குற்றத்தை மறைக்க


தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல்

கடந்த பத்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது.


பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.4.78உம், டீசல் லிட்டருக்கு ரூ.4.84உம் உயர்த்தப்பட்டது.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.77 அளவுக்கும், டீசல் ரூ.97.55 ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எரிபொருள் உயர்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குத லாகும்.


ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்னமும் விலை உயரக் கூடும் என்றே அபாயச் சங்கு ஊதுகின்றனர்.


போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள தால், பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும் ஆபத்து எழுந்துள்ளது.


இந்த விலை உயர்வுக்கு போர்ச்சூழலை காரணம் காட்டி ஒன்றிய ஆட்சியாளர்கள் நியாயப்படுத்து கின்றனர். ஆனால் சட்டமன்றத் தேர்தல் காலத்தில் விலை உயர்த்தப்படவில்லை. ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள தால் கல்வி சார்ந்த செலவுகளை சமாளிக்க முடி யாமல் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.


சமையல் எரிவாயு உருளைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு, மாதாமாதம் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. வீட்டு உப யோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ரூ.954 ஆக உயர்ந்துள்ளது.


வணிகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.3,237 அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் குடும்ப சமையல் செலவு அதிகரித்துள்ளதால் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலராக சரிந்துள் ளது.


ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரம் என்று கூறி தொடர்ந்து விலையை உயர்த்தி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது ஒன்றிய அரசு.

இதன் மூலம் தன்னுடைய கார்ப்பரேட் கூட்டாளிக ளின் கஜானாவை நிரப்ப ஒன்றிய அரசு துணை போகிறது.


இந்த லட்சணத்தில் அமெரிக்கவுடன் செய்து கொள்ளப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தத் தின் மூலம் அந்த நாட்டிலிருந்து மேலும் எண் ணெய் இறக்குமதியை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.


மக்கள் மீதான இந்த துல்லியத் தாக்குதல் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங் களை நிலைகுலையச் செய்யும்.



குற்­றத்தை மறைக்­கும்  ஆட்சி!

போலீஸ் ராஜ்­யம் நடத்­தத் தொடங்கி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்.

‘கடைக்­குப் போகி­றேன்’ என்று ( 21 ஆம் தேதி) அனுப்பி வைக்­கப்­பட்ட சிறுமி அவர். காண­வில்லை.

அரை­மணி நேரத்­தில் அந்­தக் குடும்­பத்­தி­னர் தேடு­த­லைத் தொடங்கி காவல்­து­றைக்­குப் புகார் கொடுக்­கி­றார்­கள்.

 22 ஆம் தேதி இரவு கண்­ணம்­பா­ளை­யம் குளக்­க­ரை­யோ­ரம் உள்ள முட்­பு­த­ரில் சிறு­மி­யின் உடல் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அரு­கில் இருந்த தென்­னந்­தோப்­பில் வைத்து கொலை செய்­யப்­பட்­டுள்­ளார் சிறுமி.

இதை அறிந்து ஆத்­தி­ரம் அடைந்த உற­வி­னர்­கள் சிங்­கா­நல்­லூர் மருத்­து­வ­மனை முன்­பும், காவல் நிலை­யம் முன்­பும் முற்­று­கைப் போராட்­டம் நடத்­தி­னார்­கள். 

சாலை மறி­யல் செய்­தார்­கள். சிறு­மி­யின் உடலை வாங்க மாட்­டோம் என்று பெற்­றோ­ரும் உற­வி­னர்­க­ளும் சொன்­னார்­கள். இப்­படி பொது­வெ­ளி­யில் வெளிச்­சம் ஆன­பி­ற­கு­தான் காவல் துறை செயல்­பட்­டுள்­ளது. 

குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள். இந்­தக் குற்­ற­வா­ளி­க­ளும் சிறு­மி­யைத் தேடு­வது போல நாட­கம் ஆடி இருக்­கி­றார்­கள். பின்­னர்­தான் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.


பெற்­றோ­ருக்­குப் போன் செய்த காவல் துறை அதி­கா­ரி­கள், ‘சிறுமி உயி­ரோ­டு­தான் இருக்­கி­றார்’ என்று முத­லில் சொல்லி இருக்­கி­றார்­கள். பின்­னர், ‘சிறுமி இறந்து விட்­டார்’ என்று சொல்லி இருக்­கி­றார்­கள். காவல் துறை­யின் முதல் தவறு இது.


இதன் உண்மை நிலையை விளக்க வேண்­டும் என்று பெற்­றோ­ரும் உற­வி­னர்­க­ளும் சாலை மறி­யல் செய்­தார்­கள். சிறு­மி­யின் உடலை வாங்க மாட்­டோம் என்று சொன்­னார்­கள்.

அதன்­பி­ற­கும் காவல் துறை அதி­கா­ரி­கள் தந்­தி­ர­மாக நடந்­துள்­ளார்­கள்.

சிறு­மி­யின் தந்­தையை மட்­டும் தனி­யாக அழைத்­துச் சென்ற போலீ­சார் அவ­ரி­டம் மட்­டும் பேசி இருக்­கி­றார்­கள். “சிறு­மி­யின் உடலை மருத்­து­வ­ம­னை­யின் பின் வாசல் வழி­யாக எங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் ஊருக்கு அனுப்பி வைத்­துள்­ள­னர். 

சிறு­மி­யின் அப்­பாவை தனி­யாக அழைத்­துப் பேசி, தாய்க்­குக் கூட தெரி­யா­மல் உடலை அனுப்பி வைத்­துள்­ளார்­கள்” என்று சிறு­மி­யின் சித்தி பேட்டி அளித்­துள்­ளார்.


தட­யம் கிடைத்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக சட­லத்தை எரித்­து­விட்­ட­தாக தாயார் குடும்­பத்­தி­னர் குற்­றச்­சாட்டு வைக்­கி­றார்­கள். தனக்­குத் தெரி­யா­மல் தனது குழந்­தை­யின் உடலை எரித்­து­விட்­ட­தாக சிறு­மி­யின் தாயார் கத­று­ கி­றார்.


“உடற்­கூ­றாய்வு முடிந்த பிறகு எனது மகளை என் கண்­ணில் காட்­ட­வில்லை. பின் வாசல் வழி­யாக ஆம்­பு­லன்ஸ் மூலம் சொந்த ஊருக்­குக் கொண்டு சென்று விட்­ட­னர். வாட­கைக்கு கார் பிடித்து நாங்­கள் மேட்­டூர் சென்­றோம். எனது சம்­ம­தம் இல்­லா­மல் என் குழந்­தை­யின் உடலை எரித்­து­ விட்­டார்­கள். 

நான் குழந்­தை­யின் முகத்­தைக் கூட பார்க்­க­வில்லை. சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கக் கூடாது என்­ப­தால் எரித்­து­விட்­டார்­கள். நான் கையெ­ழுத்­துப் போட மாட்­டேன் என்று சொன்ன பிறகு என் கண­வ­ரி­டம் கையெ­ழுத்து வாங்கி உடலை ஒப்­ப­டைத்­து­விட்­டார்­கள். எதற்­காக போலீ­ஸார் இப்­ப­டிச் செய்­தார்­கள் எனத் தெரி­ய­வில்லை.

 நாங்­கள் மேட்­டூர் சென்­ற­போது என்னை அடிக்க வந்­த­னர். எங்­க­ளுக்கு பலர் மீதும் சந்­தே­கம் உள்­ளது” என்று சொல்லி இருக்­கி­றார் சிறு­மி­யின் தாய்.

‘’தக­வல் அறிந்து நாங்­கள் மேட்­டூர் சென்ற போது குழந்­தை­யின் சட­லம் எரிக்­கப்­பட்டு இருந்­தது. அனைத்­துச் சடங்­கு­க­ளை­யும் எங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் முடித்து விட்­டார்­கள்.

 சிறுமி கொலை தொடர்­பாக பல்­வேறு சந்­தே­கங்­கள் இருக்­கி­றது. நீதி­மன்­றத்தை நாட இருக்­கி­றோம். கோர்ட் உத்­த­ர­வுப்­படி உட­லைத் தோண்டி எடுக்­கக் கூடாது என்­ப­தற்­காக எரித்­துள்­ளார்­கள்” என்று சிறு­மி­யின் சித்தி பேட்டி அளித்­துள்­ளார்.

எதற்­காக போலீஸ் இப்­படி நடந்து கொள்ள வேண்­டும்? பாதிக்­கப்­பட்­ட­வர் பக்­கம் நிற்­பது தானே அரசு? இப்­ப­டிச் சொல்லி ஏமாற்­றித்­தானே வாக்­கு­ க­ளைப் பெற்­றார் விஜய்?

 சிறு­மி­யின் அம்­மா­வைப் பார்த்து, ‘இவரை மன­நல மருத்­து­வ­ம­னை­யில் சேருங்­கள்’ என்று ஒரு போலீஸ் அதி­காரி சொல்லி இருக்­கி­றார். இது­தான் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு ஆறு­த­லாக இருக்­கும் முறையா? 

பேட்­டிக்கு முன்­ன­தாக போலீஸ் அதி­கா­ரி­கள் சிரித்­துக் கொண்­டி­ருந்த காட்­சியை ஊட­கங்­க­ளில் பார்த்­தோம்.

சிறு­மிக்கு நடந்த கொடூ­ரம் குறித்து கேட்­ட­போது, தொழில் துறை அமைச்­சர் கீர்த்­தனா சிரிக்­கி­றார். இது­தான் விஜய் ஆட்­சி­யின் லட்­ச­ணம்.

இது உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் நடந்த ஒரு சம்­ப­வத்தை நினை­வூட்­டு­கி­றது. 2020 அக்­டோ­பர் மாதம் உத்­தி­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் ஒரு அப்­பா­விப் பெண், நான்கு பேரால் பாலி­யல் வன்­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்­டார்.

 இறந்த அந்த பெண்­ணின் உடலை அவர்­க­ளது குடும்­பத்­துக்­குக் கூட காட்­டா­மல், தரா­மல் போலீஸே எரித்­து­விட்­டார்­கள். அந்­தப்

பெண்­ணின் தந்­தையை கடத்தி வைத்­து­விட்டு இதனை செய்­தி­ருக்­கி­றார்­கள்.

 கொலை செய்­யப்­பட்ட பெண்­ணின் குடும்­பத்தை யாரும் பார்க்க அனு­ம­திக்­க­வில்லை. அந்­தப் பெண்­ணின் குடும்­பத்தை வீட்­டுச் சிறை­யில் வைத்­தார்­கள். ஹத்­ராஸ் பாலி­யல் வன்­கொ­டுமை குறித்து செய்தி

சேக­ரிக்­கச் சென்ற கேரள பத்­தி­ரிக்­கை­யா­ளர் சித்­திக் காப்­பான் கைது செய்­யப்­பட்­டார். இப்­படி ஒரு காட்­சி­யைத் தான் தமிழ்­நாட்­டி­லுமஅரங்­கேற்றி வரு­கி­றார்  விஜய்!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை