காயமே இது பொய்யடா?


காயமே இது பொய்யடா?

இதை பார்த்தவுடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள வருடத்தில் முதல்வராக இருந்தவருடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.

இதில் லொயோலா(ல்) கல்லூரி என்று உள்ளது.

கல்லூரியின் பெயர் லொயோலா தான்.லால் என்றால் மார்வாடியா காலேஜ் நடத்துறான்?

இரண்டாவது இதில் உள்ள சீல் கல்லூரியின் சீல் அல்ல. அப்போது இப்படிப்பட்ட சீல் இல்லை என்றார்.

மூன்றாவது அப்போது பி ஏ விசூவல் கம்யூனிகேசன் என்று இல்லை.

பிஎஸ்ஸி விசூவல் கம்யூனிகேசன் என்றே இருந்தது என்றார்.

நான்காவது ஒரு வருடம் கூட படிக்கவில்லை. ஒரு செமஸ்டர் மட்டுமே இருந்துவிட்டு வெளியேறிவிட்டார் என்றார்.

ஐந்தாவதாக அவர் அனுப்பியது தான் மிகவும் சுவாரஸ்யம்.

என்னிடம் இதே போல் இன்னொரு அடையாள அட்டை இருக்கு என்று அனுப்பினார்.அது கமெண்டில் உள்ளது.

ஆறாவது அப்போது முதல்வராக இருந்தவர் பாதிரியார் அல்ல. இதில் Fr என்று உள்ளது.

லொயாலா கல்லூரியோடு எனக்கு நீண்ட தொடர்பு உண்டு.

இது ஒரு பிராடு அடையாள அட்டை.

அட்டை மட்டும் பிராடு இல்லை.

அட்டையில் இருப்பவனும்

அவனை புரமோட் செய்பவனும்

கேடுகெட்ட பிராடுகள்.

பிராடு என்றால் தமிழில் ஆர்எஸ்எஸ் செல்லப்பிள்ளை என்று பொருள்.

- -சூர்யா சேவியர்.





கோவை சிறுமி !!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி, காவல்துறையினரால் கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.


தற்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனால் அங்கு ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தியைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான மோகன்ராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


பின்னர் அவர், சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி மோகன்ராஜை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


இந்த கொடூர கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர்

 தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகளுக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களையும், முக்கிய தகவல்களையும் சேகரிக்கும் பணியில் தனிப்படை போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் தொடர்ந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால், மாவட்டத்தின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை சிறுமி கொலை வழக்கு: விஜய் இதுவரை ஆறுதல் கூறவில்லை; உறவினர் வேதனை

இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐஜி ரம்யா பாரதி கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவரது நண்பர் மோகன் (30) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமி கடந்த 21 ஆம் தேதி மாலை காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று மாலை சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.


இச்சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில், கார்த்திக் மற்றும் மோகன் ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்” என்றார்.


மேலும், “புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யும் போது கார்த்திக் தப்பி ஓட முயன்றபோது, அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றும் தெரிவித்தார்.


இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐஜி ரம்யா பாரதி கூறினார்.


உடற்கூறாய்வு செய்யப்பட்ட முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையான உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னர் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், இந்த கொலைக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சிறுமியின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தர காவல்துறை உறுதியாக செயல்படும் என்றும் ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை