இதன் பெயர்தான்
இதன் பெயர்தான் குதிரை பேரம்
எம்.எல்.ஏ,க்களை தூக்கிய பரபரப்பு பின்னணி
அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து தலைமை செலயகத்திலேயே தவெகவில் இணைத்து உறுப்பினர்கள் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அதிகாரப் போட்டி, தற்போது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆளும் கட்சியான தவெக தனது அரசியல் பலத்தை சட்டமன்றத்தில் அதிகரிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் திடீரென நேற்று தலைமை செயலகம் வந்தனர்.
சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை 2.30 மணிக்கு நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர். இம்மூவரும் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணிக்குச் சார்பானவர்களாக கருதப்பட்டவர்கள் என்பதால், இந்த ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னவென்றால், ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 நிமிடத்திலேயே, அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
3.55 மணிக்கு மூவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டப்பேரவை தலைவர் அறிவிக்கிறார். அதன்பின்னர் அவர்கள் 4.20 மணிக்கு முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்வு சாதாரண கட்சி தாவல் சம்பவமாக இல்லாமல், மிக திட்டமிட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், நேரடியாக எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாறச் செய்தால் ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ அமலுக்கு வரும் சூழல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், முதலில் அவர்களிடம் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் கட்சியில் இணைக்கும் யுக்தியை தவெக கையாளுகிறது.
இதன் மூலம் காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த இடைத்தேர்தலில், தற்போது ராஜினாமா செய்த அதே எம்.எல்.ஏ.,க்களை தவெக வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தி, ஆளுங்கட்சியின் நிர்வாக மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதே திட்டம் என கூறப்படுகிறது.இந்த வெற்றிகள் மூலம் சட்டமன்றத்தில் தவெக தனிப்பெரும்பான்மை பெறும் சூழல் உருவாகலாம். தற்போது ஆளும் கட்சியான தவெக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமெனில், சட்டமன்றத்தில் தனித்து பெரும்பான்மை பலம் அவசியம் என்ற கணக்கில் முதலமைச்சர் விஜய் மாஸ்டர் பிளான் என கூறப்படுகிறது.
இதன் பின்னணி யில் பாஜக திட்டமிடல் தெரிகிறது.
இதற்கிடையே, தலைமைச் செயலகத்திலேயே கட்சி இணைப்பு விழா நடைபெற்றது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசின் நிர்வாக மையமாக இருக்கும் தலைமைச் செயலகத்தில், ஆளும் கட்சியின் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுடன், புதிய உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.
‘தலைமைச் செயலகம் அரசின் அலுவலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா?’ என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், தவெக ‘குதிரை பேரம் நடத்தும் அரசியல்’ என்ற விமர்சனம் பேசப்பட்டு வந்த நிலையில் தவெக, தற்போது அதையே மிக திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
இதனிடையே, தவெக அரசு தனி பெரும்பான்மையுடன் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தும் வேண்டும் என்பதால் அதிமுகவிலிருந்து மேலும் 7 சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் இழுக்கும் முயற்சியில் தவெகவின் நிர்வாகியும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. வடமாநிலங்களில் செய்யும் வேலையை அவர்கள் ஆசியுடன் விஜய் தமிழ்நாட்டில் துவக்கியுள்ளார்.
ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறிய அமீரகம்!
, இந்தியாவின் மூலோபாய எரிசக்தி இருப்பு (Strategic Petroleum Reserve) திட்டத்தில் அந்த நாடு தொடர்ந்து பங்கேற்க உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவின் சண்டிகோல் மற்றும் படூர் பகுதிகளில் உள்ள சேமிப்பு நிலையங்களில் அமீரகம் தனது கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்கலாம்; அதேபோல், அமீரகத்தின் புஜைராவில் இந்தியா தனது எண்ணெயைச் சேமித்து வைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் (OPEC) அமைப்பிலிருந்து வெளியேறிய சில வாரங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டிருப்பது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் தேவைக்காக 87% இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவிற்கு, இந்த நகர்வு புவிசார் அரசியல் சூழலில் பெரும் சாதகமாக அமையும்.
ஐக்கிய அரபு அமீரகம் ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறியது, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அதிரடி முடிவாகும். தனது உற்பத்தி அளவை அதிகரிக்க ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள் தடையாக இருந்ததால், சொந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தி இந்த முடிவை அமீரகம் எடுத்துள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் மற்றும் செங்கடல் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் சவுதி அரேபியாவுக்கும் அமீரகத்திற்கும் இடையே நிலவிய இடைவெளி, இந்த வெளியேற்றத்தை உறுதி செய்தது.
குறிப்பாக, ஹார்முஸ் நீர்சந்தியைத் தவிர்க்கும் விதமாக இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையிலான பொருளாதாரப் பாதை (IMEC) திட்டத்தில் அமீரகம் ஆர்வம் காட்டி வருவது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். கச்சா எண்ணெய் உற்பத்திக் கட்டுப்பாடுகள் இல்லாத அமீரகம், இந்தியாவுடன் நீண்டகால அடிப்படையில் அரசுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ரூபாய்-திராம் அடிப்படையில் வர்த்தகம் செய்வது இப்போது மிகவும் சாத்தியமானது. ஏற்கனவே இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்புக் கிடங்குகள், ஹார்முஸ் நீர்சந்தி வழியாக எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது, அமீரகத்தின் ஒத்துழைப்புடன் இந்தச் சேமிப்புத் திறனை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் எண்ணெய் சேமிப்புத் திறன் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பரிந்துரைப்படி, ஒரு நாடு குறைந்தபட்சம் 90 நாட்களுக்குத் தேவையான எரிசக்தியை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
இந்தியா தற்போது இந்த இலக்கை அடையப் போராடி வருகிறது. சண்டிகோல் மற்றும் படூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி தொடர்பான காரணங்களால் திட்டங்கள் தாமதமாகி வருகின்றன.
எனவே, இனி வரும் காலங்களில் அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு இந்தத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும்.
ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளைப் போலத் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களும் கட்டாய இருப்பு வைக்க வேண்டிய அவசியத்தை உருவாக்க வேண்டும்.
ஒபெக் அமைப்பிலிருந்து அமீரகம் வெளியேறியுள்ள இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் .










