7 நிமிசம் கொடுத்த மோடி !
சென்னையில் இன்று நடைபெற இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா திடீர் ரத்து. முதல்நாள் கையெழுத்திட்ட திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்
தமிழ்நாட்டில் சிறுவன் முதல் மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கொடுமை. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதுதான் முதல் கடமை என சி.வி.சண்முகம் பேட்டி. வரும் 1-ம் தேதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்
டெல்லியில் ராகுல், சோனியாவைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவும் மறுப்பு
கர்நாடக முதலமைச்சராக நாளை தேர்வு செய்யப்படுகிறார் டி.கே.சிவக்குமார். சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை பதவியேற்பு விழாவை நடத்த திட்டம்
கன்னியாகுமரி, நாகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. குளச்சலில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு.
மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்கம் கொள்ளை. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும் திருடிச் சென்ற கும்பலை தேடும் காவல்துறை
போர் நிறுத்தத்தை மீறி அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது சரமாரி ஏவுகணை வீச்சு
தூத்துக்குடி, தாளமுத்து நகர் பகுதியில் மாரி முத்து (19) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை.நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், 4 பேர் அவரை வெட்டிக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளதாக போலீசார் தெரிவிப்பு.கொல்லப்பட்ட மாரி முத்துவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், மூவரை கைது செய்து விசாரணை.

வாஷிங் மெஷின் அரசியலும் ஏவல் ஏஜென்சிகளும்!
இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ‘அரசியல் கருவிகளாக’ மாற்றப்பட்டிருக்கின் றன என்பதைத்தான், கேரள முன்னாள் முதல் வர் பினராயி விஜயன் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

இந்தியாவில் இன்று அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, வருமான வரித் துறை ஆகியவை எந்த நேரத்தில், யார் வீட்டில் சோதனை நடத்தும் என்பதைத் தீர்மானிப்பது சட்டம் அல்ல; மாறாக, அது பாஜகவின் அர சியல் கணக்கீடே.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரஸில் இருந்தபோது, பாஜகவால் அவர் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.
ஆனால், அவர் பாஜகவில் இணைந்த பிறகு அந்த வழக்குகள் எங்கே போயின என்று இன்றுவரை தெரியவில்லை.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி திரிணா முல் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட் ஃபண்ட் மற்றும் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் ஊழல் வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக் கத்துறையின் நடவடிக்கைகள் அவர் மீது பாய்ந்தன.
அவர் லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிட்டு பாஜக அவரைக் கடுமையாக விமர் சித்தது. ஆனால், அவர் திரிணாமுல் காங்கிர ஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்த அடுத்த கணமே ‘வாஷிங் மெஷின்’ அற்புதம் நிகழ்ந்தது.
சிபிஐ, அமலாக்கத்துறை, நடவடிக்கைகள் அனைத்தும் மாயமாய் மறைந்தன. அதுமட்டு மல்லாமல், தற்போது அவர்தான் பாஜக அரசின் முதல்வர். இது தற்செயலானது அல்ல; இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் வழிமுறை.
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய் யப்பட்ட விவகாரத்தில், அமலாக்கத்துறையின் அரசியல் சார்புத்தன்மையை நாட்டின் உயரிய நீதிமன்றமே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
“பழிவாங்கும் நோக்கத்துடனும், ஒருதலைப் பட்சமாகவும் அமலாக்கத்துறை செயல்படக் கூடாது” என்று நீதிமன்றம் வைத்த குட்டு, இந்த ஏஜென்சிகள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை அம்பலப்படுத்தியது.
அதிகார பலத்தாலும், ஏஜென்சிகளின் மிரட்டலாலும் ஒரு கட்சியின் சித்தாந்தத்தை யோ அல்லது மக்கள் செல்வாக்கையோ அழித்து விட முடியாது.
இந்த மிரட்டல் அரசியலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது பினராயி விஜய னோ ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. ஜன நாயக அமைப்புகளைக் கைப்பாவையாக்கி, அதன் மூலம் தங்களின் அரசியல் எதிரிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு நீண்ட நாள் நீடிக்காது.
கொள்கை ஸ்திரத்தன்மை கொண்ட தலைவர் கள் இத்தகைய சோதனைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவார்கள்.
மக்கள் மன்றமும் இத்தகைய அச்சுறுத்தல் அரசியலுக்குப் பொருத்தமான பதிலடி கொடுக்கும்.
7 நிமிசம் கொடுத்த மோடி !
1 நிமிசம் கூட கொடுக்காத சேனியா,அமித்ஷா!!
தவெக ஆட்சி அமைந்த பின்னர் முதன்முறையாக முதல்வர் விஜய் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார் விஜய்.
நேரமில்லை என்பதை காரணம் காட்டி குடியரசுத்தலைவர், அமித்ஷா, ராகுல்காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோர் விஜய்யை சந்திக்க மறுத்துவிட்டனர்.
இதனால் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் சந்தித்து பேசினார் விஜய்.
வெறும் 7 நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினார் மோடி. அமித்ஷாவோ அந்த 7 நிமிடங்கள் கூட ஒதுக்கவில்லை. அந்த 7 நிமிட சந்திப்பிலும் கூட வெறும் 4 கோரிக்கைகளை மட்டுமே முன் வைத்திருக்கிறார் விஜய்.இதற்கு முன்பு பிரதரை சந்தித்த முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் 63 கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். ஜெயலலிதாவோ 29 கோரிக்கைகள் முன் வைத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியோ 23 கோரிக்கைகள் முன்வைத்திருக்கிறார். ஆனால் விஜய்யோ வெறும் 4 கோரிக்கைகள் மட்டும் முன் வைத்திருக்கிறார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கூட்டணியில் இருக்கும் ராகுல்காந்தி கூட சந்திக்காதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு, விஜய்யும் ராகுலும் சந்திக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிக்கவில்லையே என்று சமாளிக்கிறார்.
உண்மை என்னவோ?
முதல் பயணம் தோல்வியில் முடிந்ததால் அடுத்த முயற்சி(டெல்லி பயணம்) ஜூன் 2 ல் என்கிறார்கள்.







