ஆட்சி அமைப்பு நிகலவரம்
ஆட்சி அமைப்பு நிகலவரம்
தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என்று மு.க. ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலத்தை அடைய இன்னும் 10 இடங்கள் குறைவாக இருப்பதால், தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது.
இந்நிலையில், எஞ்சிய 10 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைக்க, மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
.
தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க 53 இடங்களிலும் வென்றுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
த.வெ.க 34.92% வாக்குகள் பெற்றுள்ளன. பெரும்பான்மையை தவறவிட்டபோதும் பிற கட்சிகள் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளார். அப்படி ஒரு ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் முதல்முறை கூட்டணி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு த.வெ.க தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.
2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக கூறியுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
த.வெ.க உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே உள்ள அண்ணா சிலையில் த.வெ.க கொடி வைக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. அண்ணாவின் கையில் த.வெ.க கொடியை கட்டியதற்கு தி.மு.க, அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வராக த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்கும் விழா திட்டமிட்டபடி நாளை நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் முழு பட்டியலை தரும்படி த.வெ.க தரப்பிடம் ஆளுநர் அர்லேகர் கேட்டிப்பதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸின் 5 பேரை சேர்த்து 112 பேரே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அமைக்க அழைக்குமாறு விஜய் கடிதம் அனுப்பி உள்ளார், மெஜாரிட்டியாக 35% வாக்குகளை பெற்றுள்ளதாக விஜய் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என கேட்டுள்ளேன். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை விவரத்தை சொல்வதாக விஜய் கூறியுள்ளார்.
118 அல்லது மேற்பட்ட எம்எம்எல்ஏக்கள் ஆதரிப்பதாக நிரூபிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு என பல ஆப்ஷன்கள் உள்ளன.
அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டு முடிவு எடுப்பேன். குறிப்பிட்ட காலத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிடலாம் என ஆளுநர் அர்லேகர் விளக்கமளித்துள்ளார்.








