தீயசக்தியே நமஹ!

 த.வெ.க. ஆதரவு கேட்ட நிலையில், வி.சி.க. ஆதரவுக் கடிதம் இதுவரை வழங்காததால் நீடிக்கும் குழப்பம். 118 என்ற பெரும்பான்மை தவெகவிற்கு கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் இழுபறி.தனது பெயரில் போர்ஜரி கடிதம் கொடுத்ததாக அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், ஜோசப் விஜய் மீது பரபரப்பு குற்றச்சாட்டு - நள்ளிரவில் திடீர் திருப்பம்.தூய சக்தி என கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க விஜய் கட்சி மோசடி செய்வதாக டிடிவி தினகரன் காட்டம். எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க த.வெ.க. முயற்சிப்பதாக குற்றச்சாட்டு.வெளியாகியுள்ள வீடியோவில் காமராஜ் சுயமாகத் தனது விருப்பத்தை எழுதி கையெழுத்திடுவதைக் காண முடிகிறது. "நான் எனது முழு விருப்பத்துடனேயே இந்த ஆதரவை அளிக்கிறேன், யாராலும் நான் கடத்தப்படவோ அல்லது மிரட்டப்படவோ இல்லை" என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது. தினகரன் கூறுவது போல கடிதம் போலியானது அல்ல என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோ ஆதாரத்தை த.வெ.க வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தற்போது த.வெ.க 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 118-ஐ எட்ட இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அ.ம.மு.க எம்.எல்.ஏ-வின் இந்த திடீர் நகர்வு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் கடத்தல் புகார், மறுபுறம் வீடியோ ஆதாரம் என இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல், தமிழக ஆளுநர் அடுத்து எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே முடிவுக்கு வரும். தமிழ்நாடு ஆளுநரை 3-வது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஜோசப் விஜய். இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை வழங்கியும், ஆளுநர் அழைக்காததால் உச்சகட்ட பரபரப்புத.வெ.க. ஆதரவு கோரியது தொடர்பாக வி.சி.க. நிர்வாகிகளுடன் காணொலியில் திருமாவளவன் ஆலோசனை. உயர்நிலை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று அறிவிக்கிறார்.










தீய சக்தியே

 துணை?

தீயசக்தி,தீயசக்தி என வாய்க்கிழிய கதறிய ஜோசப் விஜய் தீயசக்தி ஆதரவான துணைசக்திகள்ஆதரவுடன் முதல்வராக முயற்சிக்கிறார்.

இனியாவது தனது தற்குறித் தன அரசியலை கைவிட்டு நாகரீக அரசியலை நடத்த முயற்சிக்க வேண்டும். 

அவர் ஆதரவைத் தேடி போன இடத்தில் காலைவாரும் காங்கிரஸ் கூப்பிடாமலே ஓடிப் போய் ஆதரவு தெரிவித்தது தி.மு.க கூட்டணி கட்சி ராகுல் காலம் முழுக்க அதன் நிலைப்பாடு அதுதான்.

உ.பி,பீகார்,மே.வங்கம் கூறும் வரலாறு அதுதான்.தி.மு.க. கூட்டணி கட்சிகள் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள்,மூன்று முஸ்லீம் கட்சிகள்,விசிக,இன்னும் சில அக்கூட்டணி தலைமை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிகட்சிகள் அனைத்தும் கூட்டணித்தலைவர் பேச்சுக்கு மரியாதைதரும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளும்.

அந்நிலையில் வேறு கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க கூட்டணி தலைவர் கருத்தைக் கேட்காமல் தருவார்களா? தந்தால் கூட்டணித் தலைவருக்கு நன்றி கூறவேண்டாமா?அந்த நாகரிகத்தை இரு கம்யூனிஸ்ட் ஜொசப்விஜய்க்கு கூறியும் நன்றி கூறியதாகத் தெரியவில்லை.

அதுதான் வி.சி.க,தனது ஆதரவுகடிதம் தர தாமதமாகக் காரணம் எனத் தெரிகிறது.

இதில் இடையில் காமராஜ் போலி கடித விவகாரம் வேறு.

தீயசக்தி ஆதரவு பெற்றும் கூட நல்ல சக்திக்கு வழி இன்னமும்" தட்டுங்கள் திறக்கப்படும்" என்பதற்கேற்க திறக்கப் படவில்லையே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை