தேங்கிய கோப்புகள் மலை....
ஓசூர் அருகே அமைய வேண்டிய ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு.
சென்னையில் கிளாண்டர்ஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழப்பு.ஆபத்தான தொற்று என்பதால் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு.
ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு.. சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.வெப்பமண்டலப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், 2100க்குள் மேலும் 4% முதல் 5% வரை ஆக்சிஜன் குறையக்கூடும் என்றும் தகவல்.
தேங்கிய கோப்புகளும்,
இலாகா இல்லா அமைச்சர்களும்?
விஜய் தலைமையிலான தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு, நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மே10 ஆம் தேதி ஒருவழியாக பதவியேற்றது. விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
வழக்கமாக பதவியேற்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படும் நிலையில், இம்முறை பல நாட்கள் கடந்தும் எந்த அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் முதலமைச்சரை சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் வரை பதவியேற்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைக்கு 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கம் தாமதமடைவதற்கு முக்கிய காரணமாக கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கோரிக்கைகள் என கூறப்படுகின்றன. முதலில் 2 அமைச்சர் பதவிகள் மட்டுமே கேட்டு வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 5 அமைச்சர் பதவிகளை கோரி விஜய்யிடம் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
அதோடு முக்கிய இலாக்களையும் குறிவைத்து காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் ஒரு புறம் முரண்டுபிடிக்கும் நிலையில், அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியும் தங்களுக்கு 7 அமைச்சர் பதவிகளை கேட்டு விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.
இதனால் யாருக்கு அமைச்சரவை பதவி வழங்குவது, யாருக்கு எந்த துறை ஒதுக்குவது என்ற விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கடும் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கி கிடக்கிறது.
அமைச்சர்கள் இல்லாமலேயே துறை ரீதியாக முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரமாகியும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யாததால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு டெண்டர்கள், நிதி அனுமதிகள், புதிய திட்ட ஒப்புதல்கள், மாவட்ட நிர்வாக அனுமதிகள், ஒப்பந்த நீட்டிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் அமைச்சர்களின் ஒப்புதல் இல்லாமல் நகர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் மிக வேகமாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில், மதுரவாயல் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் த.வெ.க அரசின் நடவடிக்கையால் தேக்கம் அடைந்துள்ளன.
ஆனால் துறை இல்லா அமைச்சர்களின் கார்களில் அலப்பறை அணில் குஞ்சுகள் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்கின்றன.
துணை சபாநாயகர் டாஸ்மாக் பெஞ்சில் சரக்கடித்தது படம் எடுத்தது போல் த.வெ.க.வினர் து.சபா.. இருக்கையில் அமர்ந்து செல்பி எடுக்கின்றனர்.
சட்டசபை,அமைச்சரவை கண்ணியம்,மாண்பு,மரபு அனைத்தும் காணாமல் போய்பத்துதினங்களாகிவிட்டன.பூசைக்கேற்ற பூவிது..
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ். பட்டதாரியான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணமான இவரை விட்டு அவரது மனைவி பிரிந்துவிட்ட நிலையில், எட்வின் ஜார்ஜ் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.
தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, இவருடைய தாய் குளத்தூரில் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எட்வின் ஜார்ஜ் வ.உ.சி. நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் போலீசார் எட்வின் ஜார்ஜின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.
அவரைப் பால்கனிக்கு அழைத்துச் சென்று, "இது என்ன செடி?" என்று கேட்டபோது, "இது கஞ்சா செடிதான்" என அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
மேலும், "இதை வளர்ப்பதால் என்ன தப்பு? நான் சாமி கும்பிடத்தான் இதை வளர்த்து வருகிறேன்; தினந்தோறும் இந்தச் செடிக்கு நான் பூஜை செய்வேன்" என்று அவர் கூறியதைக் கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின்னர், போலீசார் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது அங்கிருந்த ஊர்க்காவல் படை சீருடையைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர் ஊர்க்காவல் படையிலும் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
மேலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்காக அவர் வேலை செய்ததாகவும், அதன் அடையாளமாகவே தனது வீட்டில் கட்சிப் கொடியை வைத்துள்ளதாகவும் எட்வின் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பால்கனியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியைப் பறிமுதல் செய்த போலீசார், எட்வின் ஜார்ஜைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளாரா அல்லது கஞ்சா வியாபாரிகளுடன் ஏதேனும் தொடர்பு வைத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"போதையில்லா தமிழகத்தை" உருவாக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்த்து, பூஜித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் உண்மையில் தற்குறிகள்தானா?இல்லை அதுபோல் நடிக்கும் காரியக் கோட்டிகளா?


