ஆட்சியமைப்பு நிலவரம.?

தூத்துக்குடிக்கு. 14'ம் தேதிவரை மழை?

வானிலை ஆய்வு மைய அறிக்கையில்: சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

10-05-2026: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

11-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

12-05-2026 மற்றும் 13-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். கன மழை

14-05-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய 8560T மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 12-05-2026 வரை: தமிழகம், புதுவை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° குறையக்கூடும்.

 மற்றும் காரைக்கால் பகுதிகளில் செல்சியஸ் வரை படிப்படியாக இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:இன்று முதல் 12-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.

நாளை (09-05-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என தெரிவித்துள்ளது


எப்போது ஆட்சி அமைப்பு?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருந்தது. 

ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வந்தார்.

 அதன்படி திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடி இருந்தார். 

முதலில் காங்கிரஸ் மட்டும் தவெகவிற்கு ஆதரவு கொடுத்திருந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்து சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரு  கட்சிகளும் தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அதனைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும், த.வெ.க. விற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை எட்ட, காங்கிரஸ் (5 இடங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML – 2 இடங்கள்) ஆகிய கட்சிகள் தவெக.விற்குத் தங்கள் ஆதரவை வழங்கின. 

இதன் மூலம் தவெக தலைமையிலான கூட்டணி மொத்தம் 118 இடங்களுடன் பெரும்பான்மையைப் பெற்றது. இதனையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்று ஆளுநர் அர்லேக்கரை  முறையாகச் சந்தித்துப் பேசினார்.

அப்போது  ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு நாளை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் இரு விசிக எம்எல்ஏக்களும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளனர். எனவே ஆட்சி அமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் விஜய் முதல்வர் ஆகிறார்

. இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் நாளை (08.05.2026) காலை 11 மணிக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயவில் பதவி ஏற்க உள்ளார்   எனத் தகவல் வெளியாகியுள்ளது.  


இதோ ஆர்எஸ்எஸ், பாஜக  மற்றும் இந்துத்துவா மதவாத சக்திகள் தங்கள் வேலையை வங்காளத்தில் ஆட்சியமைத்தவுடன் ஆரம்பித்துவிட்டார்கள்.

தேர்தலுக்குப் பிறகு கொல்கத்தா மசூதியில் தொழுகை நேரத்தில் மக்கள் தொழும் வேளையில் இடையூறு செய்யும் காட்சி.

. இந்தியா உண்மையிலேயே ஒரு நாகரிகமற்ற நாடு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை