முதலி8த்தில் டெல்லி!

 தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். 

இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


போர்க்கொடி?

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடினை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் சட்டமன்றக் குழுத் தலைமைப் பொறுப்புகள் தொடர்பாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடியின் சில முடிவுகளில் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பு முரண்பட்டு, கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர் என்ற தகவல்கள் வெளியானது.

இபிஎஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர், சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனி ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இதில் சுமார் 38 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சில மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் நியமிக்கக் கோரி 38 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்களில் சுமார் 60% பேர் சி.வி. சண்முகம் பக்கமும், 40% பேர் எடப்பாடி பழனிசாமி பக்கமும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஆர்.பி. உதயகுமார் ஆகிய 5 பேர் கொண்ட குழுவைச் சமாதானம் பேச அனுப்பி வைத்தார். 

“சி.வி. சண்முகம் சொல்வதை நான் கேட்கத் தயார்” என இபிஎஸ் இறங்கி வந்த போதிலும், அதிருப்தி தரப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அவசரமாகக் கூட்டியுள்ளார். 

நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டதால் சென்னை மற்றும் சுற்றுவட்டார நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.

ஒருவேளை சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர் முறைப்படி முதல்வர் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. 

அ.தி.மு.க-வின் இரண்டு துருவங்களாக இருந்த தலைவர்களே தற்போது தலைமைக்கு எதிராகத் திரும்பியுள்ளது அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வில் தலைமைப் பதவி மற்றும் கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட மோதலால் கட்சி உடையும் நிலையில் உள்ளது. சி.வி. சண்முகம் – வேலுமணி கூட்டணி 38 எம்.எல்.ஏ-க்களைத் தன்வசம் வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குச் சிக்கல் உருவாகியுள்ளது.

 இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவே அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடதக்கது.



ஊழியர்களுக்கு தலா 3.5 கோடி!

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார்.இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில் தொடர வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. 

ஆனால், 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் முழுத் தொகையாக ரூ.3.7 கோடி பெற்றனர்.



முதல் கையெழுத்து!?

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சி.ஜோசப் விஜய், வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (மே.10) காலை 10 மணிக்கு தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.

தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான,வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை