தோரியமே துணை?
அதிமுக கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம். ஆளுநரை இன்று நேரில் சந்தித்து முறையிட எடப்பாடி பழனிசாமி முடிவு என தகவல்.
உச்சநீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி காணொலி வாயிலாக விசாரணை. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க 50% பணியாளர்கள் 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தல்.
தவெக ஆட்சியமைத்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம், துறை ஒதுக்கீட்டில் இழுபறி. ஆளுநர் அர்லேகரை, முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சந்திக்க வாய்ப்பு.
பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசுக்கு ஜோசப் விஜய் வலியுறுத்தல்.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு 3-வது முறையாக சபாநாயகர் உடன் சந்திப்பு. அதிமுக கொறடா விவகாரத்தில் சட்டப்படி முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அறிவுறுத்தல்.
தவிர்க்க முடியாததா இந்த விலை உயர்வு?
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.3 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடந்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.67க்கும், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.95.25க்கும் விற்கப்படுகிறது.
அதுமட்டு மின்றி, வாகனங்களுக்கான கேஸ் விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது தொடுத்து வரும் தாக்குதல் காரணமாகவே இந்த விலை உயர்வு என்றும், இது தவிர்க்க முடியாதது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வு முறைப்படி அறிவிக்கப்படுவ தற்கு முன்பே சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டன.
இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் விற் பனை செய்யும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனங்கள் மீண்டும் ஒரு சுற்று விலை உயர்வை அறிவிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்ற எண்ணத்தை பொதுப் புத்தியில் திணிப்ப தற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாட்டு மக்களுக்கு “இலவச” உபதேசங்களை செய்து வந்தார்.
கொரோனா பொது முடக்கக் காலம் போல மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் உபதேசித்தார்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக எண்ணெய் வணிகத்தில் பெரும் கொள்ளை யடித்த அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முத லாளிகள் தங்கள் கொள்ளையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை.
மாறாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிக்குறைப்பு செய்யப்பட்டு அதன் பலன் முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்கே செல்லுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
சர்வதேசச் சந்தை நெருக்கடி காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது என்றால், இப்போது ஏற்பட்டுள்ள
போர்ச் சூழ லுக்கு முன்பு குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், அதன் பலன் ஒரு பைசா கூட இந்திய மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்தது ஏன்?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மை. போர்ச்சூழல் எப்போது முடிவுக்கு வரும் என்பதிலும் நிச்சய மற்ற தன்மை உள்ளது என்ற போதும், ஒன்றிய அரசு வரிக்குறைப்பின் மூலம் மக்கள் தலை யில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வை சுமத்துவதை ஓரளவு குறைக்க முடியும்.
-----------------------------+++++++-++---------+--
சன் நியூஸ் வெளிட்ட உண்மை படம்-------------++++++++------------------++++++---------
இதனால் எண்ணெய் வணிகத்தின் மூலம் ஏற்கெனவே ஈட்டிய லாபத்தில் ஒரு பகு தியை பகிர்ந்தாலே போதும். இந்திய மக்கள் கடும் நெருக்கடியில் உள்ள போது மேலும் மேலும் இடிகளை அம்பானி,அதானிகளின் கார்பரேட். மோடி அரசு இறக்கக்கூடாது.
இந்திய எரிசக்தி
தேவைக்கு
"தோரியம் "ஒன்றே தீர்வு!
இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை நோக்கிய பயணத்தில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (PHWR) முக்கிய நீரோட்டத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
2047-ம் ஆண்டிற்குள் 100 GWe (கிகாவாட் எலக்ட்ரிக்) அணுசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய முதிர்ச்சியடைந்த, வணிக ரீதியாகப் போட்டியிடக்கூடிய மற்றும் தரப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அவசியம்.
இதற்கு PHWR உலைகள் மிகவும் பொருத்தமானவை.
தற்போது அணுசக்தி உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ள நிலையில், யுரேனியம் இறக்குமதியும் பெருமளவில் உயரும். உலகளவில் யுரேனியத்திற்கான தேவை அதிகரித்து வருவதாலும், புவிசார் அரசியல் சிக்கல்களாலும், இன்னும் 10-15 ஆண்டுகளில் அணு எரிபொருள் விநியோகப் பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கும் தோரியம் பயன்பாட்டிற்கு மாறுவது மிக முக்கியமானது. தோரியத்திலிருந்து 'யுரேனியம்-233' (U-233) எரிபொருளைப் பெருமளவில் தயாரிக்கும் திறன் கொண்ட உலைகள் இதற்குத் தேவை.
இந்தியாவின் 500 MWe முன்மாதிரி வேக விநியோக உலை (PFBR) இந்த திசையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தோரியத்தைப் பெருமளவில் பயன்படுத்துவதற்கு இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் ஆகலாம் என்றாலும், இப்போதே அதனைத் தொடங்குவது அவசியம்.
தோரியம் தொழில் நுட்பம் இந்தியாவை எரிசக்தி இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு உயர்த்தும்.
யுரேனியத்தை அடிப்படையாகக் கொண்ட முதற்கட்ட அணுசக்தித் திட்டம் விரைவில் 10 GWe என்ற இலக்கைத் தாண்ட உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் (Spent fuel), இரண்டாம் கட்டத் திட்டத்திற்குத் தேவையான கையிருப்பைக் கொண்டுள்ளது.
வேக உலைகள் (Fast reactors) மூலம் இறக்குமதியைச் சாராமல் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க முடியும். சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்பு மூலம் யுரேனியம் கிடைப்பதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் முதல் கட்டத் திட்டத்தை 100 GWe வரை விரிவாக்க முடியும். இதில் PHWR உலைகள் மட்டும் 60 GWe பங்களிக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்த PHWR உலைகள் மூலம் தோரியத்தை எரித்து U-233 எரிபொருளைப் பெருமளவில் தயாரிக்க முடியும். வேக உலைகளை விட இது 30 ஆண்டுகள் விரைவாகச் செயல்பட வாய்ப்புள்ளது.
இயற்கை யுரேனியத்திற்குப் பதிலாக தோரியம் கலந்த உயர்-செறிவூட்டப்பட்ட குறைந்த யுரேனியத்தை (HALEU) பயன்படுத்துவது பாதுகாப்பு, சிக்கனம் மற்றும் கழிவு மேலாண்மையில் சிறந்தது. 3-ம் கட்டத் திட்டத்திற்கு TMSR உலைகளே சிறந்த தேர்வாகும்.
அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தை உறுதி செய்வது அவசியம். உலக நாடுகள் பெரும்பாலும் யுரேனியத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு (Once-through mode) பாதுகாப்புக் காரணங்களுக்காக விடுத்து விடுகின்றன.
ஆனால், தோரியம்-U233 எரிபொருள் சுழற்சி அதிக பாதுகாப்புத் தன்மையைக் கொண்டது. இது உலகளாவிய அடிப்படை எரிசக்தித் தேவையைத் தீர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கும். இந்தியாவிற்கு இது தனித்துவமான வாய்ப்பு. தோரியம் பயன்பாடு தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
இந்திய அணுசக்தித் திட்டம் யுரேனியத்திலிருந்து தோரியத்திற்கு மாற வேண்டிய சரியான தருணம் இதுவே.















