அரசவைக் "குதிரை!"

 ரோமாபுரியை ஆண்ட மன்னன் கலிகுலா தான் செல்லமாக வளர்த்த இன்சிடாடஸ் இந்தக் குதிரைக்கு தனது அரசவையில் மிக முக்கிய பொறுப்பு கொடுத்ததாக வரலாற்று கதையாடல் உண்டு.

அதனைக் குறிப்பிட்டு கலிகுலா – இன்சிடாடஸ் என குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டு இருக்க கூடிய எக்ஸ் தள்ளப்பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. 

அதற்கு முக்கிய காரணம் இன்றைய தினம் தமிழக முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக முதல்வவரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு அளித்திருக்கிறார்.

 இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தமிழக அரசின் இந்த செயல்பாட்டுக்கு பலகட்ட விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் கார்த்திக் சிதம்பரம் போட்டு இருக்க கூடிய பதிவு விஜய் அரசின் நிலைப்பாட்டை தாக்கிதான். 

ரதன் பண்டிட் தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து வருகிறார்.

 இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றில் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. 

இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சோதிட ஆலோசராகவும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் விஜய் தேர்தல் முடிவுகளுக்கு முன்பு சாய்பாபா கோவிலுக்கு சென்றிருந்தார். விஜய் சீரடி சென்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என ரத்தன் பண்டிட் கணித்ததாக அப்போது பேச்சுக்கள் எழுந்தன. 

மேலும் 1991 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் வெற்றியை இவர்தான் துல்லியமாக கணித்ததாகவும் பேச்சுக்கள் இப்போது எழுகின்றன.

ஆனால் விஜய் தனது ஜோதிடரை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பதிகாரியாக நியமித்தது பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

 மாற்றம் என்ற அடிப்படை புள்ளியில் இருந்து தொடங்கிய விஜய் என்ன மாதிரியான மாற்றத்தை முன்னெடுத்து இருக்கிறார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றது.

 இன்னும் ஒரு ஜோதிடருக்கு அரசின் முக்கியமான பதவிகளை தருவது சரியல்ல என்ற விமர்சனங்கள் வலுக்க தொடங்கி இருக்கின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிக அதிகமான சோதிட நம்பிக்கை உள்ளவர்.சட்டமன்ற உறுப்பினர் தேர்வு,அமைச்சர்கள் தேர்வு முதல் அனைத்து நகர்வுகளும் பிரபல சோதிடர்களை ஆலோசித்தே செய்தார்.கடைசியில் சிறைக்கு சென்று ஊழல் குற்றவாளியாக (A1) இறந்தார்.

அவர்கூட தன்பணத்தில்தான் சோதிடர்களுக்கூலி கொடுத்தார்.

மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கவில்லை.அரசு ஊழியராக்கி சம்பளம் பொடுக்கவில்லை.

தற்குறி ரசிகைகள் நாங்கள் அரசுப்பணத்தை வாங்கப்போவதில்லை.விஜய்யண்ணா தான் சம்பாதித்த பணத்தில்தான் இனி மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்போகிறார் என்று பேசினர்.

ஆனால் விஜயோ தான் சோநிடம் பார்ப்பதற்கு கூட மக்கள் வரிப் பணத்தில் கூசாமல் கைவைக்கிறார்.

அரசு தவறாக சைபர் சட்டங்களை பயன்படுத்துகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் உள்ள இடைத்தரகர் பொறுப்பு விதிகளைப் பயன்படுத்தி, சில யூடியூபர்கள் பகிர்ந்தவை உட்பட 18 இணையதள முகவரிகள்/பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் முடக்க அல்லது தடைசெய்யுமாறு எக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கு மே 8 அன்று ஒரு நீக்கும் அறிவிப்பை அனுப்பியுள்ளது.தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு சமூக ஊடக பதிவுகளை தடை செய்ய அனுப்பியுள்ள இந்த நோட்டீஸ்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகவும் ஆபத்தான தாக்குதலாகும். 

குறிப்பாக அரசியல் விமர்சனங்களை தடுத்திடும் நோக்கில்  நடவடிக்கை எடுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

அரசை அல்லது அரசியல் கட்சிகளை விமர்சிப்பது குற்றமல்ல; அது ஜனநாயகத்தின் உயிர் மூச்சாகும். கருத்து வேறுபாடுகளை பேசுவதற்கான இடம்தான் ஜனநாயகமே அன்றி அதனை அடக்குவது ஜனநாயகமாகாது. 

கருத்துரிமையை நசுக்க, சைபர் சட்டங்களை பயன்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை