அவர்கள் நீக்கும் முன்பே...!

அவர்கள் நீக்கும் முன்பே...!

எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் இன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான தங்களது ராஜினாமாவர்கள் கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிராபகரிடம் கொடுத்துள்ளனர். பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்கு சென்று தவெகவில் இணைந்துள்ளனர்.

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டமுடியாமல் போய்விட்டது. 

இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மே 2026 அன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சியான திமுகவுடன் சேர்ந்து தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் 58 பேர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் 171 உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்தனர். 

அதில், 144 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் (எடப்பாடி தரப்பு), 5 பேர் நடுநிலையாகவும் (பா.ஜ.க + பா.ம.க) வாக்களித்தனர். இதன் மூலமாக தவெக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டது.

இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவளித்த 144 பேரில் 25 பேர் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களாவர். ?இதற்கு மத்தியில், அதிமுக கொறடாவை மீறி செயல்பட்டதால், 13 மே 2026 அன்று எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து பதவி நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதன் மூலமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

தவெகவிற்கு ஆதரவு அளித்து இருந்தாலும், அதிமுகவை சார்ந்த எந்தவொரு எம்.எல்.ஏக்களுக்கும் தவெக அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் ஆதரவு மட்டுமே வழங்கினோம் அமைச்சரவையில் இடம் கேட்கவில்லையே என்று எஸ்.பி.வேலுமணி தரப்பு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்துள்ளன. 

இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25-லிருந்து 20 ஆக குறைந்ததோடு, எடப்பாடி பழனிசாமி அணியின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22-லிருந்து 27 ஆக அதிகரித்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

அதன்படி, மரகதம் குமரவேல் (மதுராங்கம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் இன்றைய தினம் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிராபகரிடம் கொடுத்துள்ளனர்.

அங்கிருந்து ராஜினாமா கையோடு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்று தங்களை இணைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

 இதையடுத்து வேலுமணி தரப்பின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக குறைந்துள்ளது. 

3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100% குதிரை பேரம் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்..

 இதுகுறித்து பேசிய அவர் “ அதிமுக எம்.எல்.ஏக்கள் அளித்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் முன்னரே 3 பேரும் அவசர அவசமாக தவெகவில் இணைந்துள்ளனர்.

. ராஜினாமா செய்த கையோடு உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்திக்கின்றனர்.. மின்னல் வேகத்தில் தவெக அடையாள அட்டையை கொடுப்பதும் ஏற்கனவே திட்டமிட்டவை..பொதுவாக எம்.எல்.ஏ ராஜினாமா செய்யும் போது, சபாநாயகர் பரிசீலனை செய்ய வேண்டும்.. அதை செய்யாமல் உடனடியாக ஏற்க வேண்டிய அவசியம் என்ன..? தவெக குதிரை பேரத்தை நடத்தி இருக்கிறது

.. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.. ஏற்கனவே அதிமுகவில் இருந்து கொண்டு தவெகவுக்கு ஆதரவளித்ததே தவறு. 

அதற்காக நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம்.. எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர் எந்த பரிசீலனையும் செய்யாமல் ராஜினாமாக்களை ஏற்றது தான் குதிரை பேரம்..

தூய சக்தி என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த விஜய், வேறொரு கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை திருடி செல்வது நியாமா என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்..” என்று தெரிவித்தார்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை