பேரத்தில் வேகம் .செயலில்

🗞️ எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சமரசம். ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம் என வேலுமணி அறிவிப்பு.🗞️ சி.வி.சண்முகத்துடன் அதிமுகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசத்துடன் புறப்பட்ட சி.வி.சண்முகம். 🗞️ அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஒற்றுமையாக இருந்து ஆராய உள்ளதாகவும் பேட்டி.🗞️ நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை.









ஒன்பது முக்கியத்துவர்கள்!

முதலமைச்சரின் டெல்லி பயணம்: தனி விமானத்தில் பயணித்த 9 முக்கியப் பிரமுகர்களின் முழு விபரங்கள் என்னென்ன என்பது தொடர்பாக இங்கு காணலாம்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், மத்திய அரசுடனான அலுவல் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்காகவும், பல்வேறு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் தேசியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார்.

முதலமைச்சரின் இந்த முதல் டெல்லி பயணம் மிக முக்கியமானதாகக் கருதப்படும் வேளையில், அவருடன் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் (Private Jet) மூலமாக டெல்லிக்குச் சென்றுள்ள 9 பேர் அடங்கிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஸ்ரீ அதிகாரப்பூர்வப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தனி விமானத்தில் பயணித்தவர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல்

முதலமைச்சரின் டெல்லி பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒன்பது நபர்களின் விபரங்கள் பின்வருமாறு: 

சி. ஜோசப் விஜய் (C. Joseph Vijay)

பி. ஜெகதீஷ் (P. Jagadish) 

விஷ்ணு ரெட்டி எர்ராதொட்டி (Vishnu Reddy Yerradoddi)

ராம்குமார் பி. (Ramkumar B)

ஜெகதீஷ் அவஸ்தி (Jagadish Awasthi)

திராஜேந்திரன் சி. (Rajendran C) 

நயீம் ஆயிட்டாண்டி கூவகண்டி (Nayeem Ayittandy Koovakandy) 

ஜி. செந்தில்குமார் (G. Senthil Kumar)

நரிசெட்டி மரியா ஜோசப் அனில் (Narisetty Mariya Joseph Anil)

 பிரதமருடனான சந்திப்பின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் தரவுகளைத் தயார் செய்தல். ஊடக மேலாண்மை: டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் தேசிய ஊடகங்களுக்கான தகவல்களை ஒருங்கிணைத்தல். 

தனி விமானம் மூலம் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ள இக்குழுவினர், முதலமைச்சரின் 2 நாள் பயணத் திட்டங்களை முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடியுடனான 30 நிமிட சந்திப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடனான சந்திப்புகளின் போது, இந்த 9 பேர் அடங்கிய குழுவில் உள்ள முக்கியச் செயலாளர்கள் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது. 

மேலும், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புகளையும் இக்குழுவினரே முன்னின்று ஒருங்கிணைக்கின்றனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு டெல்லிக்கு மேற்கொள்ளப்படும் இந்த முதல் தனி விமானப் பயணம், அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய செயலாளர்களும், திறமையான பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்கிய இந்த ஒன்பது பேர் கொண்ட குழு, டெல்லி பயணத்தை முழுமையான வெற்றிப் பயணமாக மாற்றுவதற்குக் களத்தில் இறங்கிச் செயலாற்றி வருகிறது. 

இவர்களின் டெல்லி நகர்வுகள் அனைத்தும் தற்போது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

பெயர்கள் அனைத்துமே வித்தியாசமாக மாற்றுமொழியாக உள்ளது. அனைவரும் விஜய் விளம்பரப் படுத்தும் ரூட்ஸ்,வாய்ஸ் ஆப் காமன் ஆட்களாக உள்ளார்கள்.

1150கோடி கோகைன் அதானி துறைமுகத்தில் கடத்தல்!

குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எம்வி யூரோப் என்ற கொள்கலன் கப்பல் கடலின் நடுவே இரவு நேரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது கப்பலில் இருந்து சில சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடலில் வீசப்படுவதை குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து கடலில் வீசப்பட்ட பைகளை மீட்டனர்.

இந்த பரிசோதனையில் பைகளில் இருந்த 115 கிலோ கோகைன் போதைப்பொரு

ளை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.1150 கோடி வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இணைந்து நடத்திய 15வது வெற்றிகரமான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







குதிரை வேக குதிரை பேர

 ஆட்சி இது’ என்று தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சொல்லி இருப்­ப­து­தான் நூற்­றுக்கு நூறு உண்மை ஆகும்.

தனது நாற்­கா­லி­யைத் தக்க வைப்­ப­தற்­காக அனைத்து கேவ­ல­மான

முறை­க­ளை­யும் பயன்­ப­டுத்தி வரு­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்.

நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் எந்­தக் கட்­சிக்­கும் ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்­மையை தமிழ்­நாட்டு மக்­கள் வழங்­க­வில்லை. தி.மு.க. எதிர்க்­கட்­சி­யா­கச் செயல்­ப­டும் என்­றும் ஆட்சி அமைக்­கும்

த.வெ.க.வுக்கு இடை­யூ­றாக இருக்­காது என்­றும் தொடக்­கத்­தி­லேயே

தி.மு.க. தலை­வர் தனது நிலைப்­பாட்­டைத் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற காங்­கி­ரஸ் கட்சி, உட­ன­டி­யாக த.வெ.க. ஆத­ரவு நிலைப்­பாட்டை எடுத்து வில­கி­யது. தி.மு.க. கூட்­ட­ணி­யில் இடம்­பெற்ற இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி,

விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் ஆகிய

கட்­சி­கள், ‘இன்­னொரு தேர்­தல் வரக்­கூ­டாது’ என்­ப­தால் ஆட்­சியை ஆத­ரிக்­கும் நிலைப்­பாட்டை எடுத்­தன. ஆனா­லும், ‘கொள்கை அள­வில் தி.மு.க. கூட்­ட­ணி­யில் தொடர்­வ­தா­க­வும்’ அறி­வித்­தன. பின்­னர் விடு­த­லைச்

சிறுத்­தை­கள் கட்­சி­யும், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் கட்­சி­யும் அமைச்­ச­ர­வை­யில் இடம் பெற்­றுள்­ளன. இதன் மூல­மாக பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் வலி­மையை விஜய் பெற்­றார். அத்­தோடு அமை­தி­யாக அவர் இருந்­தி­ருக்க வேண்­டும்.

இவை போதாது என்று அ.தி.மு.க.வை உடைக்­கும் செயலை விஜய் செய்­தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 25 பேரை தனி­யாக ஆக்கி அவர்­களை தங்­க­ளது ஆட்­சிக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் வாக்­க­ளிக்க வைத்­தார். ‘அமைச்­சர் பதவி தரு­கி­றோம், வாரி­யத் தலை­வர் பதவி தரு­கி­றோம் என்று ஆசை வார்த்தை காட்­டப்­ப­டு­வ­தாக’ சட்­ட­மன்­றத்­தி­லேயே எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம் சாட்டி இருக்­கி­றார். இது அவைக் குறிப்­பில் பதி­வாகி இருக்­கி­றது. எந்­தக் கீழ்த்­த­ரத்­துக்­கும் விஜய் கட்சி இறங்­கும் என்­பதை

எடப்­பாடி பழ­னி­சாமி போட்டு உடைத்­தார்.

அ.தி.மு.க. கூட்­ட­ணி­யில் இடம் பெற்ற அம்மா மக்­கள் முன்­னேற்­றக்

கழ­கத்­தின் ஒரு உறுப்­பி­ன­ரை­யும் தங்­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வ­ராக மாற்­றி­னார்­கள். அதில்­தான் எத்­தனை நாட­கங்­கள் நடந்­தன?

டி.டி.வி. தின­க­ரன் தனது கட்­சி­யின் ஒரு எம்.எல்.ஏ.வைக் காணோம் என்­றும், எனது கையெ­ழுத்தை அவர் போட்­டுள்­ளார் என்­றும் ஆளு­ந­ரி­டம் மனு தரு­கி­றார். கிண்டி காவல் நிலை­யத்­தி­லும் புகார் தரு­கி­றார். ‘நான் போக­வில்லை’ என்று அந்த எம்.எல்.ஏ.வே பேட்டி தரு­கி­றார். பின்­னர் அவரே விஜய் ஆத­ர­வா­ள­ராக மாறு­கி­றார். அந்த எம்.எல்.ஏ.வை கட்­சியை விட்டு நீக்­கி­விட்­டார் டி.டி.வி. தின­க­ரன். அப்­ப­டி­யா­னால் தின­க­ரன் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தரப்­பட்ட வாக்­கு­றுதி என்ன?

‘முத­ல­மைச்­ச­ரைச் சந்­திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்­றது யார்?’ என்று சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் விஜய்க்கு நேரா­கக் கேள்வி கேட்­டார் தே.மு.தி.க. பொதுச்­செ­ய­லா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த். சபை­யில்

உட்­கார்ந்து இருந்த முத­ல­மைச்­சர் விஜ­யால் பதில் சொல்ல முடி­ய­வில்லை.

இப்­படி ஒட்­டுப்­போட்ட கந்­தல் துணி­யைப் போல ஒரு ஆட்­சியை அமைத்­து­விட்டு, ஆட்­சியை ஒழுங்­காக நடத்­தா­மல் - சட்­டம் ஒழுங்கை சந்தி சிரிக்க விட்டு, மிக­மிக ஏமாற்­றத்தை வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு கொடுத்து வரு­கி­றார் விஜய்.

தினந்­தோ­றும் கொலை­கள், பாலி­யல் வன்­மு­றை­கள், நிர்­வா­கச் சீர்­கே­டு­கள், மின்­வெட்­டு­கள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­கள். இவை தான் நாம் பார்க்­கும் காட்­சி­கள் ஆகும். சமூக வலை­த­ளங்­க­ளைத் திறந்­தாலே இந்த ஆட்சி மீதான ஆக்­ரோ­ஷ­மான எதிர்ப்­புக் குரல்­கள்­தான் அதி­கம் ஒலிக்­கி­றது. இவை எது­வும் விஜய் காதில் விழுந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

நிர்­வா­கத்தை ஒழுங்­கு­ப­டுத்த முனை­ய­வில்லை. மாறாக ஆடிக் கொண்­டி­ருக்­கும் தனது நாற்­கா­லி­யைச் சரி செய்­வ­தி­லேயே அவர்­க­ளது எல்­லாக் கவ­ன­மும் இருக்­கி­றது. அ.தி.மு.க. சார்­பில் வென்று, அ.தி.மு.க.வின் நிலைப்­பாட்­டுக்கு மாறாக த.வெ.க. ஆட்­சியை ஆத­ரித்து வாக்­க­ளித்த மூன்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பதவி விலக வைக்­கப்­பட்­டுள்­ளார்­கள். பதவி வில­க­லைக் கொடுத்த சில நிமி­டங்­க­ளில் அவர்­கள் த.வெ.க.வில் இணைந்­துள்­ளார்­கள். எதற்­காக அவர்­கள் பதவி விலக வைக்­கப்­பட்­டுள்­ளார்­கள்? குதிரை பேரத்­தால் உரு­வான ஆட்சி என்று அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும் சொன்­னார்­கள். அது சரி தான் என்­பது மெய்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர் பதவி, வாரி­யத் தலை­வர் பதவி என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்­பட்டு, ஆட்­சிக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வைக்­கப்­பட்­ட­வர்­கள் மீண்­டும் அ.தி.மு.க.வில் இணை­கி­றார்­கள். இன்­னொரு தரப்பு தனது பத­வியை விட்டு விலகி த.வெ.க.வில் இணை­கி­றது. இவர்­கள் அனை­வ­ரும் சேர்ந்து ஆத­ரித்த ஆட்சி செல்­லத்­தக்க ஆட்­சியா? நம்­பிக்­கைக்­கு­ரிய ஆட்­சியா? ரக­சிய பேரங்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட ஆட்சி இது. இந்த ஆட்சி மக்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டாது. தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்­வ­தி­லேயே காலத்­தைப் போக்­கிக் கொள்­ளும். இது மக்­க­ளுக்­கான ஆட்சி அல்ல. அவர்­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­ளும் ஆட்­சியே ஆகும்.

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆத­ரித்து வாக்­க­ளித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 உறுப்­பி­னர்­கள் மீண்­டும் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மையை ஏற்­றுக் கொண்டு போய்­விட்­டார்­கள். த.வெ.க.வை ஆட்சி அமைக்க ஆத­ரித்து வாக்­க­ளித்த 3 உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது பத­வியை விட்டு விலகி இருக்­கி­றார்­கள். இதன் மூல­மாக ஆட்­சிக்­காக ஆத­ர­வ­ளித்த 8 வாக்­கு­கள் குறைந்­துள்­ளது. இந்த எண்­ணிக்கை நாளுக்கு நாள் குறை­யவே செய்­யும்.

சபா­நா­ய­க­ரின் அறைக்கு போய் பதவி வில­கு­கி­றார்­கள். அமைச்­சர் அறைக்­குச் சென்று கட்­சி­யில் சேர்­கி­றார்­கள். இதை­வி­டக் கேவ­லம் இருக்க முடி­யுமா?

விஜய் கூறிய தூய அர­சி­யல் மடிந்து விட்­டது. தொடக்­கத்­தி­லேயே முடிந்­து­விட்­டது. குதிரை பேரங்­கள் மூல­மாக ஆட்­சி­யைத் தக்க வை🐢🐢க்க நினைக்­கும் விஜய்யை மக்­களே விரட்­டு­வார்­க

😞
பேரத்தில் வேகம் .செயலில்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை