எப்போதும் சரியும் ?

எப்போதும் சரியும் அரசு!

பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி அடையக் கூடாது. 

எப்போதும் சரியும் அரசு தான் இது.

தமிழ்நாடு சட்டமன்றம் என்பது 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தான் ஆளும் கட்சியாக அமர முடியும். த.வெ.க. 118 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை. 108 இடங்களைத் தான் வென்றது. 

அக்கட்சியின் தலைவர் ஒரு இடத்தில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோமோ என்று பயந்து இரண்டு இடங்களில் போட்டியிட்டார். இரண்டிலும் வென்றதன் அடிப்படையில் ஒன்றில் இருந்து தனது பதவியை விலக்கிக் கொண்டு விட்டார். இதனால் த.வெ.க.வின் பலம் 107 ஆனது.

திருப்பத்தூர் தொகுதியில் 1 வோட்டில் தான் த.வெ.க. வென்றது. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு போட்ட நிலையில் திருப்பத்தூர் உறுப்பினரை வாக்களிக்கத் தடை செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 எனவே த.வெ.க. எண்ணிக்கை 106 ஆனது. சபாநாயகர் நாற்காலியில் இருப்பவர் வாக்களிக்க முடியாது. எனவே, த.வெ.க.வின் பலம் சபையில் இப்போது 105 தான்.

118 இருக்க வேண்டிய சபையில் 105 தான் த.வெ.க.வின் பலம் ஆகும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை த.வெ.க. பெற்றுள்ளது. 

இவர்கள் தங்களது 13 உறுப்பினர்களை ஆட்சி அமைக்க ஆதரவு தந்தார்கள். இவர்கள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவர்களா? இல்லை.

தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள். இவர்களது உறுப்பினர்களை தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க கடன் வாங்கி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.

 தனக்கு எதிரான கூட்டணியில் நின்று போட்டியிட்ட கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பெரும்பான்மையை அடைந்து விட்டதாகச் சொல்லி ஆளுநருக்கு கடிதம் தந்தார் விஜய்.

அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

கூட்டணி ஆட்சியை அமைப்பதில், கூட்டணிகளின் தயவில் ஆட்சியை அமைப்பதில் தவறு இல்லை. அது தேர்தலுக்கு முந்தியே கூட்டணி அமைந்து, அதே கூட்டணி மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று, பிறகு கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். 

ஆனால் எதிரெதிர் துருவங்களாக நின்று, மக்களைச் சந்தித்து, விமர்சனங்களை வைத்துவிட்டு, பின்னர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் – எதிர்த்து சண்டையிட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்களது எண்ணத்துக்கு மாறானது ஆகும். இதனைத் தான் திருவாளர் விஜய் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி நீங்கலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தகுதியின் அடிப்படையில் – கொள்கையின் அடிப்படையில் – கோட்பாடுகளின் அடிப்படையில் – ஆளும் கட்சிக்கு ஆதரவைத் தரவில்லை.

 இன்னொரு தேர்தல் வந்துவிடக் கூடாது – குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது – என்று தான் காரணம் சொல்லி இருக்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் ஆதரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 நல்லாட்சி தரும் என்பதற்காக அவர்கள் ஆதரிக்கவில்லை. இவர்களை வைத்துத் தான் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார் விஜய்.

‘தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொடர்கிறோம்’ என்று தான் இக்கட்சிகள் சொல்லி இருக்கின்றன. கொள்கை ரீதியாக தி.மு.க. கூட்டணியில் தொடரும் கட்சிகளை, தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்திக் கொண்டுள்ளார் முதலமைச்சர் விஜய். இதில் என்ன பெருமை இருக்கிறது?

இதைவிடக் கொடுமை, ஊழல் சக்திகளாக அவரால் சொல்லப்பட்ட அ.தி.மு.க.வின் ஒரு அணியினர் தயவை நாடியது தான். இதனை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக அம்பலப்படுத்தி விட்டார்.

 ‘புஷ்பா’ படத்தில் முதலில் ஷோபா போகும். பிறகு சி.எம்.போவார்’. இந்தக் கதை தான் இன்றைய விஜய் ஆட்சியின் காட்சி என்று விளக்கி விட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.

அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

யாருடைய தயவில் தனது நாற்காலியைக் காப்பாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்? ஊழலில் ஊறிப்போன அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தயவில்!

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த ஏழு பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் தயவோடுதான் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 கே. பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

‘’இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று தி.மு.க. எம்.பியான கிரிராஜன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது.

டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவாகி வெவ்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. 

இதெல்லாம் திருவாளர் விஜய்க்கு தெரியுமா? தெரியும். தெரிந்தே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஊழல் சக்திகளின் உதவியை நாடி இருக்கிறார்.

தன்னை தூயசக்தியாகச் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், ஊழல் சக்திகளான இவர்கள் தயவில் தான் ஆட்சியை அமைத்துள்ளார்.

 பெரும்பான்மையை இந்த லட்சணத்தில் தான் நிரூபித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

இல்லாத தகுதி?

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை த.வெ.க வென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தலின் பேரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்துபேசிய பிறகு, வெளியில் இருந்து த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.

த.வெ.க தலைவர் என்கிற முறையில் மே 10 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.

அதன்பிறகு, சுமார் ஒருவார காலம் துறைகள் அறிவிக்கப்படாமல் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையோடு இயங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று (மே 16) அந்த 9 அமைச்சர்களுக்கான துறைகள் முறையே அறிவிக்கப்பட்டது.

“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!

அதில் முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில், பள்ளிக் கல்வித்துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன், தனது கல்வித்தகுதி குறித்து வெளியிட்டிருந்த திரித்த தகவல் வெகு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இது குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ்நாட்டிற்கு இது புதிது.

அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது என ஏன் சொல்கிறோம் என்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக்குள்ளானது.

IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம்” என பதிவிட்டு, ராஜ்மோகன் பயின்றதாக சொல்லப்படும் கல்வி நிறுவனத்தின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்து வருகின்றனர்.



அட்டை லாரியால் கலவரம்!

பக்ரீத் பண்டிகை வரவிருப்பதால் சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க தெலுங்கானா உள்ளூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு அந்த வழியாக ஒரு கண்டெய்னர் லாரி வந்துள்ளது. அதில் சட்டவிரோதமாகப் பசுக்கள் கடத்தப்படுவதாகச் சில பசு பாதுகாவலர்கள் மத்தியில் வதந்தி பரவியுள்ளது. அப்போது அந்த லாரியில் தான் பசுக்களை கொண்டு செல்கிறார்கள் என்று ஆத்திரமடைந்த ஒரு கும்பல் அந்த லாரியை நடுரோட்டில் மறித்து சோதனையிட்டனர்.

லாரியை சோதித்து பார்க்கையில் அட்டை பெட்டிகள் மற்றும் ப்ளைவுட் இருப்பதாய் அந்த கும்பல் கண்டனர். ஆனாலும் லாரி டிரைவர்கள் மீது அந்த கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு கும்பல் லாரி டிரைவர்களுக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த வாக்கு வாதம் தொடர்ந்து நீடித்த நிலையில், அந்த இரு கும்பல்களுக்கிடையே மாறி மாறி கல்வீச்சு தாக்குதலை நடத்திக்கொண்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த போலீசார் வந்து பார்க்கையில், பல பொதுமக்களும் அங்கிருந்த வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தன. உள்ளூர் போலீசார் இருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலைமை கையை மீறி சென்றதால் கூடுதல் போலீஸ் படைகள் வந்தனர். மேலும் கும்பலைக் களைக்க போலிசார் அதிரடி கலவரத்தில் இறங்கினர்.பின்னர் அந்த கூட்டம் களைந்தது.

நள்ளிரவில் வன்முறை வெடித்த இடத்திற்கு AIMIM கட்சியின் கோல்கொண்டா பகுதியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினார்கள்.

வதந்தி பரப்பி சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆசிப் நகரின் மீது அரசு ஊழியர்களை தாக்கியதற்காகவும், பொது மக்களின் அமைதியை கெடுத்ததற்காகவும் காவல் துறையினர் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்க ஆசிப் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகளும் நடந்து வருகின்றன.

பசுகாவலர்கள் போர்வையில் பதட்டத்தை ஏற்படுத்தும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

உலக சுகாதார அவசரநிலை!

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக காங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவில் வேகமாக பரவிவருகிறது.

காங்கோவில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 88 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.



புனைகதைகளுக்கு கடிவாளம் தேவை?

 நிதி நிர்வாகம் குறித்து சாதாரண அடிப்படைப் புரிதலும் இல்லாமலும், ‘பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க’ என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கதும் ஆகும்” என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று 

போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத் தக்கனவும் ஆகும்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக கடந்த 10-ம் தேதி ஜோசப் விஜய் பதவியேற்றார். 

அவர், தனது முதல் உரையிலேயே தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாக குறைகூறினார். தொடர்ந்து தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனாவும் அவ்வாறே பேசியிருப்பது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை