வெற்றிவேல் யார்?
விஜய்யின் ராஜகுரு வாழ்க்கை?
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்ந்து சோதிடம் பார்த்து வந்த நிலையில் 2001ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க, வெற்றிவேல் சொன்னது நடந்ததால் அவரை ஆஸ்த்தான சோதிடராக்கி இருக்கிறார் ஜெயலலிதா.
இதன் மூலம் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தன் கைக்குள் வைத்திருந்திருக்கிறார் வெற்றிவேல்.
சென்னையில் தனக்கு செல்வாகும் செல்வமும் கூடிவிட்டதால் ராஜலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறார்.
ஈரோடு பக்கமே வராத வெற்றிவேலை தேடித்தேடி கடைசியில் சென்னையில் அவரின் வீட்டை கண்டுபிடித்திருக்கிறார். வீட்டுக்குள் விடாமல் போலீசை விட்டு துரத்தி விட்டிருக்கிறார் வெற்றிவேல்.
தன்னைத்தேடி வந்துகொண்டிருந்ததால் சுமதிஸ்ரீக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் வெற்றிவேல். நீதிமன்றத்தில் வெற்றிவேலுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.
இதனால் ஈரோட்டில் தாய் வீட்டிற்கே சென்று தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமதிஸ்ரீ கடந்த 2012ல் பத்திரிகைகளில் வெற்றிவேல் குறித்து வாக்குமூலம் அளித்து வந்தார்.
பிள்ளைகளுடன் வாழ்ந்தால்தான் யோகம் என்று சோதிடம் சொல்வதால் ஆனந்திக்கு பிறந்த ஆர்த்தி, சுமதிஸ்ரீக்கு பிறந்த சாந்தினி, டெஸ்ட் டியூப் மூலம் ராஜலட்சுமிக்கு பிறந்த குழந்தையுடன் வாழ்ந்திருக்கிறார் வெற்றிவேல். விவாகரத்தின் போது சுமதிஸ்ரீயின் மகள் சாந்தினியை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிவேல்.
போயஸ் கார்டனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வெற்றிவேல், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாக மாட்டாட்டீர்கள் என்று சொன்னது பொய்யாகிப்போக ஜெயலலிதாவுக்கு அதிருப்தி.
அதிமுகவின் அடுத்த தலைமை குறித்து சொன்னதில் சசிகலாவுக்கு அதிருப்தி. இதனால் கார்டனை விட்டு வெளியேறிவிட்டார்.
அதிமுகவில் இருந்த செல்வாக்கை வைத்து டெல்லிக்கு சென்று பாஜக பிரமுகர்களை வளைத்திருக்கிறார் வெற்றிவேல். டெல்லிக்கு சென்றதும் தனது பெயரை ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று மாற்றி இருக்கிறார்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சரத்பவார் போன்ற பெரும் அரசியல் தலைவர்களுக்கும், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கும் சோதிட ஆலோசகராக இருந்துள்ளார்.
டெல்லியில் ஏற்பட்ட சில சங்கடங்களால் சிங்கப்பூர் சென்று அங்கே சோதிட நிலையம் வைத்து நடத்தி இருக்கிறார் தொழிலதிபர்களை வளைத்து போட்டிருக்கிறார். அங்கே தனது பெயரை ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று மாற்றி இருக்கிறார்.
2020ல் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மீக அலோசகராகிவிட முயற்சித்திருக்கிறார்.
அது தோல்வியில் முடிந்ததால் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து ஆலோசனைகள் சொல்லி வந்திருக்கிறார். இதில் ஏற்பட்ட நம்பிக்கையில் தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்துள்ளார் வெற்றிவேல்.

பல விசயங்களில் வெற்றிவேல் சொன்னது நடக்க அவர் சொன்னது அத்தனையையும் நம்பி அவர் சொன்னபடியே செய்து வந்திருக்கிறார் விஜய். தினந்தோறும் சூரியன் உதயமாகும் நேரத்தில் விஜய் வீட்டு வாசலில் மூன்று வித கோலம் போட வேண்டும் என்று வெற்றிவேல் சொல்ல, மூன்று கோலங்களை போடுவதற்கு மூன்று பெண்கள் நியமித்திருந்தார் விஜய்.
ஆட்சியில் அமருவீர்கள் என்று சொன்னதும் பலித்ததால் அதற்கு நன்றிக்கடனாக தான் பதவியேற்றதும் வெற்றிவேலுவுக்கு தனது ஆலோசகராக அரசுப்பதவி வழங்கினார் விஜய்.
இது மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தியதால் நியமன உத்தரவை வாபஸ் பெறச் செய்துவிட்டார் விஜய்.