இதற்கு.....?

என்ன பெயர்?

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு மாதம்.... யர்யர்ஆகியும் பரபரப்புகள் ஓயவில்லை. ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க எதிர்க்கட்சியாகிவிட்டது.

தி.மு.கவின் கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ் த.வெ.கவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.


அதேபோல வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சியும் த.வெ.க அமைச்சரவையில் இடம் பிடிக்கவுள்ளனர். இது தி.மு.கவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் மீது தி.மு.க மூத்த தலைவர் ராசா வைத்துள்ள விமர்சனம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருவது


பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து விசிக, ஐயூஎம்எல் மீதும் திமுக விமர்சனம் வைக்க தொடங்கியுள்ளது.


இதுகுறித்து தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


"முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!


பெரியாரின்
‘காலதேச வர்த்தமான’ த்திற்கு
காத்திருப்போம் ;  என்றாலும்
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!!"

_என்று விமர்சித்துள்ளார்.


பல விமர்சனங்களுக்கு பிறகு அ.ராசாவின் பதிவு சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் அடுத்ததாக, “ என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”!


அரசியலில் என்ன பெயர்சூட்டலாம்? வாழ்க தமிழ்! “என பதிவிட்டுள்ளார். 




நல்வாய்ப்பு!

ஒன்றிய அரசுப் பணிகளில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு. 

ஆனால், பெரும்பாலான ஒன்றிய அரசுப் பணிகளை பொறுத்தவரை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழி மட்டுமே அடிப்படை தேவையாக இருக்கிறது. இதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் போது பெரிய சிரமம் ஏற்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் தேவைகளை அதிகாரிகளிடம் விளக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புற மக்கள் இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாததால் அரசு அலுவலகங்களில் அவமானத்தையும் சந்திக்கின்றனர்.

 இதுமட்டுமா, மாநில மொழி தெரியாததால் இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்தியா பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட கூட்டாட்சி நாடு. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் இருக்கும். எனவே, ஒன்றிய அரசுப் பணிகளுக்கு மாநில மொழியை அடிப்படை தகுதியாக கொண்டு வருவதன், வாயிலாக பல நன்மைகள் இருக்கின்றன.

அதாவது, அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கேயே பணிய நியமனம் பெறுகிற வாய்ப்பு கிடைக்கும். 

பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தாய்மொழியில் தெளிவாக விளக்க முடியும். அதிகாரிகளும் அதை சரியாக புரிந்து உடனடி தீர்வுகளை வழங்க முடியும்.

உதாரணமாக, வங்கி, அஞ்சல், ரயில்வே, வரித்துறை, காவல் துறை போன்ற துறைகளில் பணிபுரியும் ஒன்றிய அரசு அதிகாரிகள் மாநில மொழி தெரிந்திருந்தால் மக்களுடன் நேரடி தொடர்பு ஈஸியாக இருக்கும்.

இந்த நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மாநில மொழி அறிவு தேவையென்றும், அதற்கு 10 ஆம் வகுப்பு மட்டத்திலான அரசு தேர்வு ஆணையங்கள் வழங்கியுள்ள சான்றிதழ்கள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இதை தான் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ்தள பதவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

 இது குறித்த பதிவில், “ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

மாநில அளவிலான நியமன தேர்வு நடைபெற வேண்டும் என்றும், மாநில மொழி அறிவு கொண்டவர்கள் பணி நியமனங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்

 என்றும், அதற்குரிய வகையில் கல்வித் தகுதி உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வந்துள்ளேன்.

தற்போது, அது நிறைவேறியுள்ளது. 

ஒன்றிய அரசின் இதர பணிகளுக்கும் பதவிகளுக்கும் இதே போன்ற நியமன அறிவிக்கைகள் விரைவில் வெளியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இது என்று தெரிவித்துள்ளார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை