என்ன சத்தத்யே காணோம் அங்கிள்?
தமிழ்நாட்டில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு. தட்பவெட்ப சூழலை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனே தவெகவில் சேர்ப்பது, கட்சித் தாவலை ஊக்குவிப்பதாகும் என மார்க்சிஸ்ட் விமர்சனம்.
அம்மா உணவகங்களில் ஜெயலலிதா புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம். விஜய் புகைப்படத்தை வைத்துவிட்டால் திட்டம் உங்களதாகி விடுமா என கேள்வி.
பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4-வது அதிருப்தி எம்எல்ஏ இசக்கி சுப்பையா. அதிமுகவினரின் பதவி விலகலை அடுத்து காலியான தொகுதிகள் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு.
குதிரைபேர அரசியலை நியாயப்படுத்த முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம். ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவது வரலாற்று துரோகம் என மாணிக்கம் தாகூருக்கு பதிலடி.
சென்னை சைதாப்பேட்டையில் ஜாதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டில் தவெக எம்எல்ஏ தலையீடு இருப்பதாகவும் புகார் அளித்த இளைஞர்கள் மீது த.வெ.க எம்எல்ஏ தாக்குதல்.
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என டி.கே. சிவக்குமார் உறுதி. மேகதாது நீர் விவகாரத்தில் தமிழ்நாடு இனியும் முறையிட முடியாது என்றும் திட்டவட்டம்.
தாய்லாந்து நாட்டில் இருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
என்ன சி.எம்.அங்கிள்சார்... சவுண்டயே காணோம்?
சூலூரில் ஒரு சிறுமி என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பார்த்த பிறகும் முதலமைச்சர் விஜய்க்கு சூடு, சொரணை வரவில்லையா? உடனே போயிருக்க வேண்டாமா? அந்தக் குடும்பத்தையும் சென்னைக்கு வரச் சொல்லித்தான் பார்க்கப் போகிறாரா?
தி.மு.க. ஆட்சியின் போது என்னவெல்லாம் பேசினார் விஜய்?”நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு ஒழுங்கா இருந்திருக்கும். பச்சை புள்ளைங்க.. படிக்கிற புள்ளைங்க... சின்னப் பொண்ணுங்க... வீட்டுல இருக்கிற பொண்ணுங்க... வேலைக்கு போகிற பொண்ணுங்க... இதுங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியாது சார்”என்று சொன்னீர்களே விஜய்? இப்போது என்ன நடக்கிறது உங்களது ஆட்சியில்?
கொடுமைகள், கொடுமைகள். கொலைகள், கொலைகள். கொள்ளைகள், கொள்ளைகள். பாலியல் வன்முறைகள், இதுதான் நடக்கிறது. 12 நாளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள். உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் அதை வைத்து என்ன செய்து கொண்டு இருக்கிறார். உள்துறை என்றால் என்ன என்றாவது தெரியுமா அவருக்கு?
சூலூரில் வேதனையோடு பேசும் ஒரு பெண் சொல்கிறார். "முதலமைச்சர் விஜய் ஆக்ஷன் எடுக்கனும். உங்களை ஆக்ஷன் ஹீரோன்னு நினைச்சுதான் வோட்டுப் போட்டோம்”என்கிறார். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. விஜய் படத்தில் காட்டும் ஆக்ஷனைப் பார்த்து அதே போலத்தான் நிஜத்தில் இருப்பார் என்று நினைத்து வோட்டுப் போட்டிருக்கிறார் அந்தப் பெண். இப்படித்தான் பலரும் வாக்களித்துள்ளார்கள்.
தீ பற்றி எரியும் இடத்துக்குள் விஜய் போவார். மாட்டிக் கொண்டிருக்கும் அந்த ஒற்றைக் குழந்தையைத் தூக்கி வருவார். தன் மீது பற்றிய தீயைத் தட்டி விடுவார்... என்று இந்த நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்று தமிழ்நாடு என்ற மாநிலமே குற்றச் சம்பவங்கள் கோலோச்சும் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது.
‘இதோ நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்... டைம் ஸ்டார்ட் நவ்' என்றார் விஜய். குற்றவாளிகளின் கூடாரமாக ஆகி வருகிறது தமிழ்நாடு.

தி.மு.க. ஆட்சியின் போது மைக்கைப் பார்த்ததும் கத்திக் கொண்டு இருந்தாரே விஜய்? அந்த விஜய் எங்கே போனார்?"சின்னப் பொண்ணு, டாய்லெட் வசதி இல்லாம காட்டுப் பக்கம் போயி ஒதுங்கினாங்க. என்ன ஆச்சு? உலகத்தை விட்டே போயிட்டாங்க. அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? இந்தப் புள்ளைய உங்களால திருப்பித் தர முடியுமா?”இப்படிக் கேட்டவர் விஜய். அவர் கேட்ட கேள்வியைத்தான் நாடு இப்போது அவரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
'இன்ஸ்ட்ராகிராம்' திறந்தாலே முதலமைச்சர் விஜய்யை பார்த்து பெண்களும், இளைஞர்களும் இப்போது கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாக்கைப் பிடுங்குவது மாதிரி கேட்கிறார்கள். ஆனால் அவர் தனது நாக்கை சுருட்டிக் கொண்டு விட்டார்.
'குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை' என்று இப்போது எக்ஸ் தளத்தில் பதிவு போடுகிறார் முதலமைச்சர் விஜய். ஆனால் அவரது உள்துறை என்ன செய்துள்ளது தெரியுமா? அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது.
'சிறுமியைக் கண்டுபிடித்துவிட்டோம். உயிரோட தான் இருக்காங்க' என்று முதலில் அந்தக் குடும்பத்துக்குச் சொல்லி இருக்கிறார்கள். பிறகு தான் உயிரோடு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன சொல்லப் போகிறார்?
‘கடைக்குப் போகிறேன்' என்று (21 ஆம் தேதி) அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி அவர். காணவில்லை. அரைமணி நேரத்தில் அந்தக் குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கி காவல்துறைக்கு புகார் கொடுக்கிறார்கள். 22 ஆம் தேதி இரவு கண்ணம்பாளையம் குளக்கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் சிறுமி. இதை அறிந்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிங்காநல்லூர் மருத்துவமனை முன்பும், காவல் நிலையம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். சாலை மறியல் செய்தார்கள். சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோரும் உறவினரும் சொன்னார்கள். இப்படி பொதுவெளியில் வெளிச்சம் ஆனபிறகு தான் காவல் துறை செயல்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குற்றவாளிகளும் சிறுமியைத் தேடுவது போல நாடகம் ஆடி இருக்கிறார்கள். பின்னர்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
'சிறுமி உயிரோடு இருக்கிறார்' என்று பெற்றோரிடம் சொன்னது யார்? அந்த போலீஸ் அதிகாரி யார்? அவர் மீது ஆக்ஷன் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? விஜய் தொடங்கினாரே சிங்கப் படை. என்ன ஆனது? என்ன செய்து கொண்டு இருக்கிறது? சிதைத்துக் கொலை செய்யப்பட்டு இருப்பவர் நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் விஜய் பொறுப்பு அல்லவா?
தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய குற்றச் சம்பவம் நடந்து, கொடூரமாய் ஒரு குழந்தை கொல்லப்பட்டது என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளார்கள். ஆட்சியாளர்கள் மீது இவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதைத்தான் அவர்களது அலட்சியமான பேட்டி காட்டுகிறது. பேட்டிக்கு முன்னதாக போலீஸ் அதிகாரிகள் குலுங்கி குலுக்கி வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்த காட்சிகளை 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பது இதுதானா?
விஜய் கேட்ட கேள்விதான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
“நீங்க எதுக்குங்க சார்?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்?
உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?”
அமலாக்கத்துறை கேரளா விசாரணை
முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல்-எக்ஸலாஜிக் நிதிப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு மற்றும் சிஎம்ஆர்எல் அலுவலகம் உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, வழங்கப்படாத சேவைகளுக்காக சிஎம்ஆர்எல் நிறுவனம் பெரும் தொகையை வழங்கியதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.வருமான வரி தீர்வு வாரியத்தின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த வழக்கு குறித்த விசாரணையைத் தொடங்கியது.
கருமணல் அகழ்வு மூலம் சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் சிஎம்ஆர்எல் நிறுவனம், தங்களது நடவடிக்கைகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக கேரளாவில் உள்ள அரசியல் தலைவர்களுக்குப் பணம் கொடுத்திருந்தது.
பினராயி விஜயன்தான் அதிகப் பணம் கொடுத்தவர் என்று வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. மேலும், பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தும் எக்ஸாலாஜிக் என்ற நிறுவனத்திற்கு மாதந்தோறும் ரூ.1.72 கோடி வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
2019 ஜனவரியில், வருமான வரித்துறை சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது, ரூ. 132.82 கோடி மதிப்பிலான முறைகேடுகளைக் கண்டறிந்தது.
இதில், ரூ. 1.72 கோடி வீணா விஜயன் மற்றும் எக்ஸலாஜிக் நிறுவனத்தின் கணக்குகளில் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிஎம்ஆர்எல் மாதத் தவணை வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடருமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
மேலும்உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சரும் பினராயி விஜயனின் மருமகனுமான முகமது ரியாஸின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வீணா விஜயனின் வாக்குமூலம் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் பினராயி விஜயனின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கபபட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையை தடைவிதிக்க கோரி கரிமானல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.எஸ். சுரேஷ் குமார், ஊழியர்களான அஞ்சு ரேச்சல் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் கூறியதாவது: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு எந்தக் குற்றங்களும் இல்லை என்றும், விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) தற்போது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரித்து வருவதால் மற்ற அமைப்புகள் விசாரிக்க முடியாது என்றும் வாதிட்டனர்.
இருப்பினும் உயர் நீதிமன்றம் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
ஆனால் கரிமானல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு வார கால அவகாசம் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
எலி விளையாடல்?
திருவாரூர் நகரில் உள்ள விஜயபுரம் பிள்ளை தெருவை சேர்ந்த 52 வயதான கோவிந்தராஜன். இவர் திங்கட்கிழமை மாலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கோவிந்தராஜின் உடல் அதே மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. கோவிந்தராஜின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக பிணவறைக்கு சென்று பார்த்தபோது அவரது கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் எலி கடித்து குதறியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.