கணிப்பு வியாபாரம்!

கருத்துக் கணிப்பு வியாபாரம்!

 ‛‛எக்சிட் போல்” என்ற பெயரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனக் கூறி பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட முடிவுகள் கேலிக்கூத்து ஆகி உள்ளன.


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஜெயித்ததா, பொய்த்ததா என பார்க்கையில் தவிடுப்பொடியானது என்றே சொல்ல வேண்டும். 

பீப்பில்ஸ் பல்ஸ், மேட்ரைஸ், பி-மார்க், சாணக்யா என பல நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் சராசரியாக திமுக கூட்டணி 125 முதல் 135 என பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் சராசரியாக அதிமுக கூட்டணி 75 முதல் 85 இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாகவும், சராசரியாக தவெக 11 முதல் 21 இடங்கள் வரை வெல்லும் எனவும் ஆரூடம் சொன்னார்கள்.


ஓட் வைப் என்ற நிறுவனம்  திமுக கூட்டணி 103-113 இடங்களும், அதிமுக கூட்டணி 114-124 இடங்களும், தவெக 4-10 இடங்களும் வெல்லும் என்றது. 


 ஆக்ஸிஸ் மை இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களும், அதிமுக 22-32 இடங்களும், தவெக 98-120 இடங்களும் கைப்பற்றும் என்றது.


நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 73 இடங்கள், அதிமுக கூட்டணி 53 இடங்கள், தவெக 108 இடங்கள் வென்றுள்ளன. 


 அனைத்து கருத்து கணிப்புகளும் முற்றிலும் தவறாகி தவிடு பொடியாயின.


எனவே, கருத்துக் கணிப்புகளை வைத்து மக்களின் உண்மையான முடிவுகளை அறிய முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.



மாவீரன் வாட்டாக்குடி இரணியன்  


தஞ்சை மண்ணில் நிலப்பிரபுக்களின் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக வீரப்போர் புரிந்து உயிர்நீத்த மாவீரன் வாட்டாக்குடி இரணியனின் நினைவு தினம் இன்று. 


சிங்கப்பூரில் கட்டிடத் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போர்ப்பயிற்சி பெற்றவர் இரணியன். 1948-இல் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பியவர், 


அங்கு விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 'சாணிப்பாலும் சவுக்கடியும்' போன்ற அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து விவசாய சங்கத்தை வலுப்படுத்தினார். 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் கூலி உயர்வுக்காகவும் போராடிய இவரை ஒடுக்க நினைத்த நிலப்பிரபுக்களும் காவல்துறையினரும் இணைந்து இவரைத் தேடத் தொடங்கினர். 


1950-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி, காலில் ஏற்பட்ட காயத்தால் நகர முடியாமல் இருந்த இரணியனையும், அவருடன் இருந்த தோழர் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். 


தனது 30-வது வயதிலேயே அடித்தட்டு மக்களின் விடியலுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த வாட்டாக்குடி இரணியனின் வீர வரலாறு சமத்துவத்தை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பெரும் பாடமாகும்.



.கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, ஜெமனி–மார்ச் 14, 1883, லண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.

அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.


 இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாக அமைந்தது.

ஏழைகள் வஞ்சிக்கப் படுவதையும் பணமுதலைகள் மக்களை ஏமாற்றும் முறைகளையும் விரிவாக எடுத்துக்காட்டினார்.


மதம்,சாதிகளை கருவிகளாக்க் கொண்டுஊன மக்களை முதலாளி வர்க்கம். முழுவதையும. அடிமைகளாகவைத்திருப்பதைக் கூறினார்.


இந்தியாவல் மக்கள் பலகடவுள்களைக் கும்பிடுவதையும்,பல சாதிகளாகப் பிரிந்து வாழ்வதையும் கைவிடாதவரை. புரட்சி, ஏழ்மை வீழ்ச்சி வர வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.


பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். 

மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை