முதல்வர் ஸ்டாலின்!

மக்களாட்சி மாண்பைக் காப்பாற்றுங்கள்!
தேர்தல் நடைமுறையின் புனிதத்தை காத்து, ஜனநாயக அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு திமுக வலியுறுத்தி உள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில் கூறி இருப்பதாவது;-
"2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாஜகவும், அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இத்தகைய சீர்குலைவு செயல்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட பிற பதற்றமான இடங்களுக்கும் பரவக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகிறோம்.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது.
இது, ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை செயல்படுத்துவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இத்தகைய சூழ்நிலையில், எவ்விதமான விரும்பத்தகாத சம்பவங்களும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பு படையினரை நியமித்தல் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளுடன் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட உடனடி மற்றும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தங்கள் அலுவலகம் மேற்கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், 4ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அமைதி, பொது ஒழுங்கு மற்றும் வாக்கு எண்ணும் நடைமுறையின் நம்பகத்தன்மை ஆகியவை முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் உரிய நேரத்திலான தலையீடு, தேர்தல் நடைமுறையின் புனிதத்தைக் காத்து, ஜனநாயக அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது பதினேழாவது சட்டமன்றத்துக்கானது.
முதல் பொதுத் தேர்தலான 1952 முதல் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தல் வரையிலான வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாமா… வென்ற கட்சிகள், தோல்வியடைந்தவர்கள், கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளின் அரசியல் பயணங்கள் குறித்தெல்லாம் கொஞ்சம் விரிவாகவே அலசலாம்.
“தேர்தல் அரசியல் வேண்டாம்’ என்ற தந்தை பெரியாரின் கருத்தில் முரண்பட்ட அண்ணா 1949ல் திமுகவைத் தொடங்குகிறார்.
அடுத்த மூன்றாண்டுகளில் அதாவது 1952ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல். அப்போது இப்போது போல் அல்லாமல் சென்னை மாகாணமாக இருந்தது தமிழ்நாடு. முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பதவி வகித்து வந்த நிலையில் நடந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும் கிடைக்காது என்கிற குழப்பமான ஒரு மனநிலையில் தேர்தலில் போட்டியில்லை என்கிற முடிவை அண்ணா எடுத்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றது ராஜாஜி முதல்வரானார். அடுத்த சில வருடங்களில் அவர் ராஜினாமா செய்ய காமராஜர் முதல்வரானார்.
1957 தேர்தல். முதல் முறையாகக் களம் கண்ட திமுகவுக்கு 15 இடங்கள் கிடைக்க, கட்சி தொடங்கி எட்டு ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்பி கணக்கைத் தொடங்கியது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெல்ல காமராஜர் மீண்டும் முதல்வரானார்.
1962 ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டசபைக்கான தேர்தலில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர சட்டசபையில் எதிர்க்கட்சி ஆனது.
1967 தேர்தல் தமிழக வரலாற்றில் திருப்புமுனையை உண்டாக்கிய தேர்தல். தேசியக் கட்சியான காங்கிரஸ் வசமிருந்த ஆட்சியை திமுக கைப்பற்றியது. 174 இடங்களில் போட்டியிட்டு 137 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் முதல் முறையாக அரியணையில் அமர்ந்தது. அண்ணா முதல்வரானார்.ஆனால், இரண்டு ஆண்டுகளில் அதாவது 1969 ல் அவர் திடீரென மறைந்ததையடுத்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.கருணாநிதி.
ஐந்தாவது சட்டசபைக்கான தேர்தல் 1972 ல் நடக்க வேண்டியது. ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கருணாநிதி அந்தக் கட்சியின் வழியிலேயே தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்பினார்.
வங்கதேசப் போரில் வென்ற இந்திரா அந்த வெற்றியை அறுவடை செய்ய பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அதே வழியில் தமிழகத்திலும் பதவிக்காலம் முடிய ஓராண்டு இருந்த நிலையில், சட்டசபை கலைக்கப்பட்டது. எனவே 71ல்நடந்தது.
இந்தத் தேர்தலில் 184 இடங்களில் வென்றது திமுக. முதலமைச்சர் வேட்பாளர் எனச் சொல்லி கருணாநிதி முதல்வரான முதல் தேர்தல் இது. தொடர்ச்சியாக திமுக வென்ற ஒரே தேர்தலும் இதுதான். இருந்தாலும் இந்த ஆட்சி பதவிக்காலம் முடிவடைவதற்கு சிலமாதங்களுக்கு முன்பாக மத்திய அரசால் கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1972ல் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு அதிமுக உதயமாகி இருந்த பின்னணியில் 1977ம் ஆண்டு நடந்தது ஆறாவது சட்டசபைக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் 130 இடங்களில் வென்ற அதிமுக ஆட்சி அமைத்தது. முதல் முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.
1977 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த அதிமுக அரசை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டி மூன்றாண்டுகளில் கலைத்ததால் 1980 ல் அடுத்த தேர்தல் நடந்தது. 129 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர்.
1984 ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி பிரதமராகப் பதவி ஏற்றார். அவர் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைத்து உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த தீர்மானித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்த எம்.ஜி.ஆர், இந்திரா காந்தி கொலையின் தாக்கத்தால் அனுதாப அலை வீசலாமெனக் கணித்து தமிழக சட்டசபையையும் பதவிக் காலம் முடியும் முன்பே கலைத்ததால் 1985க்குப் பதில் 84ல் தேர்தல் நடந்தது. 135 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது அதிமுக.
ஆனால் 1987ல் எம்.ஜி.ஆர் மரணமடைய அதிமுக பிளவுபட்டது. ஒருமாத காலம் முதல்வராகப் பதவி வகித்த ஜானகி ராமச்சந்திரன் சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். இருப்பினும் இந்த அரசும் பதவிக்காலம் முடியும் முன்பே கலைக்கப்பட்டு சிலமாதங்கள் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.
1989 தேர்தல். அதிமுக ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாகப் போட்டியிட்டதால் ஆட்சி மீண்டும் அறிவாலயம் வசம் போனது. 1971க்குப் பிறகு அதாவது மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்தாண்டுதான் ஆட்சிக்கு வந்தது திமுக.
இருந்த போதும் 1991ல் அப்போதைய பிரதமர் சந்திரசேகரால் இந்த ஆட்சியும் பதவிக் காலம் முடியும் முன்பே கலைக்கப் பட்டது.
அதிமுக காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட, அது தேர்தலில் எதிரொலித்தது.
இரண்டே இரண்டு இடங்களில் வென்றது திமுக. அதிமுகவை ஏற்கனவே ஒன்று சேர்த்திருந்த ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானார்.
ஜெ. எதிர்ப்பு அலை தீவிரமாக வீசியது. அதைக் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ஜி. கே. மூப்பனார் வெளியேறி தமாகாவைத் தொடங்கி திமுகவுடன் சேர்ந்தார்.
ரஜினியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் தர, அதிமுக படுதோல்வியடைய மீண்டும் ஆட்சி அமைத்தது திமுக.
2001 தேர்தல். 1996ம் ஆண்டு அதிமுகவைப் படுதோல்வியடையச் செய்த தமிழக மக்கள் ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
நாயகன் படத்தில் கமல் தன் பேரனிடம் சொல்வாரே ‘தெரியலையேப்பா’ என அது போல கருணாநிதியுமே அன்று காரணம் கேட்ட போது அப்படிதான் அங்கலாய்த்தார்.
இந்தத் தேர்தலில் புதிய வரவாக தேமுதிக வந்திருந்தது. தனித்து களம் கண்டது அந்தக் கட்சி.
ஆட்சியை அதிமுக இழக்க திமுகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காதபடி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவிலேயே ஆட்சியை நகர்த்தியது.
2011 தேர்தலில் தேமுதிகவை தன் பக்கம் இழுத்த ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தார். திமுக மூன்றாவது இடத்துக்குப் போனது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் தேமுதிக –அதிமுக இடையே பிரச்னை உருவாகியது.
அடுத்து வந்த 2016 தேர்தலில் விஜயகாந்த் தனி அணியாக களம் காண இந்தக் களமும் அதிமுவுக்கே சாதகமானது. தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக.
இந்நிலையில் 2016 ல் ஜெ மறைய தொடர்ந்து கட்சி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. மீதமிருந்த ஆட்சிக் காலத்தை அவர் முதல்வராக இருந்து வழி நடத்தினார்.
2021 தேர்தலில் கலைஞர் இல்லாத திமுகவும் ஜெ. இல்லாத அதிமுகவும் எதிர்கொண்டன. பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக. அதிமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது!
தென்னிந்திய வரலாற்றின் புதிய ஆதாரம்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட மண் அரிப்பு, மிகப்பெரிய வரலாற்று ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளது.
சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான பண்டைய புதைபடிம படுகை இங்கே கண்டறியப்பட்டுள்ளது. இத்தளம் 'ஹோலோசீன்' (Holocene Epoch) காலத்தைச் சேர்ந்தது என்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தக் காலம், நவீன சுற்றுச்சூழல் மற்றும் ஆரம்பகால மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகும்.
உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் இப்பகுதியில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் மூலம் சில முக்கிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படுகையில் மெல்லுடலிகள் (Molluscs), நத்தையினங்கள் (Gastropods), ஈரோடுடைய சிப்பிகள் (Bivalves) போன்ற கடல்சார் முதுகெலும்பற்ற உயிரினங்களின் படிமங்கள் நிறைந்துள்ளன.
இவை 'இயற்கை ஆவணக்காப்பகங்களாக' செயல்படுகின்றன. கடந்த காலத்தில் தென்னிந்தியாவின் பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட மாறுபாடுகள் எவ்வாறு இருந்தன என்பதை ஆய்வு செய்ய இவை உதவும்.
குவாட்டர்னரி (Quaternary) காலப்பகுதியானது கடந்த 2.6 மில்லியன் ஆண்டுகளை உள்ளடக்கியது. தூத்துக்குடி தளமானது இக்காலகட்டத்தின் வண்டல் படிவு முறைகளை (Sedimentology) ஆராய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பாறை அடுக்குகளில் காணப்படும் குறுக்கு-அடுக்குகள் (Cross-stratification), உயிரினங்கள் வளை தோண்டியதற்கான தடயங்கள் (Bioturbation) மூலம் பண்டைய கடற்கரை அமைப்புகளை புவியியலாளர்கள் மறுசீரமைக்க முயல்கின்றனர்.
இப்பகுதி எப்போதுமே காடாக இருந்ததா அல்லது ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததா என்பதை இந்தப் படிமங்களின் கலவையை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய உள்ளனர்.
ஹோலோசீன் காலம் என்பது கற்காலத்திற்குப் பிந்தைய மனித வரலாற்றோடு ஒத்துப்போகும் ஒன்றாகும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மாறுபாடுகள் பண்டைய இந்திய நாகரிகங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் எவ்வாறு காரணமாக இருந்தன என்பதை இந்த ஆய்வுகள் விளக்கும்.
தப்பித்துக் அரிய படிமங்கள் இயற்கை அரிப்பினால் (மழை, காற்று) சிதையும் அபாயத்தில் உள்ளன. எனவே, முறையான ஆய்வுகள் முடியும் வரை இவற்றை உடனடியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியின் இந்த கண்டுபிடிப்பு, தென்னிந்தியாவின் பண்டைய வரலாறு மற்றும் காலநிலை மாற்றங்களை அறிந்துகொள்ள ஒரு புதிய சாளரத்தை த்திறந்து வைத்துள்ளது.







