நீங்கள் செய்வீர்களா?

 மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.

அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.

நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்

அனைவருக்கும் நன்றி !

எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.

எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.

அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.

இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



வணக்கம் தற்குறிகளா?

முதல் வணக்கம் கொளத்தூர் வாக்காளர்களுக்கு நல்வாய்பாக மு.க.ஸ்டாலின அவர்களைத் தேர்ந்தெடுக்காததற்கு.

ஒருவேளை தொகுதிக்கு அவர் செய்த நன்மைகளை மனதில் கொண்டு அவரையே தேர்ந்தெடுத்திருந்தால்... மனதில் எண்ணிப் பார்க்கையில நமக்கே மனம் நடுங்குகிறது.

தலைவராக,முதல்வராக ஏன் ஒன்றிய அரசையே பயங்கொள்ள வைத்ததிராவிட அரிமாக சீறியவர் சட்டப்பேரவையில் நின்று 

அரசியல் அறியா தற்குறியைப் பார்த்து(ஆட்சியமைத்துவிட்டால்)?மாண்புமிகு முதல் தற்குறி அவர்களே என்றல்லவா கூற வேண்டும்.அச்சிரமத்தை தராமைக்குத்தான் நன்றி.

ஆனால் எல்லாவகையிலும் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக்கிய தி.மு.க தோல்வியைப் பலரால் ஏற்றுக்கொள்ளவேஇயலவில்லை.எதிர்கட்சியினராலும் கூட.

அதைவிடக் கேவலம் நடிகர் விஜய் கட்சி வேட்பாளர்கள் தொகுதி மக்களுக்கே அறிமுகம் இல்லாதவர்கள்.புதியவர்கள்.சிலர் குற்றச்செயல்களை வழமையாக செய்பவர்கள்.

ஏன் தலைவர் விஜயே தனிமனித ஒழுக்கமற்றவர்.கட்சிக்கென கொள்கை ஏதும் இல்லாதவர்.தன் மனைவி,மகன்,மகள்,தனது பெற்றோரையே தவிக்கவிட்டு தனியே ஒரு நடிபையுடன் ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்கிறவர்.

இவர்களை ஒட்டுமொத்தமாகத் தேர்ந்தெடுக்க தமிழக மக்களுக்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை.

தி.மு.க,அதிமுகவை தவிர்த்து அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளர்களை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையும் இல்லை. தொகுதி முழுக்க விஜய் ரசிகர்கள் மட்டுமே இல்லை.

அஜீத்,சூர்யா,கார்த்தி,தனூஷ என பலநடிகர்கள் ரசிகர்களும் உண்டு.

பின் எப்படி இந்த செம்மறி ஆடுத்தனம்?வாத்துக் கூட்டநிலை?

சில குழந்தைகள பிடிவாத்த்தால் நடிகருக்கு போட்டோம் என்கிறார்கள்.குழந்தைகள் பிடிவாதம் செய்தால் பொம்மை,மிட்டாய்,சாக்லேட் வாங்கிக் கொடுக்கலாம்.

ஐந்தாண்டுகால வாழ்கைய நேரடியாகப் பாதிக்கும வாக்குகளையா விளையாட கொடுப்பது?

அதிமு கால ஒப்பந்தங்கள் நீட்,உதய்மின்திட்டம்,ஜல்ஜீவன் போன்றவைகளுக்கு கையெழுத்திட்டு படும் வதைகளுக்கு ஆளாவதை காணவில்லையா?

இங்குதான் பார'தீய' தேர்தல் ஆணையம்,பாஜக மோடிமஸ்தான திருவிளையாடல் வெளிப்படுகிறது.வாக்குப் பதிவு எந்திரம் ஹேக் செய்து முடிவை மாற்றுகிறது மஸதான்,அமித் சா ஆணையம் என்றால் உச்சநீதிமன்றம் வரை ஏற்றுக் கொள்வதில்லை. அனைத்தும் மூன்று நூல் கூட்டம்,ஆக்கிரமிப்பு,கட்டமைப்பு.

சரி நான் வாக்களிக்கையில் சின்னம் வரும் விவிபேட் எந்திரத்தில. வந்த தாள்களை எண்ணினால் எது உண்மை எனத் தெரிந்து விடுமே .அதைச்செய்யுமா பார'தீய'தேர்தல் ஆணையம்.?செய்யவேண்டும்.அதற்கு கொஞ்சமாவது மனசாட்சியுடைய நீதிமன்றம் ஆணையிடவேண்டும். கட்சிகள்,இயக்கங்கள் கோரிக்கைவைக்க வேண்டும்.

"நீங்கள் செய்வீர்களா?"

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை