100 க்கு 97 பெற்ற இந்தியா
😠 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்கதையாகியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு. மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலைகளில் போராட்டம் நடத்தியும் மக்கள் ஆவேசம்.
⚡ மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல். பவர் உங்கள் கையில் வந்திருக்கிறது, பவர் கட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்.
😤 குறிப்பிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடரும் மக்கள் போராட்டம். சட்டவிரோத மதுபான விற்பனையை அரசு தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு..
☹️😠 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்கதையாகியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு. மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலைகளில் போராட்டம் நடத்தியும் மக்கள் ஆவேசம்.
⚡ மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல். பவர் உங்கள் கையில் வந்திருக்கிறது, பவர் கட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்.
😤 குறிப்பிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடரும் மக்கள் போராட்டம். சட்டவிரோத மதுபான விற்பனையை அரசு தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு..
☹️ கோவையில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேரைப் பிடித்து விசாரணை. காவல்துறையினர் 2 நாட்களாக அலட்சியம் காட்டியதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்.
🤝🏼 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும். உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்.
🥵 தமிழ்நாட்டில் நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில். அதிகபட்சமாக ஈரோடு, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்தது.
கோவையில் காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேரைப் பிடித்து விசாரணை. காவல்துறையினர் 2 நாட்களாக அலட்சியம் காட்டியதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்.
🥵 தமிழ்நாட்டில் நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில். அதிகபட்சமாக ஈரோடு, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்தது.
கோவை: சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி தப்ப முயன்றபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நாங்கள் தூங்க வேண்டாமா?
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை இருப்பது பொதுமக்கள் இடையில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில்
திடீரென உண்டாகும் மின்வெட்டு காரணமாக பலரும் அவதியடைந்து வருகின்றனர். புதிதாக தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் மின்தடை பிரச்சனை சம்பந்தமாக முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனைக்கு தவெக அமைச்சரான நிர்மல்குமார், கடந்த திமுக ஆட்சியை குறை கூறி வருகிறார்.
இதற்கு விளக்கம் அளித்து வீடியோவில் எஸ்.எஸ். சங்கர் பேசியுள்ளதாவது, “தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பல இடங்களில் தொடர் மின்வெட்டு என்ற குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
அதே போல் பல்வேறு பகுதிகளில் இதே போல் பிரச்சனை உள்ளது. இதனை பற்றி அரசியல் ரீதியாக யாரும் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், இந்த துறையில் உள்ள கடன்கள் குறித்து பேசுகிறார். பிரச்சனை, பணியாளர் பற்றாக்குறை பற்றியும் பேசி வருகிறார்.
ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஆகி விட்டது. மின்பற்றாக்குறை இருக்கிறதா என்று ஒரு ஆய்வு கூட்டம் நடத்தி, அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தாலே மின்வெட்டு இருந்து இருக்காது என தெரிவித்துள்ளார் எஸ்.எஸ். சிவசங்கர்.
அதோடு இதே கடனுடன், சவால்களுடன் திமுக அரசு மின்பற்றாக்குறை என்ற பிரச்சனை இல்லாமல் ஆட்சி செய்தது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் பார்த்து கொண்டது.
ஆனால் புதிதாக ஏதோ வேறு உலகத்துக்கு வந்த மாதிரி தற்போதைய தவெக அரசு பேசுவதாக விமர்சித்துள்ளார் சிவசங்கர். அதோடு ஒன்றிய அரசின் குரலாக தவெக பேசுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது மொத்த இந்தியாவையும் தனியார்மயமாக்குவதற்கு ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
அப்படி மின்சாரத்துறையையும் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. அதற்கு எதிராக அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
ஆனால் இன்றைக்கு பொறுப்பேற்று இருக்கக் கூடியவர்கள் அதற்கான தீர்வை பார்க்காமல், கடந்த ஆட்சியை குறை சொல்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும், மக்கள் உங்களிடம் பவரை கொடுத்து விட்டார்கள். பவர் கட் இருக்கக் கூடாது என்பது தான் மக்கள் கேட்பது. அதற்கு என்ன வழி என்று பாருங்கள்.
கடந்த ஆட்சி மீது பழியை போடுவது தேவையில்லாத ஒன்று என அட்வைஸ் செய்துள்ளார். மக்கள் கேட்கும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு இவர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அந்த வீடியோவில் வலியுறுத்தி இருக்கிறார் சிவசங்கர்.
இதனிடையில் சென்னையில் இரவு நேரங்களில் நிலவும் மின்வெட்டுக்கு எதிராக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலத்தில் பேன் இல்லாமல் நிம்மதியாக தூங்க முடியவில்லை என தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக நேற்றைய தினம் சென்னை கொளத்தூரில் இரவில் நான்கு மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு இருந்திருக்கிறது.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது EB ஆபீஸுக்கு போன் பண்ணினால் பத்து மணிக்கே வீட்டுக்கு போய் தூங்கி விட்டதாக சொல்கிறார்கள்.
வாக்களித்த நாங்கள் நிம்மதியாக தூங்க வேண்டாமா ன கடும் கோபத்துடன் பொதுமக்கள் கேள்வி எ ழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 க்கு 97 பெற்ற இந்தியா!
இந்தியாவின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில் 97 இடங்களை இந்திய நகரங்களே ஆக்கிரமித்துள்ளன.
ஏஓஐ.இன் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:50 மணி அளவில், உலகின் முதல் 100 வெப்பமான நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களே பெரும்பான்மையாக இடங்களை பிடித்திருந்தன.
இதில் ஒடிசா மாநிலத்தின் பலாங்கிர் நகரம் 48 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.இப்பட்டியலில் பிஹாரின் சசாராம், உத்தர பிரதேசத்தின் வாராணசி நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
பல நகரங்களில் காற்றின் ஈரப்பதம் 6 முதல் 8 சதவீதத்திற்குள்ளேயே இருந்ததால், அங்கு ‘கடுமையான வெப்பம்’ நிலவும் சூழல் உருவானது.
உலகின் முதல் 100 வெப்பமான நகரங்களின் பட்டியலில் நேபாளத்தைச் சேர்ந்த தன்கடி (23-வது இடம்), நேபாள்கஞ்ச் (34-வது இடம்), மற்றும் லும்பினி சமஸ்கிருதிக் (76-வது இடம்) ஆகிய மூன்று நகரங்கள் மட்டுமே பிற நாடுகளைச் சேர்ந்தவையாகும்.
இவற்றைத் தவிர மற்ற 97 நகரங்களும் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.