உண்மை என்ன?

 தேர்தல் வந்துடுச்சி!நெல்லை விரைவு ரயி​லில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட விவ​காரத்​தில் நயி​னார் நாகேந்​திரன் மற்​றும் கேசவ விநாயகம் மீது வழக்​குப்​ப​திய அமலாக்​கத் துறைக்கு உத்​தர​விடக்​கோரி திமுக எம்​.பி. கிரி​ராஜன் தொடர்ந்த வழக்கை தள்​ளு​படி செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.தேர்தல் நாளில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 26-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை வெப்பம் அதிகரிக்கும்.வானிலை மையம் அறிவிப்பு.2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது முதல் இந்த ஆண்டு மார்ச் 30 வரையிலான காலகட்டத்தில், மணிப்பூரில் மொத்தம் 58,821 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் மசோதா ஒன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புகைப்பழக்கமில்லா தலைமுறையை உருவாக்க இந்தப் புதிய சட்டம் ஏற்றப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக வேட்பாளர் அர்ச்சுணன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி புலியூரில் அதிமுக வேட்பாளர் திவ்யாக்கு ஆதரவாக குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்ட பறக்கும் படையை கண்டதும் சம்பந்தப்பட்டவர்கள் குக்கர்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். தப்பிடியோடியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி நேபாள பிரதமராக 35 வயதான பாலேந்திர ஷா பதவியேற்றார்.ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் கூட பூர்த்தியாகாத நிலையில் மக்களின் எதிர்ப்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் 100 ரூபாய்க்கு கூடுதலான மதிப்பு கொண்ட பொருட்களின் மீது கட்டாயச் சுங்க வரியை விதிக்கும் அரசின் முடிவு, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்புகளை தடை செய்யும் அரசின் கொள்கை மற்றும் உள்துறை அமைச்சர் சுதான் குருங் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் நிதி முறைகேடு காரணமாக அவர் பதவி விலக வேண்டியும் நேபாளத்தில் போராட்டம் நடைபெற்றது வருகிளது...
.பிஹார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரசு மருத்​து​வ​மனையில் வேலை பார்க்​கும் செக்​யூரிட்டி ஒரு​வர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது,
தேர்தல் பரப்புரை முடிந்த பிறகும் பரப்புரை மேற்கொண்ட குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின் மீது வழக்குப்பதிவு.


"உண்மையாக தெரியுமா"பிரதமரே?

"தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று உள்ளே வருகிறது. தி.மு.க. வெளியேறுகிறது” என்று கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருப்பதைப் படித்தபோது அவர் எத்தகைய கற்பனை உலகத்தில் வாழ்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் செல்வாக்கு என்ன என்பதை நயினார் நாகேந்திரனிடம் கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு, இந்த மாதிரி பேச வேண்டும் பிரதமர்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் அரசியல் வரலாறு என்ன என்பதை மாண்புமிகு பிரதமர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் 1989 தேர்தலில் 3 இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் கூட தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை.

பா.ஜ.க. முதன்முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் வென்று, சட்டசபைக்குள் நுழைந்தது.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க. அந்தக் கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட, 4 இடங்களில் பா.ஜ.க. வென்றது.

2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வென்றது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகளைஒதுக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 40 தொகுதிகளிலும்படுதோல்வி அடைந்தது.

2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பா.ஜ.க. 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை.

2011 சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. தனி அணியாகப் போட்டியிட்டது. 198 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.

2016 சட்டசபைத் தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டு 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பா.ஜ.க.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ஜ.க. இந்த முறையும் முழுமையாகத் தோற்றது. அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.

2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வென்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த - 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் டெபாசிட் போன கட்சிதான் பா.ஜ.க.. இதுதான் பா.ஜ.க.வின் தோல்விச் சரித்திரம் ஆகும்.

”கற்பனை உலகத்தில் வாழ்கிறார் மோடி.. இதுதான் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க” : முரசொலி கடும் விமர்சனம்!

இதையெல்லாம் வாங்கிப் பார்த்து இருந்தால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் பேசி இருக்க மாட்டார்.

ஒருவேளை பத்துத் தோல்வி பழனிசாமியை நம்பி, பிரதமர் இப்படி பேசு கிறாரா? 2019 முதல் நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர்தான் பழனிசாமி. இவரை எல்லாம் இன்னும் செல்வாக்கானவர் என்று நினைத்துக் கொள்கிறாரா பிரதமர்?

ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. வாங்கிய வாக்குச் சதவிகிதத்தை வைத்து, பழனிசாமியைக் கணிப்பது பெரிய அபத்தம். அன்றைய தினம் அ.தி.மு.க. வாங்கிய வாக்குகள் என்பவை, ஜெயலலிதா என்ற ஆளுமைக்காக கிடைத்தவை. அது எப்படி பழனிசாமிக்குக் கிடைக்கும்? தென் மாவட்டங்களுக்கு அவர் போனபோது அ.தி.மு.க. கொடியோடு கருப்புக் கொடியையும் சேர்த்து வைத்து பழனிசாமிக்குக் காட்டினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இதுதான் பழனிசாமி கால அ.தி.மு.க. ஆகும்.

2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்றது தி.மு.க. கூட்டணி. இது தெரியாமல், தி.மு.க. தோற்கும் என்று சொல்வது உண்மையை அறியாத பேச்சு அல்லவா?

அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் ஒன்று சேர்ந்ததே வெற்றி என்று பிரதமர் நினைப்பாரே ஆனால், அதற்கும் பதில் இருக்கிறது. இருவரும் சேர்ந்து நின்ற தேர்தலிலும் தோற்று இருக்கிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன. கூட்டணியாகத்தான் தோற்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்தனியாகப் போட்டியிட்டன என்பது உண்மைதான். இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வாங்கிய வாக்குகளைக் கூட்டிப் பார்த்தாலும் தி.மு.க. வாங்கியதை விட குறைவுதான். தி.மு.க. கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடுதான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. மாண்புமிகு மோடி அவர்கள் இந்தக் கணக்கை கேட்டு வாங்கிப் பார்க்கவும்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கணித்து அப்போதே 'தி இந்து' நாளிதழ் ஒரு கட்டுரை தீட்டியது.

“222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது” என்று ‘தி இந்து' ஆங்கில நாளிதழ் அதில் குறிப்பிட்டது. 32 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 192 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாக தி.மு.க. கூட்டணியே அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதுஎன்றும் சொல்லப்பட்டது.

மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின்படி 8 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. 3 தொகுதிகளில் பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க. எந்த சட்டமன்றத் தொகுதியிலும் கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை.

இது எதுவும் தெரியாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்வது, தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை