பணக்காரர்-குற்றவாளிபிரதிநிதிகள்!

 

குற்றவாளி பிரதிநிதிகள்!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

  இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி. அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாணப் பத்திரத்தில், 233 எம்எல்ஏக்களில் 126 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 54 சதவீத பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக 56 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 24% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒரு எம்.எல்.ஏ. தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.  

இந்த பட்டியலில், அதிகபட்சமாக தேவைக் கோரல் எம்.எல்.ஏ.க்கள் 107 பேரில் 41 அதாவது 38% பேர் இடம்பெற்றுள்ளனர். 

காங்கிரஸ் 5-இல் 3  அதாவது 60%  பேர், திமுக 59-இல் 37  அதாவது 63% பேர், அதிமுக 47-இல் 33 அதாவது 70% பேர், பாமக 4-இல் 4 100% பேர் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

பணக்கார பிரதிநிகள்!

224 வேட்பாளர்களின் சுயவிவரப் பிரமானங்களை ஆய்வு செய்தபோது 192 பேர் கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு என்று ஆய்வு அறிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலின் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பின் போது தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி. அருண்குமாரின் ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 193 எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு 48.35 கோடி என ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டது.

அதிகபட்சமாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் லீமாரோஸின் சொத்துமதிப்பு ரூ.58,637+ கோடி எனவும், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போயிட்டு வென்ற தமிழக வெற்றி கழகத்தலைவர் ச. ஜோசப் விஜயின் சொத்துமதிப்பு ரூ.648+ கோடி மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தவெக வேட்பாளர் அதவ்அர்ஜுனா அவர்களின் சொத்து மதிப்பு ரூ.534 கோடி எனவும் கணக்கிடப்பட்டது.

குறைந்தபட்சமாக ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் தாஹிராவின் சொத்துமதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் குறைவாகவும், 

மயிலம் தொகுதி தவெக வேட்பாளர் கே. சிவகுமாரின் சொத்துமதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவும், திருத்துரைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூ வேட்பாளர் கே.மாரிமுத்து ரூ. 13 லட்சத்திற்கும் குறைவான சொத்து மதிப்புகளை வைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு அதிமுக ரூ.152.89.., தவெக ரூ.27.09.., திமுக ரூ. 14.34 கோடி ஆகும்.

 கேரள முண்பாடு?

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் தேர்தல் இழுபறிக்கு காங்கிரஸ் தலைமையால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.


நான்கு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சிப் பார்வையாளர்களான அஜய் மேக்கன் மற்றும் முகுல் வாஸ்மிக் ஆகியோர் கேரளா சென்று, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். ச

ட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை தலைமையிடமே விட்டுவிட முடிவு செய்யப்பட்டது.

பார்வையாளர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் சமர்ப்பித்திருந்தனர்.


கேரளாவின் புதிய முதல்வரின் பெயரை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க தலைமை முடிவு செய்திருந்தது. இருப்பினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சன்னிகலா ஆகியோருக்கு இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால், யாரை முதலமைச்சராக நியமிப்பது என்பதில் மேலிடம் குழப்பத்தில் உள்ளது.


இந்த மூன்று தலைவர்களும் முதலமைச்சர் பதவியைக் கோரி வருகின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்தி, முதலமைச்சர் பதவிக்கு ஒருவரின் பெயரை இறுதி செய்ய மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், கேரளாவில் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று முதல் இரண்டு முறை சந்தித்துள்ளனர், ஆனால் அவர்களால் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு முதலமைச்சர் வேட்பாளர் ஆதரவு இருந்தபோதிலும், சக்திவாய்ந்த தலைவர்களான வி.டி. சதீஷனும் ரமேஷ் சன்னிகலாவும் தங்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (UDF) கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக், சதீஷனுக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. எனவே, கேரள முதலமைச்சர் தேர்வு மேலிடத்திற்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த மூவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் கோஷ்டி அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மேலிடம் மூவரிடமும் கலந்தாலோசித்து, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த அனைவரையும் சம்மதிக்க வைக்க முயன்றுள்ளது.


ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீஷன் மற்றும் ரமேஷ் சன்னிகலா ஆகியோரிடம் தனித்தனியாகப் பேசிய போதிலும், மூவரும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் மாறவில்லை.

 எனவே, கேரள முதலமைச்சர் தேர்வு நடைபெற இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம்.


கேரள முதலமைச்சர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இன்று மாலை மற்றொரு சுற்று கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது என்றும், அதில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வின் பெரும்பகுதி இறுதி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை