2023-இல் ஏகமனதாக ஆதரிக்கப்பட்ட ஒரு சட்டத்தை அமலாக்க ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை?


பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் தொகுதி மறுவரையறையையும் ஒரே மசோதாவில் பிணைத்து ஒரு மோசடியான நோக்கத்தில் சமர்ப்பித்தார்கள். எதிர்க்கட்சிகள் இவற்றைத் தனித்தனி மசோ தாக்களாகக் கொண்டுவரக் கோரியும் அமித்ஷா ஏற்கவில்லை.


2011 மக்கள் தொகை அடிப்படையி லேயே மறுவரையறை நடக்கும் என்றும், தென் மாநி லங்கள் பாதிக்கப்படாது என்றும் அவர்கள் கூறிய வாய்மொழி உறுதிமொழிகளை யாரும் நம்பத் தயாராக இல்லை.


காரணம் பாஜக தலைமை நம்பக மற்றது. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தருவோம் என்று உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியையே காற்றில் பறக்க விட்டவர்கள் இவர்கள் என்பது நாடறியும்.


தேர்தல் நடத்தை விதிமீறல்: தூர்தர்ஷன் முறைகேடு

மசோதா தோல்வியுற்றதும், பிரதமர் தனது அதிகா ரத்தைத் துஷ்பிரயோகம் செய்யத் துணிந்து விட்டார். ஏப்ரல் 18 அன்று அவர் ஆற்றிய உரை முற்றி லும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.


இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு 19-04-2026 அன்று அவசரப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை ஊடகமான தூர்தர்ஷனைப் பயன்படுத்திப் பிரதமர் ஆற்றிய உரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளின் (MCC) நேரடி மீறல் என்று கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ.பேபி தனது புகாரில் சுட்டிக் காட்டியுள்ளார்.


தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசு செலவில் எதிர்க்கட்சி களை விமர்சிப்பதும், ஆளும் கட்சியின் பிரச்சா ரத்திற்காகப் பொது ஊடகத்தைப் பயன்படுத்துவதும் விதிமுறை மீறலாகும். பிரதமரின் உரை எவ்விதத்தி லும் அரசு தொடர்பாக இல்லை;


அது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகவும், எதிர்க்கட்சிகளைப் பெயரிட்டுத் தாக்கும் விதமாகவும் அமைந்திருந்தது. இது ஜனநாயகத்தின் அடிப்படையான ‘சமமான வாய்ப்பு’ (Level Playing Field) என்ற தத்துவத்தைச் சிதைப்பதாக அமைகிறது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை பலம் இல்லாததால் மசோதா வீழ்ந்த பிறகு, கோவையில் ஒரு நாலாந்தர பேச்சாளரைப் போல எதிர்க்கட்சிகளை வசைபாடியிருக்கிறார் பிரதமர்.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்களில் இப் பிரச்சனையை அரசியல் ஆதாயமாக்கலாம் என்ற அவரது நப்பாசை ஒருபோதும் நிறைவேறாது.


ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஹிட்லர் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றினார் என்பது உலகிற்குத் தெரியும்.


ஹிட்லரின் பாசிசப் பாதையில் செல்லத் துடிக்கும் நரேந்திர மோடிக்கு இந்திய மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை