பதவி+அதிகாரம்=சந்தர்ப்பவாதம்

 இன்று கூடுகிறது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.தேர்தல் முடிவுகள்,எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, குறித்து ஆலோசனை.ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு பட்டியலை கேட்பதால் தொடரும் சிக்கல்.புலி திரைப்படத்திற்கு பெற்ற 15 கோடி வருவாயை மறத்ததாக புகார். விஜய் மீதான மோசடி வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு.ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து. 8 பேர் உயிரிழப்பு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.3 நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகன பாதுகாப்பு வாபஸ். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல்.அதிமுக எம்எல்ஏ-க்கள் 20-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி விடுதியில் தங்கவைப்பு. சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு என தகவல்.த.வெ.க-வுக்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு கே.பி.முனுசாமி மறுப்பு. எந்த நிலையிலும் தவெக-வுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என திட்டவட்டம்.மேற்குவங்கம் மாநிலத்தில் நாளை மறுநாள் பாஜக அரசு பதவியேற்பு. திமுக உடனான 20 ஆண்டு கால கூட்டணியை முறித்தது காங்கிரஸ். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு.திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக டி.ஆர்.பாலு விமர்சனம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்திருப்பதாகவும் காட்டம்.மேற்குவங்கத்தில் பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை. காரில் சென்றவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய கும்பல்.திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய கனமழை. 6 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி. துணை சபாநாயகர் மற்றும் அமைச்சரவையில் பாஜக பங்கு கேட்பதால் சிக்கல்.அரசுக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 29ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.தேனி அருகே ஆண்டிபட்டியில் களைகட்டிய வினோத திருவிழா. உடம்பில் சேறு பூசியும், துடப்பத்தால் அடித்தும் நேர்த்திக்கடன்.

தி.மு.க,+அதிமுக கூட்டணி ஆட்சியா?

வாய்ப்பில்லை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்..

 ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை..

மறுபுறம், திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் தனித்தனியாக வெற்றி பெற்றுள்ளன. கூட்டணியாகப் பார்த்தால், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

1967 முதல் தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. அந்த வரலாற்றை மாற்றும் வகையில், விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்றுள்ளது.

ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறவில்லை. மேலும், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

அதனால், தவெகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 107 ஆக குறையும். இதனால், குறைந்தது மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகிறது. 

தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள்ளது.. மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதவுக்கு விஜய்க்கு தேவை..

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

 அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமக 4 இடங்களிலும், பாஜக மற்றும் அமமுக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

 இக்கட்சிகளில் சிலர் ஆதரவு அளித்தால்தான் தவெகவிற்கு தேவையான எண்ணிக்கை கிடைக்கும் நிலை உள்ளது.

இந்த அரசியல் கணக்குகளுக்கு மத்தியில் தான், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2.5 ஆண்டுகள் ஸ்டாலின் முதல்வராக இருப்பார் என்றும், 2.5 ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருப்பார் என்றும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது..ஆனால் இது நடைதுறைப்படுத்தலில் பல சிக்கல்கள் உள்ளது.

இதற்கு ஸ்டாலின்ன் முழுமையாக ஒத்துக் கொள்வாரா எனத் தெரியவில்லை.

மேலும். அவர் விஜய் ஆட்சியின் அழகைப் பார்த்து மக்களே முடிவு செய்து நம்மை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என எண்ணுகிறார்.

மேலும் விஜயை ஆட்சியமைக்கவிடாமல் செய்தால் அவருக்குத்தான் அனுதாபம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என நம்புகிறார்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “இப்படியான விஷயம் நடக்கக்கூடாது. நான் கேட்கும் சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதை செய்யாதீங்க.. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில், தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

 தவெக ஆட்சி அமைக்க முயற்சிக்கையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் களத்தில் இருந்து அரசியல் செய்து வந்த திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாக பரவும் சில வாய்வழித்தகவல்கள் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

 



@ எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவு தர பழனிசாமி மறுத்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

தவெகவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அப்படி செய்தால் அதிமுக அழிவுப் பாதைக்கு சென்று விடும். மக்களின் பேராதரவு தவெகவுக்கு உள்ளதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.

அதனால் 3-ல் 2 பங்கு அதாவது சுமார் 32 எம்எல்ஏ.க்களைப் பிரித்து தனி அணியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம். அதற்கு நிதியுதவி அளிக்க லீமா ரோஸ் உதவுவார் எனவும் அந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

அதில், ‘‘தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியது தானே என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும். அதனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை’’ என்று முடிவெடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.அதிமுக வசம் 47 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்க எம்எல்ஏ.க்கள் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது. தவெக.வில் உள்ள செங்கோட்டையனுக்கு சவால் விட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க, 32 எம்எல்ஏ.க்களை தவெக பக்கம் இழுக்கலாம். இல்லாவிட்டால், 10 எம்எல்ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சட்டப்பேரவையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, அதிமுக எம்எல்ஏ.க்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால் அதிமுக எம்எல்ஏ.க்களை பழனிசாமி நேற்று இரவு புதுச்சேரி அழைத்து சென்றுள்ளார். அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமகவிடம் தவெக தரப்பு ஆதரவு கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் அன்புமணியிடம், ‘தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘வணக்கம். நன்றி’ என்று பதில் அளித்தார்.


@ தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கோரி, தமிழக வெற்றிக் கழகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ”அது உண்மையில்லை,” என, அக்கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் மறுத்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், ”கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, த.வெ.க.,விடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. அவ்வாறு கடிதம் வந்தால் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

” மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம்,” என்றார்.

ஆரம்பமே முட்டுக்கட்டை போடும் ஆளுநர்.. 

இன்று விஜய் பதவியேற்பு விழா நடக்குமா..?


ஆரம்பம. முதலே தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜய் பெரும்பான்மையை எழுத்து வடிவில் அதிகாரப்பூர்வமாகத் தரக்கூறினார்.


பதவியேற்பு விழா ஏற்பாடுகளை பிரமாண்டமாக நேரு அரங்கில் விஜய் கூறியபடி அதிகாரிகள் செய்ய அதைக் கண்ட ஆளுநர் நலைமைச்செயலாளர் சாய்குமாரை அழைத்து விழா ஏற்பாடுகளை நிறுத்தக் கூறியதாகவும்,வழக்கமான பதவியேற்பு விழா நடத்தும் ஆறுநர் மாளிகையிலேயே. நடத்தக் கூறியதாகத் தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை