அதிகாரம் பறிப்பு?
நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்தது தவெக அரசு. ஆதரவாக 144 உறுப்பினர்களும், எதிராக 22 பேரும் வாக்கு.

கட்சியில் இருந்து தங்களை நீக்க பழனிசாமிக்கு அதிகாரம் இல்லையென சி.வி.சண்முகம் தரப்பு விளக்கம். சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கவும் வலியுறுத்தல்.
"ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள் மகளிர் உரிமை தொகைக்காக 1.31 கோடி பேர் காத்துள்ளனர்:" உதயநிதி ஸ்டாலின்.பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டதால், எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை, என்று சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சியில் இருந்து நீக்கியவர்கள் கூறினர்.
அதிமுகவில் 26 மாவட்ட செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைவரும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு தொடர் தோல்வி தான்.
அனைத்து தலைவர்கள் வீட்டிற்கும் நேரிலே சென்று பார்த்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் இன்று அப்படி இல்லை வீடு தேடி வந்தவர்களை அரை சதவீதம் ஓட்டு, ஒன்றரை சதவீதம் ஓட்டுகள் தேவையில்லை என்று கூறிவிட்டு 210 தொகுதிகளில் நான் வெற்றி பெறுவேன் என்று ஒரு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கூறினார்.
கடைசி நேரத்தில் தவெகவினர் கூட கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார்கள், நாங்களும் சென்று கூட்டணி வைத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறினோம், அப்போது எங்களை எதிர்த்து பேசிவிட்டு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
சர்வே எடுத்தாக கூறினார், அது என்ன சர்வே என்று தெரியவில்லை. சர்வே எடுத்து தன்னுடைய பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டார். 2024ல் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளோம், மூன்றாவது இடத்திற்கு சென்றோம்.
பாஜவோடு கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு டெல்லிக்கு சென்று யாரிடம் கேட்காமல் பாஜவோடு கூட்டணியை உறுதி செய்தார்.
தேமுதிகவை கூட்டணியில் இணையுங்கள் என்று கூறினோம், தலைவர்களுக்கு வாக்கு முக்கியம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் போது கொடுத்த வாக்குறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர்களுக்கு இப்போது கொடுங்கள் என்று கூறினோம், அவர் கொடுக்கவில்லை.
அதன்பிறகும் கூட்டணியில் சேர முயற்சி செய்தார்கள், ஆனால் உதாசீனப்படுத்தினார்.
அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம், என்ன நோக்கம், காரணத்திற்காக பாஜவுடன் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் செய்தது நிர்வாகிகளை நீக்கியது மட்டும் தான், எங்களை நீக்கியது செல்லாது.
எடப்பாடி சுயமாக பொதுச்செயலாளராகவில்லை, தொண்டர்களாகிய நாங்கள் தான். பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது. எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
.பணிவாரா முதல்வர்?
ஒன்றிய பாஜ அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது தேசிய கல்வி கொள்கை 2020-ன் (NEP 2020) கீழ், நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டமாகும்.
2022 செப்டம்பர் 7-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2022-23 முதல் 2026-27 வரை, 5 ஆண்டுகளுக்கு ரூ. 27,360 கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கட்டாயம் இந்தி மொழி படிக்க வேண்டும் என உத்தரவு போடுவதுதான் முரண்பட்ட விவாதத்தை எழுப்புகிறது. அந்த மாணவன் மூன்றாவது மொழியை தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்ற உரிமை இங்கு மறுக்கப்படுகிறது.
இதைத்தான், முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்த்தது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்தும் இத்திட்டத்துக்கு, ஒன்றிய அரசு 60 சதவீத நிதியை மட்டுமே செலவிடும். 40 சதவீத நிதியை இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் செலவிட வேண்டும்.
அதன்படி, பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு 2022-23 முதல் 2026-27 வரை முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.27,360 கோடி நிதியில், ரூ.18,128 கோடியை மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
மாநில அரசிடம் 40 சதவீதம் நிதியை பெற்றுக்கொண்டு, பி.எம்.ஸ்ரீ என பெயர் வைத்துக்கொண்டு, இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற உத்தரவை, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஏற்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இந்தியை திணிக்கும் இந்த திட்டத்தை ஏற்க முடியாது என முந்தைய திமுக அரசு அறிவித்தின் காரணமாக, தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஏறத்தாழ ரூ.3,500 கோடி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்தது.
மேலும் உள்ளஇந்த சூழலில், தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து, புதிய அரசு அமைய இருப்பதால், இதை பயன்படுத்திக்கொண்டு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வேண்டும் என ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி, மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதை, தமிழ்நாடு அரசு ஏற்றால், ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டியது வரும்.
இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், இந்திய மொழி ஒன்றையும் கற்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாக இருப்பதால், இது, பெரும்பாலும் சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக இருமொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே கடைப்பிடித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு என்பதால், மும்மொழி கொள்கையை எதிர்த்து வருகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் ஆபத்து விளைவிப்பதுடன், மாநில அரசின் உரிமையை பறிக்க துடிக்கும் ஒன்றிய பாஜ அரசின் மும்மொழி கொள்கை திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசின் தெளிவான நிலைப்பாடு. வெறும் அறிவிப்போடு மட்டும் நிற்காமல், அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருந்தது.
ஒன்றிய அரசு எத்தனையோ மிரட்டல், மாயாஜால வேலைகளை காட்டியபோதும், திமுக அரசு பணியவில்லை. தற்போது, இப்புதிய சவால், புதிதாக வர உள்ள அரசு முன் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த அரசு பணியுமா அல்லது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போல் துணிந்து எதிர்ப்பாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்.















