அக்னி நட்சத்திரம்?
அக்னி நட்சத்திரம் இன்று (மே 4,) தொடங்கும் நிலையில், சென்னையில் கடலோரப் பகுதிகளில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறையும். வழக்கமான கடும் வெயிலுக்குப் பதிலாக, மேக மூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இது வெப்பத்தைக் குறைக்கும். கடுமையான வெப்ப அலையில் இருந்து தற்காலிக நிம்மதி கிடைக்கும், இருப்பினும் அக்னி நட்சத்திரம் என்பதால் குளுமையான சூழல் இருக்காது.வெயிலின் தாக்கம் குறைந்தாலும், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 157-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
இந்தியாவை ‘மிகவும் மோசமான’ (Very Serious) பிரிவில் இக்குறியீடு வகைப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சார்பாக எழுதுவது, அரசியல் அழுத்தம் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்களிடையே நிலவும் ஒருசார்பு நிலை போன்றவை இந்தியாவின் தரம் குறைய முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
சூழும் பேராபத்து!
இந்தியாவின் அணுசக்தித் துறையில் இது வரை இருந்துவந்த அரசின் முற்றுரிமையை உடைத்து, தனியார் மற்றும் அந்நிய நிறுவனங் களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் அபாயகர மான நகர்வை மோடி அரசு மேற்கொண்டுள் ளது.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சாந்தி’ (SHANTI Act, 2025) சட்டத்தின் பின்னணியில், அமெரிக்காவின் உயர்மட்ட அணுசக்தித் தூதுக்குழுவினர் வரும் மே 17 முதல் 21 வரை இந்தியாவிற்கு வரவுள்ள செய்தி மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
பல பத்தாண்டுகளாக பொதுத்துறை நிறு வனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த அணு உலை இயக்கம் மற்றும் எரிபொருள் மேலாண்மை ஆகிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில், ரிலையன்ஸ், அதானி, டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது என்பது தேசியப் பாதுகாப்பிற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
. ‘சாந்தி’ சட்டத்தின் மூலம் 1962-ஆம் ஆண்டு அணு சக்திச் சட்டம் மற்றும் 2010-ஆம் ஆண்டு சிவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகியவை திருத்தப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, ஒருவேளை அணு விபத்துகள் ஏற்பட்டால் உபகரணங்களை வழங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் அவற்றை இயக்கும் தனியார் நிறு வனங்கள் ஏற்க வேண்டிய சட்டப்பூர்வப் பொறுப்பு முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்யப் பட்டுள்ளது.
இது இந்திய மக்களின் உயிரோடு விளையாடும் ஒரு ஆபத்தான சூதாட்டமாகும்.
மேலும், இந்தியா இதுவரை சுயசார்புடன் கையாண்டு வந்த கனநீர் உலைத் (PHWR) தொழில்நுட்பத்தை ஓரங்கட்டிவிட்டு, அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் லாபத்திற்காக இலகு நீர் உலை (LWR) தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய முனை வது நம்மை மீண்டும் அந்நிய சக்திகளிடம் அடகு வைக்கும் செயலாகும்.
உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் மேம்பாடு காண்பதை விடுத்து, அமெரிக்காவின் வர்த்தக பேர சூதாட்டக் குழுக்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, கடன் சுமையை அதிகரிக்கும் இறக்குமதித் திட்டங் களை இந்தியா முன்னெடுப்பது பொருளாதார ரீதியாகவும் தற்கொலைக்குச் சமமானது.
குறிப்பாக, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில முதல்வர்களுடனும், இந்தியா வின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களு டனும் அமெரிக்கத் தூதுக்குழு நடத்தவுள்ள இரகசியப் பேச்சுவார்த்தைகள், இந்திய அணு சக்தித் துறையை ஒரு வணிகச் சந்தையாக மாற்றும் சதியையே காட்டுகின்றன.
பாது காப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் விபத்து கால இழப்பீட்டு விதிகளில் செய்யப்பட்டுள்ள தளர்வு கள், தனியார் லாபத்திற்காக இந்திய குடிமக்க ளின் பாதுகாப்பை அடமானம் வைப்பதாகும்.
இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடும், தனி யார் ஆதிக்கமும் ஊடுருவுவதை முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வீரியத்துடன் எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.









