கோட் சூட் அரசியல்?

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் அறிவுரை:-
கோட் சூட் போட்ட தமிழக முதலமைச்சர் என்ற பெயரை விஜய் பெற்றிருக்கிறார். இது அரசியலுக்கு புதியது. அதேபோல் ஆட்சியும் மக்களுக்கு பலன் தரக் கூடிய வகையில் புதிதாக இருக்க வேண்டும் என்கின்றனர்.கடந்த 10ஆம் தேதி விஜய் உடன் 10 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. அடுத்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற காத்திருக்கிறது. இவர்களுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளது.
மேலும் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏக்கள் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கொண்டு தவெகவிற்கு ஆதரவாக நிற்கின்றனர்.
இவர்களும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளனர். 8, 6, 5 என எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும் இடம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால் மக்கள் பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன். ஒரு Fresh Government, Corruption Free Government கொடுக்கப் போகிறேன் என்று தேர்தல் பரப்புரையின் போதும், முதலமைச்சராக பதவியேற்ற போதும் விஜய் கூறியிருந்தார்.அப்படி இருக்கையில் அதிமுகவில் இருந்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அவர்கள் மீதான ஊழல் வழக்குகளை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஒருவேளை விஜய் அப்படி செய்தால் ஊழலற்ற நிர்வாகம் என்ற பிம்பம் உடைபடும். மக்கள் மன்றத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுவார்.
விஜய் சீட் பேர அரசியல் செய்ய மாட்டார்! மக்கள் நினைப்பது இது தான்_
இந்த சூழலில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் STORYBOARD பகுதியில் செய்தி ஆசிரியர் அருண் ராம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
பீஸ்ட் மாதிரி கோட்-சூட் போட்டு கொண்டது நன்றாக தான் இருக்கிறது. அதேபோல் கவர்ச்சிகரமான முதலமைச்சராகவும் இருந்து காட்டுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் லஞ்ச, ஊழலை பார்க்கின்றனர். பஞ்சாயத்து அலுவலகங்கள், விஏஓ அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பதிவுத்துறை, காவல் நிலையங்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
இங்கெல்லாம் பிறப்பு சான்றிதழ், பட்டா, புதிய மின் இணைப்பு, நலத்திட்ட உதவி போன்றவற்றுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இங்கிருந்து தான் ஊழலற்ற நிர்வாகத்தை விஜய் தொடங்க வேண்டியுள்ளது.
அதாவது அடிமட்ட அரசு நிர்வாகத்தில் இருந்து எனச் சொல்லலாம். அரசின் ஒவ்வொரு சேவை விண்ணப்பமும் ஆன்லைன் மயமாக்கம் செய்யப்பட வேண்டும். அவற்றை எளிதில் டிராக் செய்ய வேண்டும்.
ஏன் தாமதமாகிறது, எந்த அதிகாரி தாமதம் செய்கிறார் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஒருவேளை தாமதம் ஆனால் அடுத்து யாரை அணுக வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் கோரிக்கைகள், மனுக்கள் மீது எத்தனை நாட்களில் தீர்வு காணப்படும் என்பதை ஒட்டி வைக்க வேண்டும்.
குறைகளை தீர்க்க தனியாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும். பெயர் குறிப்பிடாமல் தங்களின் அனுபவங்களை, குறைகளை பகிர்ந்து கொள்ளும் வசதியை கொண்டு வருவது அவசியம். அப்போது தான் பலரும் வெளிப்படையாக குறைகளை, பிரச்சினைகளை பதிவு செய்வர்.
இதை முழுமையாக படித்து தீர்வு காண சரியான அதிகாரிகளும் இருக்க வேண்டும். எந்த ஒரு அதிகாரியும் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டிற்கு ஆளானால் அவர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
மேலும் அரசு திட்டங்களை டெண்டர்கள் எடுக்கும் ஒப்பந்ததாரர்களும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். பல்வேறு உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் டெண்டர் எடுக்கின்றன. இவர்கள் அரசு துறையில் இருப்பவர்களிடம் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
அதன்பிறகு தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படும் லஞ்சம் ஒவ்வொரு அலுவலகத்திலும் பல்வேறு படிநிலைகளில் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த டெண்டர்கள் தொடர்பாக சாதாரண மக்களுக்கு எதுவும் தெரிவதில்லை. ஆனால் அரசியல் ரீதியாக சில திரைமறைவு வேலைகள் நடப்பதாக புரிந்து கொள்கின்றனர்.
எனவே டெண்டர் தொடர்பான அனைத்து விவரங்களும் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும். யாருக்கு செல்கிறது, எவ்வளவு தொகை, எவ்வளவு நாட்களில் முடிக்க வேண்டும், தற்போதைய நிலை என்ன போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால் த.வெ.கழக ச.ம.உறுப்பினர்கள் பலர் காண்டிராக்டர்கள் ,பைனான்சியர்கள்,கட்டப்பஞ்சாயத்தினர்,முன்னாள் அதிமுக ஊழல் அமைச்சர்கள் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சி கடினம்.
ஆட்சியமைப்பதற்குள்ளே சி.வி.சண்கம்,திருமாவளவன் வீட்டுக்கு குதிரை பேரம் விவகாரத்தில் விஜயே சோபாவுடன் போய் #சோபா மாடல் ஆட்சி என முறைகேட்டில் சிக்கிக் கொண்டார்.
மு.க.ஸ்டாலின் சொன்ன ஆறுமாத அவகாசம் கூட இல்லாமல். பத்துநாட்களிலேயே சோபா மாடல் ஆகிவிட்டது.
வெள்ளையாக இருப்பவன்(கோட் போட்டவன் )பொய் சொல்லமாட்டான்?
பார்ப்போம்?