சைலன்ட் மோட்?

 



சைலன்ட் மோட்?

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடலூரில் 25 வயது மதிக்கப்பட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதுபோல தமிழ்நாட்டில் தினம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்து வருகின்றது.

அரசு என்ன செய்கிறது ?

என திமுக ,அதிமுக ஆகியோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். 

அவர் வெளியிட்ட பதிவில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோல தொடர்ச்சியாக நாடாகும் குற்ற சம்பவங்களை பார்க்கும்போது ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கின்றதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை. 

இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைனு குற்றங்கள் நடக்காதே நாளே இல்லை.

தேர்தல் பரப்புரையின் போது பக்கம் பக்கமாக சட்டம் ஒழுங்கு பற்றி வாய்கிழிய வசனம் பேசி, பன்ச் டயலாக் பேசியவர் தற்போது முதலமைச்சராக ஆனதும் deep sleep mode க்கு போய்ட்டாரு என முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசி விமர்சனம் செய்து இருக்கின்றார்.

 மேலும் தவெகஅரசு அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப்படை துவக்க விழா ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்தும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதாவது ,பெண்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் அறிவித்த சிங்கப்பெண் படையோடு துவக்க விழாவை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளீர்கள்.

அதை விட்டு,விட்டு விஜய் மேலாளர் புதுவீடு திறப்பு விழாவில் கலந்துகொள்வது அவ்வளவு முக்கியமா?

 நிகழ்ச்சியை மட்டும் தள்ளி வைத்துள்ளீர்களா ? அல்லது அந்த முயற்சியையும் தள்ளி வெச்சுடீங்களா ? என மக்கள் கேட்கின்றார்கள்.

சிங்கப்பெண் படை என பெயரையும் uniform -ஐ மாத்துவது தான் மாற்றமா ?இல்லையென்றால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவகாசம் வேண்டுமா ?

நீங்க டைம் எடுத்துக்கிட்டு கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார் என சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கின்றார்.

 எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின். இதற்கு தவெகவினர் என்ன பதிலளிக்க இருக்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தவெக அரசுக்கு டைம் கொடுக்க வேண்டும் என மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் சொன்னது உண்மை தான். ஆனால் அந்த தாய்மை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு கொடுக்க முடியுமா ? என்பது தான் கேள்வியாக உள்ளது. 

ஏனென்றால் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நடந்து தான் வருகின்றது. 

இந்த விமர்சனங்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் தவெக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தான் முதல் கடமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பொதுவான மக்கள் சொல்கின்றனர்.

 குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பபு மிக அவசியம் என்பது தான் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை தவெக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கோவை சம்பவத்தின் போதே இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்க கூடாது ? அதன்படி செயல்படுவோம் என்றனர் தவெகவினர். 

அதனைத்தொடர்ந்து தற்போது கடலூரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை தவெக முதலில் உறுதி செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் வலியுறுத்தலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை