தேர்தல் நி (க)லவரம்!
தேர்தல்நி(க)லவரம்!
₹ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனமனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.
# அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று முதல் 10-ம் தேதி வரை, இக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
# விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் காரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.அப்போது, அமைச்சரின் கார் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டது என்று அங்கிருந்த அதிமுகவினர் -தி.மு.க,தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பாக மாறியது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
# தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், காட்பாடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரையில் aமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
# பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர்.
# தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
# அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் 2ம் கட்டம் விரைவில் முடிக்கப்படும் என வேட்புமனு தாக்கல் செய்தபின் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
# ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்தாங்க.. இன்னொரு பக்கம் கல்யாண விருந்து வைத்தே கூப்பிட்டாங்க; காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை என காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்
# வரும் 15ம் தேதி பிரதமரின் கன்னியாகுமரி பிரசாரத்தில் பங்கேற்க உள்ளேன் என வேட்புமனு தாக்கல் செய்த பின் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
₹ சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்
# தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா? கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
# புதுச்சேரியை மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும். துணைநிலை ஆளுநர் மட்டும் ஆட்சி செய்வதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு வேலைவாய்ப்புக்கான வயதுவரம்பு 40 ஆக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என புதுச்சேரி தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கூறினார்
₹ கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
# வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும்; அரசு மற்றும் தனியார் துறைகளில் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். புதுச்சேரி பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். அரசுப் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும். மேலும், புதுச்சேரியின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹20 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்,லாஸ்பேட்டை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி
# ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க சார்பில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தநிலையில், வினோத் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். தந்தையின் விருப்பத்திற்காக தொகுதியை மீண்டும் தந்தை வசமே வழங்கியுள்ளதாக வினோத் அறிவித்துள்ளார்
மதுரை: "திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம். எங்களின் வெற்றி வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்# சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேயர் பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
₹ புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நாதக சீமான்.
# ஏப்ரல் 9-இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று புதுச்சேரி லாஸ்பேட்டையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கிறார். ஏப்ரல் 9-ஆம் தேதிக்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இணைந்து தமிழகத்தில் பரப்புரை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
₹ குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும். சளி நின்றுவிடும். வயதானவர்களுக்கு மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பார்கள். நல்ல பெரிய விசிலை கொடுத்து, அடித்தீர்கள் என்றால் இதயம் நன்றாக பம்பிங் ஆகிவிடும்— செங்கோட்டையன்
₹ புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக, இன்று பிற்பகலில் சென்னை வருகிறார் அமித் ஷா. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.
₹ மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் L. வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்.
,# புதுச்சேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 5 மணியளவில் பரப்புரை மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்.30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரிக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாளையுடன் பரப்புரை நிறைடைகிறது.
₹ இன்று (ஏப்ரல் 06) சென்னையின் அண்ணா நகர், வில்லிவாக்கம், தி நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்க திட்டமிட்டு த.வெ.க. சார்பில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளுடன் வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதன் காரணமாக, விஜய் பிரசாரத்தை முழுமையாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.₹ திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவில் சோதனை நடத்தினர்.திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அந்த கல்வி நிறுவனத்தில் (இந்திரா கணேசன் கல்லூரி) கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
