இந்தியாவின் தலைநகர் வாஷிங்டன்?
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சதாம் ஹுசைன். நர்சரி வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் கார்மல் நகரை சேர்ந்த பைசல், கரும் புக்கடை அண்ணா காலனியை சேர்ந்த பாரூக், கரும்புக் கடையை சேர்ந்த காஜாமைதீன் என்ற ஹக்கிம். இவர்களது வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாகவும், கள்ளநோட்டுகள் அச்சடிப்பதாகவும் கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதிட ஏதுவாக 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக கனமழை. பழனி, பெரியகுளம், கூடலூர், பந்தலூரில் இடி, மின்னலுடன் மழை கொட்டியதால் மிரண்ட கால்நடைகள்.
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் தீவிரம். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டம்.
திமுக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அமைச்சர் கீர்த்தனா. மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுவதாக தங்கம் தென்னரசு கண்டனம்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை. உடலைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை.
பொறியியல் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர்கள் தகவல். கம்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்.
நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகள். தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியத்தில் வைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்ட இடத்தில் தனியார் சொகுசு பார். பேருந்து நிலையம், கோயில் உள்ள இடத்தில் தனியார் பார் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்.10 லட்சம் மலர்களைக் கொண்டு 26 சிற்பங்கள் அமைப்பு.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை பக்கவாட்டுச் சுவரில் கார் மோதி பயங்கர விபத்து. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
வேதாரண்யத்தில் 7 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட எள், சணல் பயிர்கள் கோடை மழையால் பாதிப்பு. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
இந்தியாவை ஆள்வது யார்?
உக்ரைன்- ரஷியா இடையிலான போரின்போது ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைவித்தது. ரஷியாவிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா அந்த எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியது. இதனால் ரஷியா மானிய விலையுடன் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கி வந்தது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவை டிரம்ப் வலியுறுத்தினார். அப்போது, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார். அதையும் மீறி இந்தியா எண்ணெய் வாங்கியது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.
பின்னர், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்வோம் என்று இந்தியா தெரிவித்தது.
இந்த நிலையில்தான் வளைகுடா நாடுகளில் (மேற்கு ஆசியா) பதற்றம் நிலவியது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த, ஈரான் வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள அமெரிக்கா விலக்கி அளித்தது. இருந்தபோதிலும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்றுடன் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. வளைகுடா பிரச்சினையும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா விலக்கு அளிக்குமா? என்பது தெரியவில்லை. அவ்வாறு விலக்கு அளிக்கவில்லை என்றால் அமெரிக்காவை எதிர்த்து ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யுமா? என்று தெரியவில்லை.மோடிக்கு அமெரிக்காவை எதிர்த்து இந்திய மக்கள் நலனை காக்க திராணி இருக்கிறதா என்றும் தெரியவில்லை?
ஒருவேளை ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தினால், பெரும் தட்டுப்பாட்டு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதா?
இந்திய மக்கள் நலனைவிட சில குஜராத்தி முதலாளிகளைக் காப்பாற்றுவது முக்கியமா?
இந்தியாவின் தலைநகரம். டெல்லியா?வாஷிங்டன்D.C.யா?






