என்னவெல்லாம் சொன்னீர்கள்.செய்வீர்களா?.

நீட் தேர்வே ஒருகல்வி கார்பரேட்கள் மோசடிதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் காட்டம்.எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் தவெகவுக்கு ஆதரவு. நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு.அதிமுக கொறடாவை மீறி வாக்களித்தால் சட்ட நடவடிக்கை என எடப்பாடி தரப்பு எச்சரிக்கை. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கூடும் என இன்பதுரை அதிரடி.நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தை சேர்ந்த மருத்துவ மாணவரும் சிக்கினார். டெலிகிராம் வாயிலாக நீட் வினாத்தாளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக வாக்குமூலம்.

தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு பிரதமர் கூறியபின்னர் நேற்று(செவ்வாய்க்கிழமை) வெள்ளி விலை ரூ.12,000 அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கம் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி வரியும் 15% உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் வெள்ளியின் விலையும் உயரும் எனத் தெரிகிறது.











அரசவை சோதிடர் அ றிவுரையை கேளுங்க?

என்ன பேச்செல்லாம் பேசினார் விஜய்?

தி.மு.க. கூட்­ட­ணி­யைக் கல்­லாப்­பெட்டி கூட்­டணி என்­றார் விஜய். அந்­தக் கட்­சி­கள் தய­வோ­டு­தான் ஆட்சி அமைத்­துள்­ளார் விஜய்.

அறி­வா­ல­யம் வாசல் வழி­யாக நடந்து போனாலே அந்­தக் கட்­சி­களை அழைத்து உள்ளே போட்டு சீட்­டுக் கொடுத்து விடு­வார்­கள் என்று சொன்­னார் விஜய். அவர்­கள் தய­வில்­தான் இப்­போது முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் உட்­கார்ந்து இருக்­கி­றார் விஜய்.

கல்­லாப்­பெட்டி கட்­சி­க­ளின் அலு­வ­ல­கத்­துக்கு விஜய் ஏன் போனார்? ஏன் முகத்தை தொங்­கப் போட்­டுச் சென்­றார்? முகத்தை தொங்­கப் போட்டு உட்­கார்ந்து இருந்­தார்?

காங்­கி­ரஸ் கட்­சி­யைப் பற்றி என்ன சொன்­னார் விஜய்? ‘சில பல கோடி­க­ளைக் கொடுத்து தமிழ்­நாடு காங்­கி­ரஸை, ஸ்டாலின் தனது பைக்­குள் போட்­டுக்­கிட்­டார்’ என்று பேசி­னார். இன்று சில பல கோடி­கள் கொடுத்­துத்­தான் காங்­கி­ரஸ், ஆத­ர­வைப் பெற்­றாரா விஜய்?

பிர­வீன் சக்­க­ர­வர்த்தி போன்ற விஷப்­பூச்­சி­கள் நிரம்­பிய காங்­கி­ரஸ் கட்­சிக்கு விஜய் என்ன கொடுத்­தார்? மூன்­றா­வது நாளே அந்­தக் கட்சி பனை­யூ­ரில் பெட்­டிப் பாம்­பாக அடங்­கி­ய­தற்கு விஜய் என்ன

கொடுத்­தார்?

‘சில பல கோடி­கள் கொடுத்து காங்­கி­ரஸ் கட்­சியை, ஸ்டாலின் தனது பைக்­குள் போட்­டுக்­கிட்­டார்’ என்று சொன்­னதை யாரும்

ராகு­லுக்கு மொழி­பெ­யர்த்­துச் சொல்­ல­வில்­லையா? அவ­ருக்கு ரோஷம் வர­வில்­லையா? ஆச்­சர்­ய­மாக இருக்­கி­றதே?

த.வெ.க. ஆட்சி அமைக்­கும் அள­வுக்கு பெரும்­பான்­மையை

பெற்­றுள்­ளதா? இல்­லையே? ரோஷக்­கார விஜய், பத­விக்கு வந்­தி­ருக்­கக் கூடாதே? பதவி ஏற்­றி­ருக்­கக் கூடாதே?

திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்குக் கூட்­ட­ணி­யில் வெற்றி பெற்ற இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி, அகில இந்­திய முஸ்­லீம் லீக் கட்சி ஆகிய கட்­சி­க­ளின் தய­வோ­டு­தான் விஜய் ஆட்சி அமைத்­துள்­ளார்.

அந்­தக் கட்­சி­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கைகளை வாங்­கிப் பாருங்­கள் விஜய். உங்­களை ஆத­ரித்து, உங்­கள் தலை­மையை ஏற்­றுக் கொண்டு அவர்­கள் உங்­கள் ஆட்­சியை ஆத­ரிக்­க­வில்லை. 

தமிழ்­நாட்­டில் இன்­னொரு தேர்­தல் வரக்­கூ­டாது, ஆளு­நர் ஆட்சி வரக்­கூடாது, குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வந்­து­வி­டக் கூடாது என்­ப­தால் த.வெ.க. ஆட்சி அமைக்க ஆத­ரவு என்­று­தான் சொல்லி இருக்­கி­றார்­கள். 

விஜய் மீது நம்­பிக்கை வைத்து அவர்­கள் ஆத­ரிக்­க­வில்லை. இதை விஜய் முத­லில் உணர வேண்­டும்.

‘‘தமிழ்­நாடு அர­சி­ய­லில் நீண்ட கால­மா­கவே தி.மு.க. கூட்­ட­ணி ­யில் இருந்து வரும் இந்­திய யூனி­யன் முஸ்­லீம் லீக் அதே நிலை­யில் தொட­ரும்” என்று தான் அய்யா காதர் மொய்­தீன் அவர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். ‘‘தி.மு.க. கூட்­ட­ணி­யில்­தான் விடு­தலைச் சிறுத்­தை ­கள் நீடிக்­கி­றது. நெருக்­க­டி­யான சூழ­லில் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்­சி­யைத் தடுக்­கவே த.வெ.க.வுக்கு ஆத­ரவு தர முன்­வந்­தோம்” என்று சொல்லி இருக்­கி­றார் தொல்.திரு­மா­வ­ள­வன்.

“தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளுக்­கா­க­வும் மக்­கள் நல­னுக்­கா­க­வும் தொடர்ந்து தி.மு.க. கூட்­ட­ணி­யு­டன் கை கோத்­துப் போரா­டு­வோம்’’ என்று இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர்

வீர­பாண்­டி­ய­னும், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநி­லச் செய­லா­ளர் சண்­மு­க­மும் அறி­வித்­துள்­ளார்­கள். எனவே தி.மு.க. கூட்­ட­ணி­யில் தொட­ரும் கட்­சி­க­ளின் ஆத­ர­வோ­டு­தான் ஆட்சி அமைத்­துள்­ளார் விஜய். இதனை அவர் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும்.

‘’அது என்ன ஸ்டாலின் சார் கூட்­டணி பேரு? ... என்ன மக்­கள் நலக் கூட்­ட­ணியா? மொத்த பேக்­கே­ஸூம் அங்க தான இருக்­குது. ரிசல்ட் என்­னன்னு தெரிஞ்­ச­து­னால என்­னவோ அவர் அப்­ப­டியே மக்­கள் நலக் கூட்­ட­ணியா அதை மாத்­திக்­கிட்­டா­ரோன்னு தெரி­யலை. உடைஞ்ச கிளாஸை ஒட்ட வெச்­சது மாதிரி, கிழிஞ்ச துணியை தச்சு வெச்­சது மாதிரி. ஒட்­டுப் போட்ட ஒரு கூட்­டணி. அவ்­வ­ளவு தான்.” என்று பேசி­ய­வ­ரும் இதே விஜய்­தான். அவ­ரது ஆட்­சியே இன்று உடைஞ்ச கிளாஸை ஒட்ட வைத்­தது மாதி­ரி­தான் அமைந்­துள்­ளது. கிழிஞ்ச துணியை தச்சு வெச்ச மாதி­ரி­தான் இருக்­கி­றது.

இந்த உடைஞ்ச கிளா­ஸை­யா­வது ஒழுங்­காகப் பயன்­ப­டுத்­த­வும். கிழிஞ்ச துணியை வைத்­தா­வது தமிழ்­நாட்டு மானத்தைக் காப்­பாற்­ற­வும்.

பத­விக்கு வந்த பிறகு மட்­டு­மல்ல, பத­விக்கு வரு­வ­தற்கு முன், பொது­வாழ்க்­கைக்கு வரு­வ­தற்கு முன்­னும் வார்த்­தை­களை அளந்து பேச வேண்­டும். ஒரு சொல் வெல்­லும். ஒரு சொல்

கொல்­லும். தீயி­னால் சுட்ட வடு­கூட ஆறி­வி­டும். நாவி­னால் சுட்ட வடு மாறாது. ‘பல வலி­க­ளைத் தாண்டி வந்­துள்­ளேன்’ என்­கி­றார் விஜய். இல்லை, பல­ரை­யும் வலி ஏற்­ப­டுத்­தி­விட்டு வந்­தி­ருக்­கி­றார் விஜய். அவ­ரால் கரூ­ரில் பலி­யான 41 உயிர்­களை மறக்க முடி­யுமா? தமிழ்­நாட்டு வர­லாற்­றில் கருப்பு நாட்­க­ளில் ஒன்று. அந்­தக் குடும்­பத்­தி­ன­ ரைக் கூட நேரில் பார்க்­கா­மல் சென்னை ஹோட்­ட­லுக்கு வர வைத்து பார்த்த கொடூ­ரக் காட்சி, சினி­மா­வில் கூட பார்க்­கா­தது.

அர­சி­யல் என்­பது சினிமா அல்ல. கோடிக்­க­ணக்­கான மக்­களை

ஆள்­வது அல்ல அர­சி­யல். கோடிக்­க­ணக்­கான மக்­க­ளுக்­காக

வாழ்­வ­து­தான் அர­சி­யல்.

ஒரு ஹீரோ­வின் ஆட்­டத்தை மக்­கள் பார்ப்­பது சினிமா. கோடிக் கணக்­கான மக்­க­ளின் ஆட்­டத்தை ஒரு தலை­வன் பார்ப்­பது அர­சி­யல். வேடிக்கை காட்டி வாழ்ந்­து­விட முடி­யாது. வேடிக்கை பார்த்­தும்

ஆண்டு விட முடி­யாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை