எதன் வெளிப்பாடு?

 தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய். விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு. புதன்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.அமையவிருக்கும் புதிய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. தொலைநோக்கு சிந்தனை கொண்ட திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தல்.விஜய்க்கு ஆதரவு தெரிவித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வதாக திருமாவளவன் விளக்கம். தவெக மீதான விசிகவின் மதிப்பீடு மாறவில்லை என்றும் பேட்டி.திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கில் தவெக வேட்பாளரின் வெற்றியை இழந்த விவகாரம். முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு அவசர மனுவாக இன்று விசாரணை.விஜய் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது.




தி.மு.க,தலைவர் மு.க.ஸ்டாலின்

தெளிவாக ஆதரவு சொன்ன பிறகும்

குதிரை பேரம் எதற்கு ?


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.


இருந்தும் கடந்த 6 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு சென்று, தனக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்க வேண்டும் என விஜய் ஆளுநரிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.


ஆனோல் ஆளுநரோ, 118 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா?


அப்படி இல்லை என்றால் ஆதரவு கடிதத்துடன் வாங்கள் என்று விஜயிடம் கூறி வழி அனுப்பியுள்ளார். இருந்தும் விஜய் தினமும் ஆளுநரின் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறோர்.

அவரும் இன்று போய் நாளை வா கதையா அனுப்பிவைத்துக் கொண்டு இருக்கிறார்.

இப்படி விஜயை, அரசியல் அமைப்பு சட்டப்படி பதவியேற்கவைத்து சட்டசபையில் அவரது ஆதரவை நிரூபிக்க வைக்க வழி வகை செய்வது ஆளுநரின் கடமை.


ஆனால் ஆளுநரோ 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் வேண்டும் என விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கூட ஆளுநரை எதிர்த்து ஒருவார்த்தை கூட விஜய் பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் தோற்றால் கூட, தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறது தி.மு.க


ஆனால் முதலமைச்சராகத் துடிக்கும் விஜய், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக மௌனம் காத்து வருகிறார். இந்த நிலையில், "பாசிசப் பாயசம் இனிப்பதாலா?" என தி.மு.க ஐடி விங் (IT Wing) கேள்வி எழுப்பியுள்ளது.


இது குறித்து தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்:“புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் அவர்கள் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்திவிட்டார்.


‘நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்’ என்று தனது கூட்டணிக் கட்சிகளையும் அழைத்துச் சொல்லிவிட்டார்.

இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் ‘குதிரை பேரம்’ த.வெ.க, இதுவரை எதற்காக ஆளுநர் குறித்தோ அல்லது பா.ஜ.க குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?

பாசிசப் பாயசம் அவ்வளவு இனிப்பதாலா?


தி.மு.க, தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொன்ன பிறகும், த.வெ.க இன்னும் குதிரை பேரம் நடத்துவது ஏன்? அதில் மாட்டிக்கொண்டு கேவலப் படுவதேன்.?

இதை தற்குறித்தனத்தின் வெறிப்பாடு எனலாமா?


‘பா.ஜ.க’ என்ற வார்த்தையைச் சொல்ல விஜய் பயப்படுவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை