நம்பிக்கைத் துரோகம்?

போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முந்தைய தி.மு.க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

- திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டு.மயிலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள அதிமுகவின் சி.வி.சண்முகம் தற்போது வகிக்கும் மாநிலங்களவை எம்.பி. பொறுப்பை இன்று ராஜினாமா செய்ய உள்ளார்.டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்றிரவு சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார்.ஆளுநரை எல்லாக் கட்சிகளும் கண்டிக்கின்றன. நேற்று கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் போராட்டமே அறிவித்துவிட்டது. ஆனால் தவெக அமைதியாக இருக்கிறது. விஜய் தயங்குகிறார்" -ஆளூர் ஷாநவாஸ்ஆளுநர் அர்லேக்கர் உடன் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரும் சந்திப்பு.தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து டி.ஜி.பி. விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.திருவண்ணாமலை மாநகராட்சி பணியை தடுத்து நிறுத்தி குடிபோதையில் அராஜகம் செய்த தவெக ரசிகர்.


அரசனை நம்பி ?

நம்பிக்கைத் துரோகம்?

தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று இருக்கின்றனர்.

 இந்த  வெற்றியை தொடர்ந்து அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்பதால் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையில் காங்கிரஸ் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைத்தார்கள். தான் ஆட்சியமைக்க ஆதரவு கோரி விஜய் காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுக்கு அழைத்து கடிதம் விடுத்தார்.அந்த அழைப்பு கடிதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக உறுதியளித்தார்கள். இதன் மூலம் தற்போது தவெகவிடம் 113 இடங்கள் இருக்கின்றன. எனவே தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு விஜய் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார்.

 ஆனாலும் தனிப்பெரும்பான்மையை விஜய் இன்னும் நிரூபிக்கவில்லை என கூறி அவரை பதவியேற்க ஆளுநர் அழைக்கவில்லை.

கூட்டணி என விஜய்குறிப்பிட்டு இருப்பதால் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால் 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்பதால் விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதற்கு பலதரப்புகளில் இருக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் நாளை காங்கிரஸ்ஆளுநர் மற்றும் பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. 

அவரது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது என்னவென்றால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 

ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார்.அர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம். 

அத்துடன் சென்னை மாவட்ட அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அறிக்கையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துக்கொண்டார் செல்வப்பெருந்தகை.

மேலும் அவர் கூறியது, நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர் என அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் இதெல்லாம் பாஜகவின் திட்டம் தான் என கூறி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் மறைமுக செயல்களால் தான் தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க இதுவரை அழைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி உட்பட அனைவரும் கூறி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து தற்போது மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கியிருக்கின்றனர். இதில் தவெகவினரும் கலந்துகொள்வார்களா ? என தெரியவில்லை. 

ஒருபக்கம் தவெகவினர் ஆளுநரை எதிர்க்கவே இல்லை என கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. 

 காங்கிரஸ்  ஆளுநரை எதிர்த்து வரும் நிலையில் தவெகஅமைதியாக இருப்பது ஏன் ? என்ற கேள்வியையும் சிலர் முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அறிவித்த அனைத்துக் கட்சிப் போராட்டங்களில் மெயரளவில் தலையைக்காட்டும் காங்கிரஸ் இப்படி போராடும் அளவு துணியக் காரணம் என்ன?
அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான் காரணம்?
ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன?

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். 

ஆனால், ஆளுநர் அழைக்காததால் இன்று மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடந்தப்பட்டது.இரண்டாவது முறையாக ஆளுநரை விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருந்தது. இதில்,ஆளுநர் மாளிகை தரப்பில் முக்கிய விளக்கம் வெளியாகியுள்ளது. 

தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபித்தால்,உடனடியாக பதவிப்பிரமாண நிகழ்வை நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து,தவெக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒரு வேலை விஜய் பெரும்பான்மையை விஜய் நிருப்பிக்காவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்படும்.இது குறித்து பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பின் 356வது பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு விதிகளின்படி அரசு சரியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

 இதை விதிக்க வேண்டுமா என்பதை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். அந்த மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, நிர்வாகம் போன்றவை பாதிக்கப்பட்டு அரசு இயங்க முடியாத சூழல் ஏற்பட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு, மாநில அரசின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்கு செல்கின்றன. 

முதல்வர் தலைமையிலான அரசு செயலிழக்கிறது. மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக செயல்பட்டு மாநில நிர்வாகத்தை நடத்துவார்.மேலும், மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்படும். 

அவசர தேவைகளுக்கு ஏற்ப ஒன்றிய அரசு நேரடியாக மாநிலத்தை நிர்வகிக்கும் சூழல் உருவாகும். ஆளுநருக்கு உதவியாக தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசு நியமிக்கும் ஆலோசகர்கள் செயல்படுவார்கள்.

இந்த ஆட்சி முதலில் ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தப்படும். 

பின்னர் தேவையென்றால் சிறப்பு சூழ்நிலைகளில் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். 

ஆனால் அந்த காலத்திற்குள் மாநிலத்தில் மீண்டும் நிலையான அரசு அமைக்கப்பட்டு, அரசியலமைப்பு இயந்திரம் இயல்பான நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை