எது. தண்டனை?

 ‣ கொளத்தூர் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். கண்ணீர்மல்க கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு.‣ பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பதில் சிக்கல். எடியூரப்பா வழக்கில் ஒரு நாள் மட்டுமே உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்ததை சுட்டிக்காட்டி கேள்வி.‣ தவெகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி மாநில காங்கிரஸே முடிவெடுக்கலாம் என கே.சி.வேணுகோபால் அறிவிப்பு. சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று கூடி முக்கிய முடிவு.‣ திருச்சி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கொட்டிய கோடைமழை. திண்டுக்கலில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்.‣ தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம். பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாக அதிமுகவில சமீபத்தில் சேர்ந்த லாட்டரி அதிபர் லீமா ரோஸ் மாறுபட்ட கருத்து.

‣ விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவெகவை புறக்கணித்த மக்கள். 33 தொகுதிகளில் ஒன்றில்கூட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
‣ திருத்தணி அருகே டி.வி.புரம் ஊராட்சியில் 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை என மக்கள் மறியல். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
‣ மேற்குவங்கத்தில் மக்களாட்சி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையத்தின் உதவியோடு முறைகேடு நடந்துள்ளதால் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு.
‣ பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருசக்கர வாகனம் வெடித்து சிதறியதால் பரபரப்பு. நூலிழையில் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய இளைஞர்.‣ அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ. ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை அணைக்க போராட்டம்.

எது தண்டனை? யாருக்கு...?


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்த தற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் சட்டப் பேரவைத் தேர்தல்க ளில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மத்தி யில் பேசியிருக்கிறார்.


பொய்யை உண்மை போல் பேசி திசை திருப்புவதே ஆர்எஸ்எஸ் - பாஜககாரர்களின் வழக்கம். தற்போது தேர்தல் நடந்த ஐந்து மாநி லங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் தற்போது கேரளாவில் ஆட்சிக்கு வந்துள்ளது.


அப்படியென்றால் இது மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்ததற்காகக் கிடைத்த வெற்றி என்று சொல்வாரா மோடி?


அசாமில் கிடைத்த வெற்றி பாஜகவின் வெறுப்பு அரசியல் முனைப்பினால் பெறப்பட் டது என்பதை ஊடகங்கள் செய்திக் கட்டுரைக ளாக வெளியிட்டுள்ளன.


அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, முஸ்லிம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்று சமூக ஊட கத்தில் வெளியிட்டு, ஆரம்பம் முதலே வெறுப்பே ஆதிக்கம் செலுத்தியது.

உள்துறை அமைச் சர் அமித்ஷா, பாஜக ஆட்சி நீடித்தால் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் ஐந்து ஆண்டு காலத்துக்குள் அப்புறப்படுத்தி விடுவோம் என்று வெறுப்பின் உச்சத்தில் கூவினார்.


முஸ்லிம்களு க்கு எதிரான இந்துத்துவா, அசாமிய வெறி யுணர்வைத் தூண்டி மத, இனவெறி அணி திரட்ட லாலும் கூட்டணிக் கட்சிகளின் துணையாலும் அங்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


மேற்குவங்கத்தில் ஏற்கெனவே சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பல லட்சம் வாக்கா ளர்கள் நீக்கம், அதை எதிர்த்த மக்கள் போ ராட்டம், சட்டப் போராட்டம் மூலம் நீதிமன்றம் தலையிட்ட பின்னரும் கூட வாக்காளர் துணைப் பட்டியல் வெளியிடப்படவில்லை.


இந்த நிலை யில் இங்கும் வங்கமொழி பேசும் முஸ்லிம்க ளை எல்லாம் ஊடுருவல்காரர்கள் என்றும் அவர்களை வெளியேற்றுவோம் என்றும் பிரத மர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பேசி வெறுப்பை விதைத்தனர்.


அதன் அறுவடையாகவே அங்கு பாஜக ஆட்சி யைப் பிடித்திருக்கிறது.

ஆனால் பிரதமரோ, இது பழிவாங்கலுக்கான நேரமல்ல என்று ஒப்புக்குப் பேசுகிறார்.பாது காப்புப் படைகள் மேலும் 60 நாட்கள் இருக்கும் என்று அமித்ஷா கூறியது பழிவாங்கலுக்கு அன்றி, வேறென்ன?


தமிழ்நாட்டில் அதிமுக வுடன் உடன்பாடு கொண்டு 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியைத் தவிர மற்ற 26 தொகுதிகளிலும் தோற்கடிக் கப்பட்டுள்ளது.


இதுதான் மகளிர் மசோதா என்ற பெயரில் மோடி அரசு “சதி” செய்ததற்கு பாஜக வுக்கு தமிழ்நாடு கொடுத்த தண்டனை.


ஆயினும் பாசிசபாணி பாஜக பாடம் கற்குமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை