அதிர்ச்சி டெண்டர் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடத்தப்பட்ட குதிரை பேரங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விசாரணை நிறைவடையும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனு கோருகிறது. சென்னையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்; 

இதில் இந்திய ஒன்றியம், சிபிஐ மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றை அவர் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துள்ளார்.

அரசு அமைப்பது குறித்த குற்றச்சாட்டுகள்

அந்த மனுவில் “ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது; இருப்பினும், தொடக்கத்தில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் அஅக்கட்சியிடம்இருக்கவில்லை.தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தன.

மே 10-ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்; பின்னர், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

பெரும்பான்மை வாக்கெடுப்பு குறித்த சர்ச்சை

அரசு அமைக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பைச் சுற்றியே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், ‘குதிரை பேரம் மூலம் இந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்..” என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

திர்ச்சி டெண்டர் !

உல­கத்­தி­லேயே முதல் முறை­யாக த.வெ.க. ஆட்­சி­யில் காலை­யில் டெண்­டர் விடப்­பட்டு, மாலை­யில் பணி ஆணை வழங்­கப்­பட்­டது. ஊரக உள்­ளாட்சி துறை அமைச்­சர் புஸ்சி ஆனந்த் துறை­யில்­தான் இந்த அதி­ச­யம் நடந்­தது.

த.வெ.க. ஆட்­சிக்கு வந்­தால் தூய­சக்தி ஆட்சி நடை­பெ­றும் என்­றும், ஒரு துறை­யி­லும் ஒரு பைசா­கூட ஊழல் நடக்­காது, எல்லா பணி­க­ளும் மிக­வும் நேர்­மை­யாக நடக்­கும் என்று அக்­கட்­சி ­யின் தலை­வ­ரும், முதல்­வ­ரு­மாக விஜய் தேர்­தல் பிர­ச்சார பொதுக்­கூட்­டங்­க­ளில் பேசி வந்­தார். 

பொது­மக்­க­ளும் இனி தமிழ்­நாட்­டில் ஊழலே நடக்­காது, எல்­லாம் வெளிப்­ப­டை­யாக நடை­பெ­றும் என்று நம்பி வாக்­க­ளித்­த­னர். இந்த நிலை­யில்­தான் தமி­ழ­கத்­தில் ஊரக உள்­ளாட்சி துறை­யில் ஒரு உலக அதி­ச­யம் நடந்­துள்­ளது.

அதா­வது காலை­யில் டெண்­டர் வழங்­கப்­பட்டு, அன்று மாலையே டெண்­டர் ஓப்­பன் செய்­யப்­பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்­தில் பணி ஆர்­டர் வழங்­கப்­பட்ட சம்­ப­வம்­தான் இன்று தமி­ழ­கம் முழு­வ­தும் சமூ­க­வ­லை­ த­ளத்­தில் பேசும் பொரு­ளாக உரு­வா­கி­யுள்­ளது.

அதா­வது காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், காஞ்­சி­பு­ரம் பஞ்­சா­யத்து யூனி­யன் வட்­டார வளர்ச்சி அலு­வ­லர் ஒரு

இ-–டெண்­டர் வெளி­யிட்­டுள்­ளார். அதில், காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் கோனே­ரி­குப்­பம் பஞ்­சா­யத்­துக்கு உட்­பட்ட காரப்பேட்டை கிரா­மத்­தில் 30 ஆயி­ரம் லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட உயர்­நிலை நீர்­தேக்­கம் தொட்டி கட்­டு­மானப் பணிக்­காக ரூ.16 லட்­சத்து, 83 ஆயி­ரத்து 194 மதிப் ­பில் ஒப்­பந்­தம் கோரப்­பட்டு இருந்­தது.

பத்­தி­ரி­கை­யில் விளம்­ப­ரம் இல்லை!

இதில் அடுத்து நடந்­த­து­தான் சுவா­ரஸ்­யம். அதா­வது, 19ம் தேதி காலை 9 மணிக்கு டெண்­டர் கோரும் அறி­விப்பு வெளி­யா­னது. மாலை 3 மணிக்­குள் டெண்­ட­ருக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும். மாலை 4 மணிக்கு டெண்­டர் ஓப்­பன் செய்­யப்­பட்டு பணி ஆணை வழங்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. 

அதா­வது, டெண்­டர் பணி­கள் அனைத்­தும் 6 மணி நேரத்­துக்­குள் முடி­வ­டை­யும் வகை­யில் இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு இருந்­தது. இந்த டெண்­டர் தொடர்­பான தக­வல்­கள் எது­வும் பத்­தி­ரி­கை ­க­ளில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது கூடு­தல் தக­வல் ஆகும்.

இது­போன்ற டெண்­டர் தமி­ழக அர­சால் கோரப்­ப­டு­வது உல­கத்­தி­லேயே இது­தான் முதல் முறை என்று ஊரக உள்­ளாட்சி அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தற்­போது ஊரக உள்­ளாட்சித் துறை அமைச்­ச­ராக இருப்­ப­வர் புஸ்சி ஆனந்த். அவ­ரது துறை மூலமே இந்த டெண்­டர் கோரப்­பட்டு இருந்­தது.


குறிப்­பிட்டுச் சொல்ல வேண்­டும் என்­றால், புஸ்சி ஆனந்த் அமைச்­ச­ராக அதி­கா­ரப்­பூர்­வ­மாகப் பொறுப்­பேற்று 2 நாள் தான் ஆகி­றது. அதற்­குள் இப்­படி ஒரு அதி­சய டெண்­டர் வழங்கி, தமி­ழக மக்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­ யுள்­ளார்.

ஆனால், இந்த டெண்­டர் விவ­கா­ரம் பற்றி சமூ­க­வ­லை­த­ளத்­தில் தக­வல் வெளி­யாகி வைர­லா­னது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை