புயலுக்கு வாய்ப்பு?
ரூ.4050 கோடியிலான டிட்வா புயல் புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்த இந்தியா-இலங்கை முடிவு.
அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சட்டப்பேரவைக்கான கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் குழுவின் பணிக்கு ஈரான் எதிர்ப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி
வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போல கேக் வெட்டிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
10 வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: எண்ணெய் நிறுவனங்கள் .
எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தனியாக சட்டப்பேரவைக்கு வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.புயலுக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் கோடை காலம் வாட்டி வதைத்து வந்த சூழலில், தற்போது மழைக்கான சூழல் உருவாகி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் வெப்பம் குறைந்து வெப்ப நிலை தமிழ்நாட்டில் சற்று மாறியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தெற்கு உள்கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இவை காரணமாக தமிழ்நாட்டில் 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காற்று, இடி, மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
4.8 லட்சம் விபத்து : 1.7 லட்சம் பேர் பலி தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்
புதுதில்லி தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2024ஆம் ஆண்டிற்கான சாலை விபத்து தொடர்பான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில்,“2024ஆம் ஆண்டில் நாடு முழுவ தும் மொத்தம் 4,67,967 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
சுமார் 1.7 லட்சம் பேர் உயிரி ழந்துள்ளனர். 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில் பதிவான விபத்து, 2023இல் பதிவான 4,64,029 விபத்துகளை விட அதிகமாகும்.
இந்தியாவில் சாலை விபத்து உயிரிழப்பு களில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2024இல் தமிழ்நாட்டில் 67,296 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இந்த விபத்துக்களில் 20,390 பேர் உயிரிழந்துள்ளனர்
. இது தேசிய அளவில் 10.2 சதவீதமாக உள்ளன.
தமிழ்நாட்டிற்கு அடுத்து 55,771 விபத்துகள் மூலம் மத்தியப்பிரதேசம் 2ஆவது இடத்தி லும், கேரளம் (46,591) 3ஆவது இடத்திலும், கர்நாடகா (43,062) 4ஆவது இடத்திலும், உத்த ரப்பிரதேசம் (38,417) 5ஆவது இடத்திலும், மகாராஷ்டிரா (36,051) 6ஆவது இடத்திலும், தெலுங்கானா (25,986) 7ஆவது இடத்திலும் உள்ளன.
தில்லி முதலிடம் நகரங்களில் தில்லி 5,573 விபத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (4,769) 2ஆவது இடத்திலும், சென்னை (4,200) 3ஆவது இடத்திலும், ஹைதராபாத் (3,785) 4ஆவது இடத்திலும், மும்பை (3,200) 5ஆவது இடத்திலும் உள்ளன.
அதே போல தேசிய அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிகளவில் (48.3%) விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் விபத்துக்கள் (54.2%), உயிரிழப்புகள் (61.8%) அதிகமாக உள்ளன.
விபத்துகள் அதிக மாக நடக்கும் நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகும்.
நாடு முழுவதும் பதிவான விபத்துகளில் சுமார் 20% இந்த நேர இடைவெளியிலேயே நடக்கின்றன.
வாக னங்களில் செல்லாத பாதசாரிகளும், அதிக ளவில் உயிரிழந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்த விபத்துகளில் 30% நடக்கின்றன. ஆனால் உயிரிழப்புகள் இங்குதான் மிக அதிகம்.
50%க்கும் அதிக மான விபத்துகள் மாநில, மாவட்ட சாலைக ளில் நிகழ்கின்றன” என அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
200 யூனிட் இலவச மின்சாரம்.
யாருக்கு கிடைக்கும்?
2 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது வீட்டு மின் பயன்பாட்டை 500 யூனிட்டுகளுக்குள் வைத்திருக்கும் நுகர்வோருக்கு மட்டுமே மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு நுகர்வோர் 2 மாதங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், அவர்களுக்குப் புதிய சலுகை பொருந்தாது.
அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடரும்; அதாவது ஏற்கனவே அமலில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும்.
இந்த புதிய மின்சார மானியத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,730 கோடி நிதிச் சுமை ஏற்படும். இதற்கான செலவினங்கள் 'தலைமை மின் ஆய்வாளர்' கணக்கின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அனுமதி, வரும் 2026-27 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் (Revised Budget Estimate) சட்டமன்றத்தின் மூலம் பெதிட்டத்தில் ஜூலை
100 யூனிட் இலவசத்தையே தாங்க இயலவில்லை.ஆனால் அனைத்து மின் சாதனங்களையும் உபயோகிப்போர் அதிகம்.அதனால் அரசு சமாளித்துவிடுகிறது.
ஆனால் 500யூனிட்குள் ஏ.சி,உபயோகிப்பவர்கள் தவிர அனைவரும் வந்துவிடுவர்.
அவர்களுக்கு 200யூனிட் இலவசம் எனில் மின்வாரியம் ?
ஏற்கனவே உதய் மின் திட்டத்தில் ஜூலை மாதம் மின்கட்டணம் உயர்த்தும் கட்டாயம் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
தொடர்ந்து இத்திட்டம் உயிர்வாழுமா எனத்தெரியவில்லை.வாழவேண்டுமானால் த.நா.மி.வாரியம் ஐ.சி.யூ.வில்தான் வாழும் நிலை உருவாகும்..













