சென்றார்!வந்தார்!

🔹  ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும்  விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம்.🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி.🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார்.🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம்.🔹 அடுத்த 4 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.🔹 சென்னையில் டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய ஓட்டல் மேலாளர். போலீசார் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு🔹 பொன்னேரி அருகே சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.🔹 உதகை அருகே மாயார் சாலையில் இரண்டு குட்டிகளுடன் சாலையை கடந்த தாய் புலி. குட்டிப்புலிகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த வாகன ஓட்டிகள்.🔹 கியூட் தேர்வு குளறுபடிக்கு வருத்தம் தெரிவித்தது தேசிய தேர்வு முகமை. தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 3,765 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.🔹 டெல்லியில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது. டெல்லி, மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தகவல்.

சென்றார்!வந்தார்!!

நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல், ‘விஜய் நாளை டெல்லி பயணம்’ என்ற செய்தியை தினந்தோறும் தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. அவருக்காக டெல்லி காத்திருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்க இவர்கள் திட்டமிட்டார்கள்.

 விஜய்யைவிட அதிகமவே இவர்கள்(ஊடகபிழைப்புவாதிகள்) கூவினார்கள்.

இருபது நாட்கள் கழித்துத்தான் அவருக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. 

பிரதமரைச் சந்திக்கிறார், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார். நிதி அமைச்சரைச் சந்திக்கிறார், சோனியாவைச் சந்திக்கிறார், ராகுலைச் சந்திக்கிறார் என்று இரண்டு நாட்களுக்காக பயணத்திட்டத்தை ஊடகங்கள் வெளியிட்டன.

 ‘இது மரியாதை நிமித்தமான பயணம் மட்டுமல்ல; மரியாதையை உயர்த்தப் போகும் பயணம்’ என்றெல்லாம் ஊடகங்கள் அதிகமாக அலப்பறைகள் செய்தன. இவை எதுவும் நடக்கவில்லை.

பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

அதுவும் பத்து நிமிடத்துக்குள் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது. இருதரப்புக்குமான நலம் விசாரிப்புடன் இந்தச் சந்திப்பு முடிந்து விட்டது. இது முதல் தோல்வி.

உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்தான் இருந்தார். விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால் அது ரத்து செய்யப்பட்டது.

 ஆனால் அன்றைய தினம் கேரள முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். 

கோவா முதலமைச்சரை அமித்ஷா சந்தித்துள்ளார். 

நாகலாந்து ஆளுநரை அமித்ஷா சந்தித்துள்ளார்.

 தமிழ்நாட்டு முதலமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். அமித்ஷா – விஜய் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

 ‘வேறு அலுவல்களில் உள்துறை அமைச்சர் இருக்கிறார்’ என்றும், ‘குஜராத் செல்கிறார்’ என்றும் சொல்லப்பட்டது. 

திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்துள்ளார். இது இரண்டாவது தோல்வி ஆகும்.

செய்தியாளர்கள் சந்திப்பைத் திட்டமிட்டுப் புறக்கணித்திருக்கிறார் விஜய். அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வரும் போதும், பிரதமரைச் சந்திக்கச் செல்லும் போதும், பிரதமரைச் சந்தித்துவிட்டு வரும்போதும், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போதும் ஊடகவியலாளர்கள் விஜய்யைப் பார்த்து குரல் எழுப்புகிறார்கள். ‘பிரஸ் மீட் பண்ணுங்க சார்’, ‘எல்லா முதலமைச்சர்களும் பிரஸ் மீட் பண்ணுவாங்க சார்’ என்று குரல் எழுப்புகிறார்கள். அதைக் காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

விஜய் பதில் அளிக்காததால் டெல்லி செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்காத முதலமைச்சராக விஜய் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

டெல்லிப் பயணத்தின்போது செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திப்பது மரபு. அந்த மரபை அவர் மீறி இருக்கிறார். அலட்சியப்படுத்தி இருக்கிறார். டெல்லி ஊடகங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்.

இருபது நாட்களில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றியும், தான் ஆட்சி அமைக்க நடத்திய இழிவான குதிரை பேரங்கள் குறித்தும் ஊடகங்களுக்குப் பதில் சொல்ல தன்னால் முடியாது என்பதால் ஊடகங்களை விஜய் சந்திக்கவில்லை.

கரூர் சம்பவத்தின்போது பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்த விஜய் இன்று முதல்வராக இருக்கும் நிலையிலும் பத்திரிகையாளர்களைக் கண்டு அஞ்சுவது ஏன்?

கட்சி மேடைகளில் மட்டும் வீர வசனம் பேசும் விஜய் பிரதமர் சந்தித்தது குறித்து கருத்து சொல்லத் தயங்குவது ஏன்?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து மனு கொடுத்துள்ளார் விஜய். நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், இல்லாத திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். 

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. ஒன்றிய அரசு நிராகரித்துள்ள மதுரை, கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார் விஜய்.

 மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தித் தாருங்கள் என்றுதான் அவர் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களான சோனியாவையும் ராகுலையும் விஜய் சந்திப்பார் என்பது மிகப்பெரிய செய்தியாகப் பேசப்பட்டது. 

ஆனால் அவர் அவர்கள் இருவரையும் சந்திக்கவில்லை. ‘சென்னைக்கு அவசரமாகத் திரும்ப வேண்டி இருந்ததால் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை’ என்று அரசு வட்டாரங்கள் சொன்னது. ‘சோனியாவும், ராகுலும்

வேறு பணிகளில் இருக்கிறார்கள்’ என்று காங்கிரஸ் தரப்பு சொல்கிறது. திட்டமிட்ட பயணத்தை நடத்த முடியாத அளவுக்கு இவை முக்கியமான காரணங்கள் அல்ல.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் விழாவுக்கும் வருவதாகச் சொல்லிவிட்டு ராகுலுக்கு அல்வா கொடுத்தார் விஜய். இப்போது சோனியா வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு, வராமல் திரும்பி இருக்கிறார் விஜய். இதன்பிறகுமா காங்கிரஸுக்கு உள் விவகாரங்கள் புரியவில்லை?

‘காங்கிரஸின் 5 உறுப்பினர் ஆதரவைப் பெற்றாச்சு, அதுக்கு ரெண்டு மந்திரி தந்தாச்சு’ என்பதோடு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் விஜய். ‘நம்பிக்கைத் துரோக’ காங்கிரஸுக்கு அதற்குப் புரியும் வகையில் பதில் சொல்லி விட்டார் விஜய் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

 விஜய்க்காகக் காத்திருந்து ராகுல் ஏமாந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய் திட்டமிட்டே காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பைத் தவிர்த்துள்ளார். இதன்மூலம் அவர் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

மக்கள் செல்வாக்கை முழுமையாகப் பெற்ற முதலமைச்சர் அல்ல; குதிரை பேரத்தின் மூலமாகத்தான் முதலமைச்சர் ஆனவர் என்பது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரியும்.

 அதனால்தான் விஜய்யை அவர்கள் மதிக்கவில்லை. இப்படி அவரது முதல் டெல்லி பயணமே தோல்வியாகவும் அவருக்கு மிகப்பெரிய சறுக்கலாகவும் அமைந்துள்ளது.




கருப்பு நீதிமன்ற விவாதம்?

­ கருப்பு திரைப்படத்தை தமிழ்­வேந்­தன் உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த வழக்கை தள்­ளு­படி செய்து நீதி­ப­தி­கள் ஜி.ஆர்.சுவா­மி­நா­தன், வி.லட்­சுமி நாரா­ய­ணன் அடங்­கிய அமர்வு கடந்த வாரம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

கருப்பு திரைப்­ப­டத்­தின்

கதைக்­க­ளம்!

அந்த உத்­த­ர­வில் நீதி­ப­தி­கள், கருப்பு திரைப்

படத்­தின் கதைக் களம் என்­பது ஏழு கிணறு என்ற இடத்­தில் அமைந்­துள்ள ஒரு நீதி­மன்­றம். அதில் இருக்­கும் தலைமை நீதி­பதி ஊழல்­வா­தி­யா­க­வும், தொழில் நெறி­மு­றை­யற்ற வழக்­க­றி­ஞர் ஒரு­வர் நீதி­மன்­றத்­தின் செயல்­பா­டு­கள் மீது அள­வற்ற அதி­கா­ரத்­தைச் செலுத்­து­வ­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. நீதித்­து­றை­யில் ஊழல் இருக்­கி­றது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. ஊழல் நீதி­ப­தி­கள் இருந்­தார்­கள், இருக்­க­வும் செய்­கி­றார்­கள். நீதி­ப­தி­களை புனி­த­மா­ன­வர்­க­ளாக கருத வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

நீதித்­து­றை­யில் ஊழல் என்ற கூற்­று­களை நாங்­கள் முழு­மை­யாக ஆத­ரிக்­க­வில்லை. நீதித்­துறை ஊழல் நிகழ்­வு­களை அறி­வோம், எதிர்­கொண்­டும் இருக்­கி­றோம். சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் முழு அமர்­வும் இது­போன்ற கருப்பு ஆடு­களை தவ­றா­மல் வெளி­யேற்­றிக்­கொண்­டு­தான் இருக்­கி­றது. வழக்­க­றி­ஞர்­கள் சங்­கத்­தின் சில உறுப்­பி­னர்­க­ளுக்கு ஊழல்­வா­தி­க­ளு­டன் தொடர்பு இல்­லா­மல், நீதித் துறை­யில் ஊழல் நிகழ முடி­யாது.

ஒரு கலைஞனுக்கான

சுதந்­தி­ரம் வேண்­டும்!









ஊழல்­வா­தி­க­ளைப் பிடிப்­ப­தற்­கும், நிலை­மையை உரிய முறை­யில் கையா­ளு­வ­தற்­கும் உயர் நீதி­மன்­றத்­தின் விழிப்

பு­ணர்வு கண்­கா­ணிப்பே ஆதா­ர­மாக விளங்­கு­கி­றது. எந்­த­வொரு சிறப்­புத் திரை­யி­ட­லை­யும் ஏற்­பாடு செய்­யு­மாறு தயா­ரிப்­பா­ள­ரி­டம் கேட்­கா­மல், கருப்பு படத்தை எங்­க­ளில் ஒரு­வ­ரான நீதி­பதி ஜி.ஆர்.சுவா­மி­நா­தன் பார்த்­துள்­ளார். ஒரு நெறி­மு­றை­யற்ற வழக்­க­றி­ஞ­ருக்­கும், ஊழல் நீதி­ப­திக்­கும் இடை­யி­லான தீய கூட்­ட­ணியை கொண்ட கருப்பு திரைப்­ப­டத்­தில், நீதித் துறை அமைப்பு மிகைப்­ப­டுத்தி சித்­த­ரிக்­கப் பட்­டுள்­ளது என்­பது உண்­மை­தான்.

ஆனால், தமி­ழில் திரைப்­ப­டங்­கள் அப்­ப­டித்­தான் பார்க்­கப்­ப­டு­கின்­றன. தன்­னைச் சூழ்ந்­தி­ருக்­கும் டஜன் கணக்­கான வில்­லன்­களை கதா­நா­ய­கன் தனி ஒரு­வ­னாக வீழ்த்­து­வான். தமிழ் சினி­மா­வில் எல்­லாமே மிகை உணர்ச்சி கொண்­டது. எனவே, ‘கருப்பு’ படத்­தை­யும் ஒரு தனித்­து­வ­மான படைப்­பா­கவே பார்க்க வேண்­டும். எப்­ப­டி­யி­ருந்­தா­லும், ஒரு கலை­ஞன் தனது சொந்த வழி­யில் தன் படைப்பை வழங்­கு­வ­தற்கு தரப்­பட்ட உரி­மையே கலைச் சுதந்­தி­ரம் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.

ஒரு கலைப் படைப்பு முற்­றி­லும் வேறு­பட்ட தரா­சில் எடை­போ­டப்­ப­டும். ஒரு கலை­ஞ­னுக்கு அதிக செல்­வாக்­கும் சுதந்­தி­ர­மும் உண்டு. ஒரு கார்ட்­டூ­னிஸ்­டுக்கு எது பொருந்­துமோ அது ஒரு திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ருக்­கும் பொருந்­தும். அவர் வழங்­கும் கதை­யில் மிகைப்­ப­டுத்­தல் இருக்­கும். தவ­று­கள் இருக்­கும். அது முற்­றி­லும் புனை­க­தை­யா­க­வும் இருக்­க­லாம் அல்­லது ஒரு செய்­தி­யைக் கொண்­டி­ருக்­க­லாம் அல்­லது பொழு­து­போக்­கு­டன் மட்­டும் நின்­று­வி­ட­லாம். ஒரு கதையை வழங்­கும் வித­மும், வழங்­கும் உள்­ள­டக்­க­மும் படைப்­பா­ளி­யி­டமே விடப்­பட வேண்­டும்.

படைப்­பாற்­றல்

மதிக்­கப்­பட வேண்­டும்!

படைப்­பாளி தடை­செய்­யப்­பட்ட பகு­தி­க­ளுக்­குள் நுழை­யாத வரை படைப்­பாற்­றல் மதிக்­கப்­பட வேண்­டும். கருத்து சுதந்­தி­ரம் என்­பது ஒரு­வ­ரின் கருத்தை வாய்­மொழி, எழுத்து, அச்சு, படம் அல்­லது வேறு எந்த வகை­யி­லும் வெளிப்­ப­டுத்­தும் உரிமை ஆகும். இது தக­வல் தொடர்பு சுதந்­தி­ரம் மற்­றும் கருத்­தைப் பரப்­பு­வ­தற்­கான அல்­லது வெளி­யி­டு­வ­தற்­கான உரி­மை­யை­யும் உள்­ள­டக்­கும்.

கருப்பு திரைப்­ப­டம் நீதி­மன்ற அவ­ம­திப்பை உள்­ள­டக்­கி­யது இல்லை என்ற கருத்­தின் அடிப்­ப­டை­யில், தணிக்­கைச் சான்­றி­தழ் வழங்­கி­யி­ருக்­கும்­போது நீதிப்­பே­ராணை நீதி­

மன்­றம் அதன் கருத்தை மாற்­றி­ய­மைக்­காது. நாம் இப்­போது சமூக ஊட­கங்­க­ளின் காலத்­தில் இருக்­கி­றோம். ஒரு கொடூ­ர­மான கூற்று கூறப்­பட்­டா­லும், அதைப் புறக்­க­ணிப்­பதே நல்­லது. நீதித்­து­றைப் பய­ணம் முன்­னோக்­கிச் செல்ல வேண்­டும். ராமா­ய­ணத்­தில் ராம­னின் அம்­பில் சிக்­கிய தவ­ளையை போல, நீதி­மன்­றமே விழிப்­பு­டன் இருக்­கும் காவ­ல­னாக நிற்­கி­றது.

நீதி­மன்ற அவ­ம­திப்­பாக

கருத வேண்­டி­ய­தில்லை!

அது குடி­மக்­க­ளின் சுதந்­தி­ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் எந்­த­வொரு உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­கக் கூடாது. கருப்பு படத்­தின் இயக்­கு­னர் ஆர்.ஜெ.பாலாஜி, கதா­நா­ய­கன் சூர்யா, நடிகை திரிஷா ஆகி­யோர் நீதித்­துறை அமைப்பை அவ­ம­தித்­துள்­ள­தால், அதை குற்­ற­வி­யல் நீதி­மன்ற அவ­ம­திப் பா­கக் கருதி தகுந்த வழி­காட்­டு­தல்­களை வழங்க வேண்­டும் என்று மனு­தா­ரர் தமிழ்­வேந்­தன் தரப்­பில் வாதி­டப்­பட்­டா­லும் இதை நீதி­மன்­றம் ஏற்­க­வில்லை.

ஆர்.கே.நாரா­ய­ண­னின் படைப்­பு­க­ளில் மால்­குடி என்­பது ஒரு கற்­ப­னைக் கிரா­ம­மாக இருப்­பது போலவே, கருப்பு படத்­தின் ஏழு கிணறு நீதி­ மன்­ற­மும் ஒரு கற்­ப­னை­யா­ன­தா­கும். ஒரு கற்­ப­னை­யான நீதி­மன்­றத்­திற்­குத் தலைமை தாங்­கும் நபர் ஊழல்­வா­தி­யா­கச் சித்­த­ரிக்­கப்­ப­டும்­போது, அது 1971ம் ஆண்டு நீதி­மன்ற அவ­ம­திப்­புச் சட்­டத்­தில் உள்ள தண்­டனை விதி­க­ளின் கீழ் வராது.

அவ்­வாறு கற்­ப­னை­யாக சித்­த­ரிக்­கப்­பட்ட நீதி­மன்­றத்­தில் ஊழல் என இயக்­கு­நர் கூறி­யுள்­ளாரே தவிர, ஒட்­டு­மொத்த நீதித்­துறை அமைப்­பையே ஊழல் நிறைந்­த­தா­கச் சித்­த­ரிக்­க­ வில்லை என்­ப­தை­யும் கவ­னிக்க வேண்­டும். எனவே, கருப்பு படத்தை தடை செய்­யக் கோரிய வழக்­கில் முகாந்­தி­ரம் எது­வும் இல்லை என்­ப­தால் மனு தள்­ளு­படி செய்­யப்

ப­டு­கி­றது என்று உத்­த­ர­

விட்­ட­னர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை