கனமழை தொடரும்!

18 மாவட்டங்களில் கனமழை -
வானிலை மையம் தகவல்
வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிாி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுாி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், தேனி, நீலகிாி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சி.பி.எம் சண்முகம் கண்டனம்
திருவள்ளுவரை சனாதனி என வரையறுக்கும் ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது.
எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமதிக்கும் செயல் என சி.பி.எம் மாநில செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாகக் குறைந்து சரிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக ஜூன் மாதத்தில் உரிய நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குவங்கம் ஹூக்ளி பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்; நேற்று அபிஷேக் பானர்ஜி எம்.பி. தாக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், இன்று கல்யாண் பானர்ஜியின் தலையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தார்.
இந்த அசம்பாவிதத்தின் போது போராட்டக்காரர்கள் கல்யாண் பானர்ஜிக்கு எதிராகக் கறுப்புக் கொடிகளை ஏந்தித் திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
வெள்ள அபாய எச்சரிக்கைமொத்தம் 52 அடி உயரம் கொண்ட கிருஷ்ணகிரி கேஆர்பி (KRP) அணையின் நீர்மட்டம் தற்போது 50 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வினாடிக்கு வரும் 527 கனஅடி உபரி நீர் அப்படியே முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது
அணையை கட்ட முற்படும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஒன்றிய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினருடன் இணைந்து சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) மற்றும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று கர்நாடக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அடுத்தடுத்து பயங்கர விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சேஸ் (Chassis) சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் மாரிமுத்து (37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளான அந்த சேஸ் மீது ஆம்னி பேருந்து மோதியதால் அது எதிர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, அங்கு வந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியதில் லாரி ஓட்டுநர் சுதர்சனும் (21) பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அடுத்தடுத்த தொடர் விபத்துகளில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நாளை வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி பதவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜூன் 1) தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8-ந் தேதி கடைசி நாள் என்றும், ஜூன் 11-ந் தேதிக்குள் வேட்புமனுவை திரும்ப பெறலாம் என்றும், ஜூன் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது
பேருந்து இல்லை - 10 மணி நேரமாக காத்திருந்த மதுரை பயணிகள் போராட்டம்
மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 10 மணி நேரமாக சென்னை, திருச்சிக்கு பேருந்து இல்லை என பயணிகள் போராட்டம் நடத்திய நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் காத்திருக்கிறோம் என பயணிகள் ஆவேசமடைந்துள்ளனர்

.தூத்துக்குடி/ பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி அராஜகம் செய்த கஞ்சா போதை கும்பல்.
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் அருகே சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்து பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி அராஜகம் செய்த கஞ்சா போதை கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளர்.
சென்னை கோயம்பேடு பார் மோதல் - இலங்கை தமிழ் பெண் கொலை
கோயம்பேடு பாரில் ஏற்பட்ட தகராறில் இலங்கை தமிழ் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பவுன்சர்கள் இருதரப்பையும் பாரை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
ஆனால், சாலையில் மோதல் நடந்ததால், பைக் மீது காரை ஏற்றியதில் இலங்கை தமிழ் பெண் யான்சி உயிரிழந்தார், கார் மோதியதில் யான்சியுடன் வந்த சிறுமிக்கு பலத்த காயமடைந்த நிலையில், மோதல் தொடர்பாக ஒருவரை பிடித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல், சிகிச்சை அளிக்க கூடாது என பா.ஜ.க அரசு மிரட்டல் -மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கச் சென்றபோது முட்டை மற்றும் கற்களால் உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காயமடைந்த அபிஷேக் பானர்ஜிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளை பாஜக அரசு மிரட்டுகிறது. ஆட்சியாளர்களே கொலையாளிகளாக மாறிவிட்டனர் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நெல்லையில் ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து - 20-க்கு மேற்பட்டோர் காயம்
வேளாங்கன்னியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, நெல்லையை அடுத்து பென்னாக்குடி பகுதியில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அனைவரும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





