முதல் கோணல் எல்லாமே...
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கிறது.
த.வெ.க. உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக வகை முடிவு?
நான் முதல்வன் திட்டம், மாநில திட்டக்குழு, தகவல் சரிபார்ப்பு மையம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை உடனே வெளியேறுமாறு நெருக்கடி.
ஒன்றிய அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் கூறும்போது, “தவெக தலைவர் விஜய், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென ஆளுநரிடம் நேரடியாக உரிமை கோரவில்லை.
அப்படி கோரியிருந்தால், இந்நேரம் ஆளுநர் தவெகவுக்கு அழைப்பு விடுத்திருப்பார்.
அவர்களும் சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே எங்களிடம் 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்துள்ளனர் எனக் கூறி கூட்டணி ஆட்சி அமைக்கிறோம் என ஆளுநரிடம் கூறியதுதான் சிக்கல்.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏ-க்களையும் சேர்த்தால்கூட ஆட்சியமைக்க தேவையான 118 இடங்கள் வரவில்லையே என்பதால் ஆளுநர் பெரும்பான்மையை முதலில் நிரூபியுங்கள், அதன்பிறகு அழைக்கிறேன் எனக் கூறி தவெகவை அழைக்கவில்லை.
இந்த விஷயத்தில் போதிய முன்அனுபவமில்லாமல் தவெகவினர் தங்களுக்கான வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு, ஆளுநரை குறைகூறுவது அர்த்தமற்றது” என்றனர்.
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான என். பால்வசந்தகுமார், தமிழகத்தில் தவெக தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில், தவெகவை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் அழைக்காமல் இருப்பது ஜனநாயக சட்டவிரோதம், என கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன் தமிழக ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் எந்தக் கட்சியும் 118 தொகுதிகளை பெற்றிருக்கவில்லை எனில் அரசியலமைப்பு சட்டத்தின் 4 வழிமுறைகளை பின்பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்கலாம்.
* தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்த கூட்டணியை அழைக்கலாம்.
* அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கலாம்.
* தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அந்த கட்சிகளை அழைக்கலாம்.
* வெளியில் இருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம்.
* தற்போது விஜய் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோராமல் கூட்டணி ஆட்சி எனக்கூறி காங்கிரஸ் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்ததுதான் வாய்ப்பை நழுவ விட்டதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முக்கியமான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில்…
1. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் – இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. சட்டமன்றத் தேர்தல் களத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பு மலையளவு ஆகும்.
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.
அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
4.மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது ஆகும்.
காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டமன்றத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது.
கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது அரசியல் நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கேவலமிக்கச் செயல்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது. அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
.சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இதுவரை கண்டிராத ஒரு அரசியல் சூழல் நிலவி வருகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை.
இந்த நிலையில், பரம எதிரிகளான திமுக மற்றும் அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரினால், மக்கள் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் இந்த முயற்சியைத் தடுக்க தவெக ஒரு அதிரடித் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கட்சியின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தல்: திமுக அல்லது அதிமுகவுக்குப் பதிலாக தவெக-வை மக்கள் தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தச் சூழலில் பழைய கட்சிகள் இணைவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்பது தவெக-வின் வாதம்.
108 எம்.எல்.ஏ-க்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தால், தமிழக சட்டசபையில் ஒரு பெரிய அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும். இது மீண்டும் ஒரு தேர்தலை நோக்கி மாநிலத்தைத் தள்ளக்கூடும்.
ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகளின் செல்வாக்கு குறையும் என்பதையும், தாங்களே உண்மையான மாற்றாக இருப்போம் என்பதையும் நிரூபிக்க தவெக முயல்கிறது.
தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “சட்டமன்ற விதிகளின்படி எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதே முறை” என்று தெரிவித்துள்ளார்.
திமுக-அதிமுக இணைந்து வந்து பெரும்பான்மையை நிரூபித்தால், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு 1979-ல் எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக – அதிமுக இணைப்பு முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.
தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு, தவெக-வின் வருகையால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, இந்த இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியோ, தமிழக அரசியல் ஒரு மிக முக்கியமான வரலாற்று மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.














