தென்றலை புயலாக்காதீர்!

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறையை கொண்டு வந்தால் மக்கள் மன்றத்தில் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் இன்னொரு முகத்தை பார்க்க நேரிடும் எனவும் ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்ற பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கண்டனம். தன்மானத்தின் மீது கைவைத்தால் டெல்லிக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் எனவும் எச்சரிக்கை.

தொகுதி மறுவரையறையால் நாடே இரண்டாக பிளவுபடும் என தமிழக அரசியல் தலைவர்கள் அச்சம். தென் இந்தியாவை வஞ்சிக்கும் பாஜக அரசின் சூழ்ச்சி எனவும் கண்டனம்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக முக்கிய முடிவெடுக்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்புவாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே உள்ளதால் தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரை. உணவகங்களில் சமைத்தும், காய்கறி விற்றும் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.இந்த தேர்தலை அதிமுக, புதுப்பொலிவுடன் சந்திப்பதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு. 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் எனவும் உறுதி.தமிழ்நாட்டில் பாஜக வலுப்பெற அதிமுக வழிவகை செய்வதாக திருமாவளவன் விமர்சனம். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் அதிமுக தேய்ந்து பாஜக வளரக்கூடும் எனவும் எச்சரிக்கை.கோவை அருகே கணியூர் சுங்கச்சாவடியில் பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு. விஜய்யை வரவேற்கச் சென்று கூட்டத்தில் சிக்கியபோது நகையை பறிகொடுத்தார். பிரிவினைவாத அரசியலை தூண்டும் பாஜகவுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பரப்புரை செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சூளுரை.ஜெயலலிதா இருந்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்ததாக சசிகலா விமர்சனம். எல்லை மீறி ஆட்டம் போடுபவர்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் எச்சரிக்கை.திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சாலையோர மரத்தில் பேருந்து மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு... 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு.பீகார் மாநில புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்பு. பீகார் துணை முதலமைச்சர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் போட்டி.பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு. 40 நிமிடங்கள் நீடித்த உரையாடலில் எப்ஸ்டின் கோப்புகள், மேற்காசிய போர், ஹோர்முஸ் நீரிணை பற்றி பேசியதாக தகவல்.போலந்து நாட்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பன்றிக்கூட்டத்தை விரட்டிய ரோபோ. இயந்திர மனிதனுக்கு அஞ்சி வனப்பகுதிக்குள் ஓடிய பன்றிகள்.













தென்றலை புயலாக்காதீர்!

தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள் எனத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?

தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!

தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?

2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?

5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?

"நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?

எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?

தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.

இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!

நாங்கள் கேட்பது Fair Delimitation (நியாயமான வரையறை)” என தெரிவித்துள்ளார்.

இருபது மணிநேரம் உழைப்பு!

தேர்தல் நெருங்கி வருகிறது. அதிக நாட்கள் இல்லை. ஒரு வாரம் தான் இருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் குறித்த அதிக பளுவை சுமந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் உறங்குகிறார்.

20 மணி நேரமும் தேர்தல், பிரச்சாரம், தொகுதிகளின் நிலவரம் குறித்த விசாரணை என ஒரே சிந்தனையில் தான் செயலாற்றி வருகிறார் என்கின்றனர் விபரமறிந்த உடன்பிறப்புகள்.தமிழகத்தை சென்னை, வடக்கு, மேற்கு, டெல்டா மற்றும் தெற்கு என மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் நிலவரம் என்ன? என்பது பற்றி தினமும் விசாரணை நடத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த மண்ட லங்கள் குறித்து தமக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் பலவீனமாக திமுக இருக்கிறது என சொல்லப்படுகிற ரிப்போர்ட்டை வைத்து அந்த பகுதிகளின் பொறுப்பாளர்களை ஃபோனில் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.


பதில் சொல்ல முடியாமல் திணறு கிறார்கள் பொறுப்பாளர்கள்.

சமீபத்தில், டெல்டா மாவட்டங்களில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் திமுகவுக்கு பாதகமா?சாதகமா? என பொறுப்பாளர் களிடம் விசாரித்துள்ளார்.


அப்போது, திமுகவுக்கு சாதகம் தலைவரே. முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக பக்கம் போகாமல் சசிகலா தடுப்பதால், அது, நமது வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.


நிர்வாகிகள் சிலர், "தலைவரே... டெல்டாவில் சசிகலா தரப்பினர் வேட்பாளர்களை நிறுத்துவது நமக்கு செம ப்ளஸ். அதிமுக-வுக்கு விழ வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள்.


இதனால் அதிமுக பலவீனப்படும், நாம் ஈஸியாக ஜெயித்துவிடலாம்" எனத் தெம்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை ஏற்க மறுத்த ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களுக்கு திமுக தான் அதிக திட்டங்களையும், அறிவிப்புகளையும் செய்திருக்கிறது.


முக்குலத்தோர் நமது ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார் கள். அப்படியிருக்க, சசிகலா தரப்பினர் களத்தில் நிற்பது, திமுகவுக்கு பாதகம் ஆகாதா? என்று எதிர்கேள்விக் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர்.


ஸ்டாலினின் 'எதிர்' கேள்வி!
நிர்வாகிகள் சொன்ன "வாக்கு பிரிப்பு" லாஜிக்கை சுக்குநூறாக உடைத்த ஸ்டாலின், "சசிகலா தரப்பு களத்தில் நிற்பது திமுக-வுக்குப் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லையா?" என்று எக்ஸ்ரே எடுத்தாற்போலக் கேட்க, பதில் சொல்ல முடியாமல் நிர்வாகிகள் சைலண்ட் மோடுக்கு மாறியுள்ளனர்.


"ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது!"
வெறும் கேள்வியோடு நிறுத்தாமல், டெல்டா பொறுப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்திருக்கிறார் முதல்வர்.


"டெல்டாவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்."

"திமுக ஆதரவு வாக்குகளில் ஒரு ஓட்டு கூட மாற்றுத் தரப்புக்கோ அல்லது எதிரணிக்கோ சென்றுவிடக் கூடாது."

"யார் ஓட்டைப் பிரிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; நம்மிடம் இருக்கும் வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்."


அதனால், டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். திமுக ஆதரவு வாக்குகளில் ஒர் ஓட்டுக்கூட எதிரணிக்குச் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கிறார் ஸ்டாலின்.


எதிரணியின் பலவீனத்தை நம்பி இருக்காமல், தனது பலத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் காட்டிய இந்தத் தெளிவு, டெல்டா உடன்பிறப்புகளை இப்போது அலர்ட் ஆக்கியிருக்கிறது.

ஈரன்... அமெரிக்க ராணுவம் முற்றுகை


மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க கடற்படை முற்றுகையை அமல்படுத்தியிருப்பது உலகளாவிய பொருளாதாரத்திலும், குறிப்பாக எண்ணெய் சந்தையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நடவடிக்கையால் எண்ணெய் விநியோகத்தில் தடைகள் ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன.

அசோசியேட்டட் பிரஸ் (AP) வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 8 சதவீதம் உயர்ந்து 104.24 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் 7 சதவீதம் உயர்ந்து 102.29 டாலராகவும் பதிவாகியுள்ளது.


மேலும், பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 70 டாலராக இருந்த விலை, மோதல் தீவிரமானபோது 119 டாலருக்கும் மேல் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் முன்னோட்டமாக, ஜூன் மாத விநியோகத்திற்கான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சிறிதளவு குறைந்து 95.20 டாலராக சரிந்துள்ளது.


உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கியக் கடல்வழியான ஹோர்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு இந்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.


தினசரி உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகவே நடைபெறுவதால், சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.


அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஈரானிய துறைமுகங்களுக்கு வரும் அல்லது அங்கிருந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை பாரபட்சமின்றி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஈரானிய அல்லாத துறைமுகங்களுக்கு இடையே பயணிக்கும் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் முழுமையான தடையில்லை என்றாலும், கடல் போக்குவரத்து மந்தமாகி, சரக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.


சமீப காலங்களில் இந்தப் பகுதியை கடக்கும் வர்த்தகக் கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் மட்டுமே இந்த வழித்தடத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரித்துள்ளதால், கப்பல் காப்பீட்டு செலவுகள் மற்றும் போக்குவரத்து கட்டணங்களும் உயரக்கூடும். இதன் விளைவாக, மத்திய கிழக்கு எண்ணெய் மீது சார்ந்திருக்கும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூடுதல் பொருளாதார அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஈரான் மீது முழுமையான கடல்வழி முற்றுகை அமலில் உள்ளது. இனி ஈரான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முடியாது. உலக நாடுகள் ஹோர்முஸ் ஜலசந்தியை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவிடம் போதுமான எண்ணெய் கையிருப்பு உள்ளது; நாடுகள் அமெரிக்காவை நோக்கி திரும்பலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரே நாளில் ஈரானை முழுமையாக செயலிழக்கச் செய்யும் திறன் அமெரிக்காவுக்கு உள்ளது. அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைப்புகளை ஒரு மணி நேரத்திற்குள் முற்றிலும் தகர்க்க முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்தக் கருத்துக்கள் சர்வதேச அளவில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. பல நாடுகள் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என கவலை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இரு நாடுகளும் தன்னடக்கம் காக்க வேண்டும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.


மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் இந்த பதற்றம் நீடித்தால், உலகளாவிய எரிசக்தி சந்தை மட்டுமல்லாது, பன்னாட்டு வர்த்தகம், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியிலும் தீவிர தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை