வெப்ப அலையும்-மூட நிலையும்!

 ரான் வெளியுறவு அமைச்சர்  அராக்சி எக்ஸ் பதிவு :

ஈரானுக்கு எதிரான போர் செலவுகளை அமெரிக்கா குறைத்துக் கூறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இதுவரை நேரடியாக மட்டும் 10 லட்சம் கோடி செலவாகி உள்ளதாகவும், மறைமுக செலவுகள் இதைவிட மிக மிக அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா கூறியுள்ள தொகையை விட செலவு 4 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய பட்டதாரி இளைஞர் தற்கொலை :

அமெரிக்காவில் விசா நெருக்கடி மற்றும் வேலை கிடைக்காத விரத்தியில் இந்திய பட்டதாரி இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானாவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சந்து இராகனாபொய்னா, சிகாகோவில் உள்ள டேபால் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு முடித்தும், H-1B விசா விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

14 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் :

சீனாவில் சக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த மாணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. யுனான் மாகாணம் லுவோபிங் பகுதியை சேர்ந்த ஜியாங், தன்னுடன் பள்ளியில் படித்து வந்த சிறுமியை கடத்தி சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தப்பிக்க முயன்றதால் அச்சிறுமியை தாக்கி கொலை செய்தான்.

5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு :

ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள உறவு விரிசலை தொடர்ந்து, ஜெர்மனியில் இருந்து 5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஈரான் விவகாரத்தில் ஜெர்மனியிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு பிடியாணை..?

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் முக்கிய நபர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த அதிபர் அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பினருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.







மே.வங்க கநிலவரம.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 15 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாலை 5 மணி நிலவரப்படி இந்த 15 வாக்குச் சாவடிகளில் 86% வாக்குப் பதிவு நடந்துள்ளது

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் பச்சிம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளிலும், இன்று காலை மறு வாக்குப்பதிவு தொடங்கியது. 

தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த 15 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சூழலில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மக்ரஹத் பச்சிம் தொகுதியில் 86.11 சதவீதமும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 87.60 சதவீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது

இதனிடையே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ‘ஸ்ட்ராங் ரூம்’களில் முறைகேடுகள் நடைபெற்றதாக இன்று திரிணமூல் கட்சி குற்றம்சாட்டியதன் மூலம் மற்றொரு சர்ச்சை எழுந்தது.

குதிராம் அனுஷிலன் கேந்திராவில் உள்ள பாதுகாப்பு அறையில், தபால் வாக்குகள் அங்கீகாரம் இன்றி பிரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திரிணமூல் கட்சி புகார் அளித்துள்ளது.

இதேபோல், ஒரு பாதுகாப்பு அறை அனுமதி இன்றி திறக்கப்பட்டதாக பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.







வெப்ப அலையும்-மூட நிலையும்!

இந்த வருடம் இந்தியாவின் வெப்பநிலை மோசமான அளவில் உயர்ந்துள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் வெப்ப அலையால் ஏற்படும் அபாயத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த கோடை வெப்பம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு கோடையிலும், இந்தியா வறண்ட வெப்பத்தை எதிர்கொள்கிறது.

வெப்பநிலை அதிகரிக்கிறது, எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன, மக்களும் வெயிலை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் மிகவும் ஆபத்தான வெப்ப அபாயம் கோடையில் வருவதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “அது பருவமழை மேகங்களில் மறைந்திருக்கிறது. அதன் ஈரப்பதமானது, வறண்ட வெப்ப அலையை விட வேகமாக உயிரைப் பறிக்கும் தன்மை உடையது – ஏனெனில் உடலுக்கு அதை எதிர்க்கும் சக்தி இல்லை என்கிறது இந்த ஆய்வு.

உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்த்தலின் மூலம் உடல் தன்னைக் குளிர்வித்துக் கொள்கிறது. 

ஆனால் புறச்சூழலில் ஏற்கெனவே ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, உடலிலிருந்து வெளியாகும் வியர்வை ஆவியாக முடியாது. இதனால் உடலில் குளிர்வித்தல் நடக்காது; சில மணி நேரங்களிலேயே இதன் விளைவுகள் மரணத்தை ஏற்படுத்தலாம்’ என எச்சரித்துள்ளது.

மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் ‘வெப்ப அலையை’ பேரிடராக அறிவித்து இந்த கடும் வெப்பநிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியாவிலும் அது போன்றொரு நடைமுறையை கொண்டுவர வேண்டும் என சூழலியல் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இப்படி அரசும், அமைப்புகளும் வெயிலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அறிவியல் பூர்வமான ஆய்வுகளை வைத்து முயற்சிகளை முன்னெடுத்துவரக்கூடிய சூழலில், வட மாநிலங்களில் பூமியை குளிர்விக்க நூதன யாகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 மழை வர யாகங்கள் செய்வது இந்திய மத ரீதியிலான நம்பிக்கை என்றாலும் சில பாபாக்கள் ‘extreme’ -ஆன பூஜைகளில் ஈடுபடுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்படிதான் ஒரு ‘பாபா’ ஒருவர், உலக உருண்டைக்கு பாலபிஷேகம் செய்து, “பூமியை குளிரூட்டும் யாகத்தை மேற்கொண்டிருக்கிறார்.

 இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலகட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது.

மூட நம்பிக்கைஇந்தியாவின் சில பகுதிகளில் இன்னமும் மக்கள் மூர்க்கத்தனமான மூட நம்பிக்கையில் சிக்கி தவித்து வருகின்றனர். 

சமீபத்தில் கூட உத்தரபிரதேசத்தில் ஒரு பகுதியில் பாம்பு கடித்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், கங்கையில் வீசி பரிகாரம் செய்ததில் அந்த நபர் பரிதமாக இறந்து போனார்.

இதுஇப்படி இருக்கவே சமீபத்தில் பாஜக அமைச்சர் ஒருவர் ‘பாக்கெட்டில் வெங்காயம் வைத்தால் வெயிலின் தாக்கம்’ குறையும் என பேசியிருக்கிறார். 

இயற்கை சீற்றங்களுக்கு திடீர் விபத்துகளுக்கு உடனடி தீர்வு மருத்துவம் தான் என்பதை சமூகத்தின் அனைத்து படிநிலையில் இருப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதோடு மட்டுமல்லாது ‘இந்த வெயிலால் வெப்ப பக்கவாத விளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

 மேலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப பக்கவாத விளைவுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் மக்கள் நிறைய நீர் பருகி உடலின் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெரியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை