முதலில் குஜராத்தைக் காப்பாற்றுங்கள்...

தேர்தல் நிலவரம்















குஜராத்தைக் காப்பாற்றாதவர்கள் தமிழ்நாட்டைப் பாதுகாப்பார்களா?

தமிழ்நாட்டைத் தாரைவார்க்க வந்திருக்கும் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் வானத்தை வில்லாக வளைப்பதாக வாயால் வடை சுடுகின்றனர். 

ஆனால், அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தின் இன்றைய லட்சணம் என்ன? ஈரான் போர் விளைவால் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டால் சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு வருகின்றனஇதனால் சுமார் 2.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரமின்றித் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.

 சொந்த மாநிலத்திலேயே தொழில்களையும் தொழிலாளர்களை யும் பாதுகாக்கத் துப்பில்லாதவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து ஏதோ நல்லது செய்யப்போவதாகப் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?

 குஜராத்தையே காப்பாற்ற முடியாத இவர்களின் ‘குஜராத் மாடல்’ என்பது வெறும் வெற்று விளம்பரம் என்பது இப்போது உலகிற்கே தெரிந்துவிட்டது. 

தம் மாநில மக்களையே நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் பா.ஜ.க தலைவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று சொல்வதை விட நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது!


அமெரிக்காவை வெளியேற்ற

அரபு நாடுகள் முடிவு.?

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த போதிலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா.


இந்த தாக்குதல்களை, வளைகுடா நாடுகளில் உள்ள தங்களது ராணுவ தளங்களிலிருந்து நடத்தியது அமெரிக்கார். இதைத் தொடர்ந்து, தயாராக இருந்த ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியது.

ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்க்காத விதமாக, வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான்.

ஏனென்றால், அங்கிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த முடியாது. அதேபோல், இஸ்ரேல் மீது முழு அளவிலான தாக்குதல்களை நடத்த முடியாது. அதனால், தனது யுத்தியை மாற்றிய ஈரான், கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் நாடுகளில் உள்ள எதிரிகளின் ராணுவ தளங்களை குறி வைத்து, அதாவது கத்தார், துபாய், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்களை நடத்தியது.


மேலும், போர் தீவிரமடைந்தபோது, அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள் மீதும், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் குறி வைத்தது ஈரான். இதனால் ஆடிப்போன அரபு நாடுகள், செய்வதறியாது தவித்து வருகின்றன.


ஹார்முஸ் ஜலசந்தியும் மூடப்பட்டதால், அங்கிருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலு, போரால் சுற்றுலாவும்  பாதிக்ப்பட்டதால், அரபு நாடுகளுக்கு பெரும் வர்த்தக நஷ்டமும் ஏற்பட்டது.


மொத்தத்தில், போர் என்னவோ, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இருந்தாலும், கண்கூடாக பாதிக்கப்பட்டது என்னவோ அரபு நாடுகள் தான்.


இத்தகைய சூழலில், 2 வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டதால் நிம்மதியடைந்திருந்த அரபு நாடுகள், அப்படியே நிரந்தர போர் நிறுத்தமும் ஏற்பட்டுவிடும் என்று எண்ணி இருந்தன. ஆனால், தற்போது முன்பை விட பெரிய போர் தொடங்கும் அளவிற்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.


இதனால் பீதியடைந்துள்ள வளைகுடா நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை மூடிவிட்டு, அமெரிக்காவை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல் குரல் ஒலித்துள்ளது. ஆம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி அமெரிக்கா தேவை இல்லை என்றும், எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மூட வேண்டும் என்றும், அந்நாட்டின் பிரபலமான அரசியல் விமர்சகரும், அரசியல் அறிவியல் பேராசிரியருமான அப்துல்காலெக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு காலத்தில் தேவைப்பட்டது போல், அமீரகத்தை பாதுகாக்க இனி அமெரிக்கா தேவை இல்லை என்றும், ஈரானிய தாக்குதலின் போது, தங்களால் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை அமீரகம் நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும், அமெரிக்காவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை பெற வேண்டும் என்றாலும், அதற்காக அமெரிக்க ராணுவ தளங்கள் இங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அதோடு, ராணுவ தளங்களைவிட, நவீன ராணுவ தளவாடங்களை பெறுவதே அமீரகத்தின் முன்னுரிமை என்றும் அவர் அப்துல்லா கூறியுள்ளார்.

இந்த தகவல்களால், தற்போது மத்திய

கிழக்கில் புதுவிதமான பதற்றம் ஏற்பட்டுள்ளது.



அமெரிக்கா இதை எப்படி சமாளிக்கும், ஒருவேளை அரபு நாடுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை