# ஷோபா மாடல் ?

 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மறுசீரமைப்பு என்ற அறிவிப்பால் குழப்பம். பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என பெண்கள் அச்சம்.அதிமுகவில் எம்.எல்.ஏ. ஹரி உட்பட மேலும் 2 நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர எந்த தியாகத்திற்கு தயார் என பரபரப்பு அறிக்கை.அதிமுகவின் தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல். அதிமுக அலுவலகங்களை கைப்பற்றுவது தொடர்பாக இரு அணிகளிடையே வலுக்கும் மோதல். புதுக்கோட்டையில் போட்டி போராட்டம்... கரூரில் அதிமுக அலுவலக பூட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு. அமெரிக்காவில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடு செய்வதாக உறுதி. அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட அந்நாட்டு நீதித் துறை முடிவு.சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு யாரும் கோயிலுக்கு போகக் கூடாது என்று அர்த்தம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தங்கள் வழி என உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி திருவாடனை தொகுதியில் வாக்களித்த இலங்கை தம்பதி. மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் விசாரணையில் சிக்கினர்.ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் ஒத்திவைப்பு.வழக்கில் மேல்முறையீடு செய்யும் வரை அவகாசம் கோரப்பட்டதால் நடவடிக்கை.

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு. 15 கிலோ கொண்ட ஒரு தக்காளிப்பெட்டி 450 ரூபாய்க்கு விற்பனை.
சிவகங்கை மாவட்டத்தில் வாழை இலை விலை சரிவால் விவசாயிகள் கவலை. வரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் நம்பிக்கை.
கேரளத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் சதீசன். வரும் 18ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்.
மேற்கு வங்கத்தில் தலைதூக்கும் புல்டோசர் கலாச்சாரம். சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் இடிப்பு.
தேர்தல் ஆணையர் நியமனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்று அலங்காரமா? ஜனநாயகம் எங்கே போனது? என உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி.
நீட் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் 14 இடங்களில் சிபிஐ சோதனை. மகாராஷ்டிராவை சேர்ந்த மேலும் 2 குற்றவாளிகளை கைது செய்து விசாரணை.
உத்தரப் பிரதேசத்தில் கனமழை மற்றும் சூறாவளி காற்றுக்கு 111 பேர் உயிரிழப்பு. பல மாவட்டங்கள் நீரில் தத்தளிப்பதால், மீட்புப் பணிகள் தீவிரம்.
டெல்லியில் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற  உத்தரவு. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் வாரத்தில் 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஆணை.
ஓமன் கடல்பகுதியில் இந்திய கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மூழ்கடிப்பு. தத்தளித்த 14 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டது ஓமன் கடற்படை.
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடும் பாதிப்பு. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு.


12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும். வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் .12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


#Shofa Model 

வீணானதா கணக்கு?

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. 

அதிமுக இரு தரப்பாக தற்போது மீண்டும் பிரிந்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். 

ஏற்கனவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வதால் தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சி காணாமல் போய்விடும் என திமுக மற்றும் அதன் தோழமை காட்சிகள் கூறி வந்தார்கள்.

மேலும் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக இருக்கமாட்டார் என்றும் அவர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தற்போது இரு தரப்புகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு ஒரு தரப்பாகவும், சிவி ஷண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆதரவு ஒரு தரப்பாகவும் பிரிந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி வேலுமணி தங்களின் வேண்டுகோள் என்ன என்பது குறித்து தற்போது பேசியிருக்கிறார். அவர் பேசியது என்னவென்றால், அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றோம்.

 2019, 2021, 2024 ,2026 என தொடர் தோல்விகளை சந்தித்துள்ளோம். எனவே அனைவரையும் அழைத்து பேசி அரவணைத்து செல்ல வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.

இப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களை பொறுத்தவரை கட்சியை விட்டு வெளியே சென்றவர்களை அழைத்து பேசி கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும். 

இனி யாரையும் கட்சியை விட்டு வெளியே அனுப்ப கூடாது. தேர்தலுக்கு முன்பே பல கூட்டணிகளுடன் இணைய சொன்னோம்.

ஆனால் அவர் கேட்கவில்லை.தற்போது பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். எங்களிடம் இருப்பது இரண்டு வேண்டுகோள் தான்.

 ஒன்று திமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். மற்றொன்று பொதுக்குழுவை கூட்ட வேண்டும். கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.

எங்களுக்கு பதவி முக்கியமில்லை. தற்போது தமிழ்நாட்டு மக்கள் தவெகவிற்கு ஆதரவு தந்துள்ளனர். அதன் காரணமாக நாங்களும் ஆதரவு தந்துள்ளோம். திமுக எதிர்ப்பில் இருக்கின்றோம் அவ்வளவு தான். தற்போதும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். 

எனவே தோல்வி குறித்து அவர் ஆராய்ந்து நல்ல முடிவாக எடுத்து கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள் என்றார் எஸ்.பி வேலுமணி.

இந்நிலையில் அதிமுக கட்சிக்குள் மிகப்பெரிய மோதல் உண்டாகி இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் தற்போது எஸ்.பி வேலுமணி தரப்பின் வேண்டுகோளை கூறியிருக்கின்றனர். 

மிக முக்கியமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆனால் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது போன்ற வேண்டுகோளை எஸ்.பி வேலுமணி தரப்பு முன் வைத்து இருக்கின்றனர்.எனவே இந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா ? அல்லது கட்சியை விட்டு இவர்களையும் நீக்குவாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஏற்கனவே அதிமுக கட்சி பின்னடைவை சந்தித்து வருகின்றது.தேர்தலில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது.

வேலுமணி சொல்வதை பார்க்கையில், அவர் சில ஆலோசனைகளை தேர்தலுக்கு முன்பு கூறியிருப்பதாகவும், ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை என்றும் தெரிகின்றது. 

அந்த வேண்டுகோளை எல்லாம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டால் கட்சி வலுவாக இருக்கும். அதனை எடப்பாடி பழனிச்சாமி செய்ய வேண்டும் என்பது தான் வேலுமணி தரப்பின் வேண்டுகோள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இவர்கள் தவெகவிற்கு ஆதரவு தருவதால் தான் அதிருப்தியில் இருப்பதாக தெரிகின்றது.

 இரு தரப்பாக பிரிந்து தவெகவிற்கு ஆதரவு தந்ததை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. 

இதன் காரணமாக தான் இந்த மோதல் அடுக்கட்டத்திற்கு சென்றிருப்பதாக தெரிகின்றது.

ஆனால் கொறடா கட்டளையை மீறியதற்கு த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் பதவி பறிபோகிவிடும்.

அதை எண்ணியே வேலுமணி சுதி இறங்கியுள்ளது.

அதன்பின் அவர்களால் விஜய்க்கு என்ன பயன்? 

(ஷோபாவை சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து திருப்பி எடுக்க வேண்டியதுதானா?)பெட்ரோல் விலையேற்றம்!

 பெட்ரோல்,டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. 

அமெரிக்கா-ஈரான் போரின் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தைகள் கடுமையான நிலையற்ற தன்மையை சந்தித்த நிலையில், அதன் நேரடி தாக்கம் இந்திய எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

பல வாரங்களாக நீடித்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு பிறகு, மத்திய அரசு நான்கு பெருநகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உயர்த்தியுள்ளது. 

வெள்ளிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வந்த இந்த விலை மாற்றம், கடந்த நான்கு ஆண்டுகளில் சில்லறை விலையில் ஏற்பட்ட முதல் முக்கிய உயர்வாகும். அதேபோல், சிஎன்ஜி விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.புதிய திருத்தத்தின் படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.77 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.108.74, மும்பையில் ரூ.106.68 மற்றும் சென்னையில் ரூ.103.67 ஆக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் டீசல் விலையும் அனைத்து பெருநகரங்களிலும் ரூ.2.80 முதல் ரூ.3.11 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் டீசல் விலை ரூ.90.67, கொல்கத்தாவில் ரூ.95.13, மும்பையில் ரூ.93.14 மற்றும் சென்னையில் ரூ.95.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், டெல்லியில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.77.09 இலிருந்து ரூ.79.09 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை பெருநகரப் பகுதியில் ஏற்கனவே சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.84 ஆக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வுக்குப் பின்னால் எண்ணெய் நிறுவனங்களின் (IOCL, BPCL, HPCL) அதிகரித்து வரும் நஷ்டமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், இதுவரை அந்தச் சுமை முழுமையாக நுகர்வோரிடம் மாற்றப்படாமல் இருந்தது. 

இதனால் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் ரூ.1,600 கோடி வரை இழப்பை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சராசரியாக 69 டாலராக இருந்த நிலையில், சமீபத்திய மாதங்களில் அது 113–114 டாலர் வரை உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விலை உயர்வு இந்திய இறக்குமதி செலவுகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை எரிபொருள் சேமிக்குமாறு மற்றும் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.

 வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை குறைத்து அந்நியச் செலாவணியை பாதுகாக்க இது உதவும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் தொடர்ந்து நிலவும் அலைச்சலின் பின்னணியில், இந்தியா சுமார் 60 நாட்கள் எரிபொருள் இருப்பும், 45 நாட்கள் LPG இருப்பும் வைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றாலும், சர்வதேச விலை உயர்வின் தாக்கம் உள்நாட்டு சந்தையில் தவிர்க்க முடியாததாக உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வு போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கும் என்பதால், அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் பிரதிபலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை