தியாகம் செய்ய வேண்டுமாம்
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு.
ஊத்துக்கோட்டை பகுதிகளில் மண் ஏற்றி செல்லும் போது தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்.
தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு: சி.வி.சண்முகம் பேட்டி.
நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை: சித்தப்பா, 2 மகன்கள் கைது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவை தொடர்ந்து விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: ஒன்றிய அரசு உத்தரவு
திருநங்கைகளுக்கு இடையே கோஷ்டி மோதல் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் மீது கற்களை வீசி கொலைவெறி தாக்குதல்: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.
வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் விஜய்யை வளைத்துப்போடும் அமித்ஷா: கூட்டணி அமைச்சரவையிலும் சேர்ந்து தன்கட்டுப்பாடில் அரசை கொண்டுவர முடிவு
பொருளாதார நெருக்கடி!
இந்தியா நெருக்கடிகளைச் சந்தித்து வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா மற்றும் போர்: முதலில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள், அதனைத் தொடர்ந்து நிலவும் சர்வதேசப் பொருளாதாரச் சவால்கள் மற்றும் தற்போது மேற்காசியப் பகுதியில் (Middle East) நிலவி வரும் போர் பதற்றங்கள் உலக நாடுகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன
விநியோகச் சங்கிலி பாதிப்பு: போர்ச் சூழலால் உலக அளவில் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதோடு, இந்தியா பல லட்சம் கோடி ரூபாயை அந்நியச் செலாவணியாகச் செலவிட வேண்டியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்று பிரதமர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து: மக்கள் தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, மெட்ரோ இரயில், மின்சார வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.
வீட்டிலிருந்தே வேலை (Work from Home): கொரோனா காலத்தில் நாம் பழகிக்கொண்ட ஆன்லைன் மீட்டிங்குகள் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் முறைகளை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் அலுவலகப் பயணங்களுக்காகச் செலவிடப்படும் எரிபொருளைப் பெருமளவு மிச்சப்படுத்த முடியும்.
ஆன்லைன் கல்வி: பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் இணைய வழிக் கற்பித்தல் முறையைத் (Online Classes) தொடங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இது மாணவர்களின் பயண நேரத்தையும், அதற்கான எரிபொருள் தேவையையும் குறைக்கும்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி வெளியேறுவதற்குத் தங்கம் இறக்குமதி மிக முக்கியக் காரணமாக உள்ளது.
“கடினமான பொருளாதாரச் சூழலில் நாட்டின் வளங்களைச் சேமிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, திருமண விசேஷங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு ஓராண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்” என்று பிரதமர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலைமை சீராகும் வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்திற்குத் தோள் கொடுக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.
நாம் சேமிக்கும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளும், நாம் தவிர்க்கும் ஒவ்வொரு கிராம் தங்க இறக்குமதியும் இந்தியாவின் கஜானாவைப் பாதுகாக்கும். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தைச் சார்ந்து இருப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், உள்நாட்டுப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் பல்வேறு பணிகளை எளிதாக்கியுள்ள நிலையில், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து டிஜிட்டல் முறைகளைப் பின்பற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.
எப்படி நாம் அனைவரும் இணைந்து கொரோனா பெருந்தொற்றை முறியடித்தோமோ, அதே போன்ற ஒரு கூட்டு முயற்சியின் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் இந்தியா கடந்து வரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மோடி உபதேசிக்கிறார்... தியாகம் செய்ய வேண்டுமாம்!
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் தர்க்கத்திற்குப் புறம்பாகவும், சாதாரண மக்களின் வாழ்வா தாரத்தைப் புறக்கணிப்பதாகவும் உள்ளது.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இத்தகைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வேண்டிய அரசாங்கம், தன் தோல்விகளை மறை க்க தேசபக்தி என்ற போர்வையில் மக்களின் நுகர்வின் மீது பழியைப் போடுவது கண்டிக்கத்தக்கது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல், வரலாறு காணாத கலால் வரிகள் மூலம் மக்கள் பாக்கெட்டைப் பறித்து, தமது கூட்டுக் களவாணி நண்பர்களின் கஜானாவை நிரப்பியவர் தான் இந்தப் பிரதமர்.
இப்போது எரிசக்தி நெருக்கடி என்று கூறி பொது மக்களைக் கட்டுப்படுத்தச் சொல்வது வேடிக்கை யானது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்து வதிலும், மின்சார வாகனங்களுக்கான உள்கட்ட மைப்பை உருவாக்குவதிலும் போதிய வேகம் காட்டாத அரசு, இப்போது மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்து மாறு உபதேசம் செய்வது பொறுப்பற்றத்தனமானது.
காலணி முதல் சமையல் எண்ணெய் வரை உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்துகிறார்.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தவறான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்து போவதைத் தடுக்க இந்த அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்துவிட்டு, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியதே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான்.
உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்காமல், “உள்ளூர் தயாரிப்பு களை வாங்குங்கள்” என்று முழங்குவது வெறும் அரசியல் விளம்பரமாகவே முடியும்.
ரசாயன உரப் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குகிறார் மோடி. போதுமான அறிவியல் பூர்வமான மாற்றுகளை வழங்காமல், இடு பொருள் செலவு உயர்வால் ஏற்கெனவே தத்த ளிக்கும் விவசாயிகளை இயற்கை விவசா யத்திற்கு திடீரென மாறுமாறு வற்புறுத்து வது அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதை க்கும் செயலாகும்.
மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், இங்கே அரசோ கார்ப்பரேட் வரிச்சலுகைகளை வாரி வழங்கி விட்டு, சாமானிய மக்களை “சிக்கனமாக இருங்கள்” என உபதேசிக்கிறது.
தங்கத்தின் மீதான மோகத்தை விடுங்கள், வெளிநாட்டுப் பயணங் களை நிறுத்துங்கள் என கூறுவது அரசின் நிர்வாகத் தோல்வியை திசைதிருப்பும் முயற்சி யாகும். பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய ஒன்றிய அரசு, தனது கொள்கை ரீதியான தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தேசபக்தி என்ற போர்வையில் சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளில் கைவைப்பது ஒருபோதும் தீர்வாகாது.
டாஸ்மாக் மூடல்!தமிழ்நாடு முழுவதும் சுமார் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட புதிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள 255 டாஸ்மாக் கடைகள் அடுத்த 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளன.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிக அருகில் உள்ள கடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி சென்ற ஆட்சியிலேயே நடந்தது.
இதன் அடிப்படையில் தற்போது 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
தி.மு.க, ஆட்சியிலும் ஆட்சி பொறுப்பேற்ற சில தினங்களிலேயே 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இருப்பினும் அந்தக் கடைகளில் வேலை பார்த்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் இப்போதும் அதே மாதிரி மூடப்பட உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.
ஏனெனில் தற்போது மூடப்படும் கடைகள் அனைத்தும் அதிக வருமானம் ஈட்டும் கடைகளாகும். குறிப்பாக பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள கடைகள் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர் மற்றும் 2 சேல்ஸ்மேன்கள் உட்பட குறைந்தது 5 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 717 கடைகள் என்றால் கிட்டத்தட்ட 3,585 பணியாளர்களை வேறு கடைகளுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது.
