சனாதனம் ஒழிக!
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.
அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
இறுதியாக அவர் பேசி முடிக்கும் போது, “வெல்க தமிழ், வளர்க தமிழ்நாடு, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.
இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் மீது சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை.
ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும்.
அப்படித்தான் இந்த சனாதனமும்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார்.
இதற்கு நாடு முழுவதும்இந்துத்வா அமைப்பினர்,பார்ப்பணர்கள் கண்டனங்கள் எழுப்பினர்,சிலர் வழக்கு போட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உபி பாஜக அரசு
உத்தரப் பிரதேசத்தில் தங்களின் நியாய மான உரிமைகளுக்காகப் போராடிய நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஆதித்யநாத் அரசு, தற்போது அதற்கு ஆதரவாக நின்ற இடது சாரி சிந்தனையாளர்களையும், ஊடகவியலா ளர்களையும் குறிவைத்து ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் சிறையிலடைத்துள்ளது. ‘மஸ்தூர் பிகுல் தஸ்தா’ அமைப்பைச் சேர்ந்த மாணவச் செயல்பாட்டாளர் அகிருதி சௌத்ரி, மூத்த பத்திரிகையாளர் சத்யம் வர்மா ஆகி யோர் மீது பாய்ந்துள்ள இந்த எதேச்சதிகாரச் சட்டம், உபி அரசின் பாசிச முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
இதுவரை 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆய்வா ளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த இருவர் மீது மட்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பதன் பின்னணியில் ஒரு அப்பட்டமான சதி ஒளிந்துள்ளது. இவர்க ளின் பிணை மனுக்கள் நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்து, காவல்துறை வசம் எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியான அடுத்த நாளே (மே 13) இந்த கொடூரச் சட்டம் ஏவப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை முடக்கி, சட்டப்பூர்வமான பிணையைத் தடுக்கும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கைதுக்கான காரணங்களைக்கூட வழக்கறிஞர்களுக்குத் தராமல், அரசியல மைப்புச் சட்டப் பிரிவு 22 வழங்கும் அடிப்படை உரிமைகளை உபி காவல்துறை காலில் போட்டு மிதித்துள்ளது.
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை க்குத் துணைபோகும் பாஜக அரசு, தொழிலா ளர்களின் வர்க்கப் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது. உழைப்பவர்களின் அவலங்க ளை தொடர்ந்து எழுதிவந்த ‘மஸ்தூர் பிகுல்’ இதழின் ஆசிரியர் சத்யம் வர்மா மீதான இந்தத் தாக்குதல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். ஏற்கெ னவே சித்திக் கப்பான் போன்ற பல பத்திரிகையா ளர்களைச் சிறையிலடைத்த ஆதித்யநாத் அரசு, இப்போது தொழிலாளிகளின் போராட் டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் சுதந்திர மான பத்திரிகையாளர்களை ஒடுக்கப் பார்க்கிறது. கடந்த காலங்களில் அலகாபாத் உயர்நீதி மன்றமே உத்தரப்பிரதேச அரசின் தேசிய பாது காப்புச் சட்ட அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய பின்னரும், பாஜக ஆட்சியாளர்கள் திருந்தவில்லை.
பத்திரிகைத் தொழில் என்பது குற்றமல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திர உரிமையை தந்துள்ளது. உபி அரசு உடனடியாக இந்த அடக்குமுறையைக் கைவிட்டு, சத்யம் வர்மா, அகிருதி சௌத்ரி உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். ஒடுக்குமுறைகள் மூலம் வர்க்கப் போராட்டத்தின் நெருப்பை ஒருபோதும் அணைத்துவிட முடியாது!பெட்ரோல் விற்பனை வரியை குறையுங்கள்!
பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டும்’ என தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஒன்றிய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

மசூதி ஒன்று கோவிலானது !
மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியை, இந்து கடவுள் சரஸ்வதி தேவியின் கோவிலாக அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
போஜ்ஷாலா வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் நிலையில், தங்களின் முன்னோர்கள் வழிபட்ட கோவில் என்று இந்து அமைப்புகள் மத்தியப்பிரேதச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ன்றம், “ ராஜா போஜுடன் தொடர்புடைய சமஸ்கிருத கற்றல் மையமாக இந்த இடம் விளங்கியுள்ளது என்பதை வரலாற்று இலக்கியங்கள் நிறுவுகின்றன.
தார் மாவட்டத்தில் சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் இருந்ததை இந்த ஆய்வுகள் குறிக்கிறது.













