மரணிக்கும் ஜனநாயகமும்
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு. ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு.
தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இடம்பெற உள்ளதாக தகவல். இன்று நடைபெறும் ஐயூஎம்எல் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்ற தகவலால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி. நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 25 பேர் ஆதரவு அளித்த நிலையில், ஏமாற்றம்.
தவெக, அதிமுக ஆதரவை பெற்றால் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் மீண்டும் திட்டவட்டம்
.
தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில். சென்னையில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதி.
அருப்புக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் வெளுத்து வாங்கிய கோடை மழை. பலத்த காற்றுடன் பெய்த மழையால், காரியாபட்டியில் சோலார் பேனல்கள் உடைந்து விழுந்து சேதம்.
சங்கரன்கோவில் மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறல். அரசியல் கட்சியினர் ஆய்வு நடத்த யார் அனுமதி கொடுத்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி.
மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு. ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் கண்டனம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அம்மா உணவகம் மற்றும் அரசு மருத்துவமனையில் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு. கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி தளவாட பொருட்களை எடுத்து சென்றதால் பரபரப்பு.
சென்னையின் பல்வேறு இடங்களில் இரவில் தொடரும் மின்வெட்டுகளால் கடும் பாதிப்பு. திருவொற்றியூரில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்.
தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி.
அரக்கோணத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள். ஏசி கோச்சில் ஏசி வேலை செய்யாததால் ரயில்வே ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்.
கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து தலைவியை மிரட்டிய தவெகவினர்: லெட்டர் பேடு, முத்திரைகளை திருடி சென்றனர்
பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம். ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் இன்று டெல்லியில் தங்கியிருக்க ஆணை.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொலை செய்பவர்களுக்கு 550 கோடி சன்மானம். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற ஈரான் திட்டமிட்டிருப்பதால் மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம்.
மௌனிக்கப்படும் ஊடகங்களும்
(விலை போன)
மரணிக்கும் ஜனநாயகமும்!
பிரதமர் மோடியிடம் நார்வே பத்திரிகையாளர் ஹெல் லிங் எழுப்பிய கேள்விகளும்,அதற்கு அவர் பதிலளிக்காமல் சென்றதும்; அதற்கு இந்தி யத் தரப்பின் மழுப்பல்களும், இணையவழித் தாக்கு தல்களும் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல.
அவை, இந்தியாவின் உலகளாவிய ஜனநாயக பிம்பத் திற்கும், உள்நாட்டில் நசுக்கப்படும் மாற்றுக்கருத் துக்களின் யதார்த்தத்திற்கும் இடையிலான முரண்பாட்டை அப்பட்டமாக உணர்த்துகின்றன.
சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை “ஜனநாயகத்தின் தாய்” என்று பறைசாற்றினா லும், சர்வதேச அமைப்புகள் இந்தியாவை “தேர் தல் சர்வாதிகார நாடாகவே” பார்க்கத் தொடங்கி யுள்ளன. ஹெல் லிங் போன்ற சர்வதேசப் பத்தி ரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதிலளிப்பது தேசத்துரோகமல்ல.
ஜி20 மாநாடுகள், யோகா, தடுப்பூசி ஏற்றுமதி போன்றவற்றை முன்னிறுத்தி உள்நாட்டு மனித உரிமை மீறல்களையும் ஊடக ஒடுக்குமுறைக ளையும் மறைக்க முடியாது
வெளிப்படையான நிர்வாகத்தை ஒன்றிய அரசு மறுப்பதற்குப் பின்னால் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்தல், கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைப் பாதுகாத்தல் ஆகிய காரணங்கள் உள்ளன.
தரவுகளை மறைப்பதும், தகவல்களைத் தணிக்கை செய்வதும் அரசின் உத்தியாகிவிட்டது. வேலை யின்மை, பொருளாதாரச் சரிவு, மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கள் குறித்த தரவுகள் வெளிவந்தால், “எல்லாம் சிறப்பாக உள்ளது” என்ற மோடி அரசின் பிம்பம் உடைந்துவிடும்.
எனவே, கேள்விகளை எதிர்கொள்வதை விட, கேள்வி கேட்பவர்களை மௌனமாக்குவதே எளிதென அரசு கருதுகிறது.
உண்மையான ஊடகங்கள் முடக்கப் படும்போது, எஞ்சியிருப்பவை அரசாங்கத்தின் மடியில் தவழும் ஊடகங்களாக மாறிவிடு கின்றன.
இங்கு உண்மையான செய்திகள் வெளி யாவதில்லை; மாறாக அரசின் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திகளாக மக்கள் மீது திணிக்கப்படு கின்றன.
அரசாங்கத்தின் கொள்கைகளை விமர் சிப்பவர்கள் உடனடியாக “தேச விரோதிகள்”, “துரோகிகள்” என முத்திரை குத்தப்படுகின்றனர்.
கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக ஒரு தலைவரைக் கட்டமைக்கும் பிம்ப ஆராதனை பாசிசத்தின் அறிகுறியாகும். உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 157-வது இடத்திற்குச் சரிந்திருப்பது வெறும் புள்ளி விவரமல்ல, அவமானகரமான உண்மை.
கேள்விகளை எதிர்கொள்ள அஞ்சும் தலைமை, ஒருபோதும் நாட்டை முன்னோக்கிச் செலுத்த முடியாது.
இப்போதாவது இந்திய ஊடகங்களும், பொதுமக்களும் விழித்துக் கொண்டு தங்களின் ‘கேள்வி கேட்கும் உரி மையை’ மீட்டெடுக்க வேண்டும். இந்தியா நவீன சர்வாதிகாரப் பெருங்குழியில் வீழ்வதைத் தடுத்திட வேண்டும்.